புதன், 5 டிசம்பர், 2012

புதிதாக தேர்வான 18,000 ஆசிரியர்களுக்கு 13ல் பணி நியமனம்

கடந்த ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, இரண்டு, டி..டி., தேர்வுகளின், இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர், 9,664 பேர், பட்டதாரி ஆசிரியர், 8,718 பேர் என, 18,382 பேர், இறுதிப் பட்டியலில் இடம் பெற்றனர். 13ம் தேதி, இவர்களுக்கான பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி..டி., தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் தேர்வும், டி..டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியரும் தேர்வு செய்யப்படுவர் என, முதலில் தமிழக அரசு அறிவித்திருந்தது. பின், சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், "டி..டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதில், தேர்ச்சி பெறுபவர்களை, பணி நியமனம் செய்வதற்கு, தனி வழிமுறைகளை உருவாக்கி, அமல்படுத்த வேண்டும்" என உத்தரவிடப்பட்டது.

இதனால், இறுதிப்பட்டியல் வெளியிடுவது தள்ளிப் போனது.அமைச்சர் தலைமையிலான குழு, புதிய விதிமுறைகளை உருவாக்கியதும், அதை அமல்படுத்த, அரசு உத்தரவிட்டது. அதன்படி, பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட்., - ஆசிரியர் பட்டயப் பயிற்சி என, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி, "வெயிட்டேஜ்" மதிப்பெண் நிர்ணயித்து, அதன் அடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி, நீண்ட நாட்களாக நடந்து வந்தது.

பணிகள் முடிந்ததை அடுத்து, இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. அதில், 18 ஆயிரத்து, 382 பேர், இடம் பிடித்தனர். இடைநிலை ஆசிரியர் பணிக்கு, 9,664 பேரும்; பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 8,718 பேரும், தேர்வு பெற்றனர். 19 ஆயிரத்து 343 பேர், ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற போதிலும், குறிப்பிட்ட சில இன சுழற்சிப் பிரிவுகளில், தகுதியானவர்கள் கிடைக்காததால், 961 பேரை தேர்வு செய்ய முடியவில்லை என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

இறுதி தேர்வுப் பட்டியலில் தேர்வு பெற்றவர்களின் பெயர் விவரங்கள், டி.ஆர்.பி.,யின், http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில், இன்று மாலைக்குள் வெளியிடப்பட உள்ளது. தேர்வு பெற்றவர்கள், பாடப்பிரிவை தேர்வு செய்து, பதிவு எண்களைபதிவு செய்தால், இறுதி தேர்வுப் பட்டியலில், இடம் பெற்றுள்ளோமா என்பதை அறியலாம்.

அதிக எண்ணிக்கையில் தேர்வு பெற்றிருக்கும் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை, விமரிசையாக நடத்த, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அமாவாசை நாளான, 13ம் தேதி, விழா நடக்கும் எனவும், அதில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவுகளை வழங்குவார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இறுதிப் பட்டியல் வெளியான உடன், பாட வாரியாக உள்ள காலி இடங்கள் விவரங்களை சரிபார்த்து, "ஆன்-லைன்" வழியாக, கலந்தாய்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பணி நியமன உத்தரவு வழங்கும் விழாற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை செய்யுமாறு, பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

மிகக் குறுகிய காலத்தில், விழாவை நடத்தி, பணி நியமன உத்தரவை வழங்க வேண்டியிருப்பதால், அதிகாரிகள் மின்னல் வேகத்தில், அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளனர்.

இதனிடையே, இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை, 10 ஆயிரம் பேர், தேர்வு செய்யப்பட வேண்டும்; ஆனால், 9,664 பேர், தேர்வு பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர், 19 ஆயிரத்து 432 பேர் தேவை; ஆனால், 8,718 பேர் மட்டுமே, இறுதி தேர்வுப் பட்டியலில் தேர்வாகி உள்ளனர். இன்னும், 10 ஆயிரத்து, 714 இடங்களுக்கு, தகுதியானவர்கள் கிடைக்கவில்லை

பல லட்சம் பேர் தேர்வு எழுதிய போதிலும், டி..டி., தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் எடுக்காததால், இதுபோன்ற நிலை உருவாகி இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன

 Tamil Nadu Teachers Eligiblity Test 2012 - Results - Candidates - Secondary Grade Teachers (PAPER 1) - Individual Query  
Tamil Nadu Teachers Eligiblity Test 2012 - Results - Candidates - Graduate Assistants (PAPER 2) - Individual Query  

புதன், 19 செப்டம்பர், 2012

தடைகளை ‘தாண்டிய’ சாதனை...

                      தடைகளைதாண்டிபதக்கம்
 எல்லோருடைய வாழ்விலும் தடைகள் வரத்தான் செய்கின்றது அத் தடைகளை
 சவாலாக ஏற்றுக்கொள்பவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்பதை
 நிருபித்திருக்கிறார் 24 வயதான கிரிஷா ஹோசநகரா நாகராஜ்கவுடா….

      கர்நாடக மாநிலம் ஹசனுக்கு அருகில் ஹொசநகர் வட்டத்தில் அரக்கல்குட்எனும்
    குக்கிராமத்தில் பிறப்பின்போதே இடதுகால் ஊனத்துடன் குடும்பத்துக்கு வேண்டாத
    குழந்தையாகத்தான் பிறந்தார் கிரிஷா.. .தந்தை நாகராஜ்கவுடா ஏழ்மை தாண்டவமாடும்
    தங்கள் குடும்பத்தை காப்பாற்றவேண்டிய  தலைப்பிள்ளையே ஊனத்தோடு  பிறந்ததைக்
    கண்டு கடவுளை நொந்துக்கொள்ள.. அவருக்கு நம்பிக்கையூட்டி தாய் ஜெயம்மா தன்
    மகனை யாருக்கும் பாரமாக இல்லாமல் இருக்கும்படி வளர்ப்பேன் என்று உறுதியளித்தார்.

 அந்த வார்த்தை பொய்த்துப்போகவில்லைமாற்றுத்திறனாளிகளுக்காக லண்டனிலில் நடைபெற்ற  பாராலிம்பிக்போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துக்கொண்டு உயரம்தாண்டுதல் பிரிவில் 1.74 மீ தாண்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்று தாயின் வார்த்தயை மெய்ப்பித்து, தாய் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் கிரிஷா..

  குழந்தைப்பருவத்தில் தனக்கு ஊனம் என்பதே இல்லாதது போல மற்ற சாதரண  குழந்தைகளுடன் ஓடியாடி தாண்டி விளையாடும் வகையில் கிரிஷாவுக்கு  தன்னம்பிக்கையூட்டி வளர்த்ததில் அவரது தாய்க்கு பெரும்பங்கு உண்டுஎன்கிறார் அவரது உறவினர் ஹரிஷ்

  பன்னூர் பள்ளியில் படிக்கும்போதே கிரிஷா அங்கு நடைபெறும்   பல விளையாட்டுப்போட்டிகளில் மற்ற பிள்ளைகளோடு பிள்ளைகளாக கலந்துகொண்டு சிலவற்றில் வெற்றிவாகையும் சூடி பலரின் புருவத்தை உயரவைத்தார்….அந்த விளையாட்டுப் போட்டிகலெல்லாம்  நார்மல் குழந்தைகளுக்கானது என காரணங்காட்டி அவர் அதில் கலந்துகொள்ள தகுதியில்லை என சிலர் எதிர்ப்புதெரிவித்தபோது பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அவருக்கு ஆதரவாக நின்று அளித்த ஊக்கமும்,அதன்பின்னர் பெங்களூரு பாராலிம்பிக் அஷோசியேஷன் அளித்த பயிற்சியும், உதவியும் இன்று கிரிஷாவை இமயத்துக்கு உயர்த்தியிருக்கிறது

     வெற்றி குறித்து கிரிஷா கூறுகையில்   எனது கடின உழைப்பு, பதக்கமாக மாறியிருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். பாராலிம்பிக் வீரர்களுக்கு அரசு மட்டுமே உதவுகிறது. எங்களின் சாதனை, ஒலிம்பிக் பதக்கத்தை விட குறைந்தது கிடையாது.
நான் வென்ற பதக்கத்தின் மூலம், இந்தியாவில் பாராலிம்பிக் வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்தப் பதக்கத்தை இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.என்கிறார்.
 பிஜீங், லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார்தான்
 இவரது ரோல் மாடல்.
  லண்டனில் மூவர்ணக் கொடியை சுஷில் குமார்    ஏந்திச் சென்ற போது, நானும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று எண்ணினேன். தற்போது தங்கத்தை தவற விட்டுவிட்டாலும் அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன்என்று தன்னம்பிக்கையோடு சொல்லும் கிரிஷா   இன்று பலருக்கு  ரோல் மாடலாகமிளிர்கிறார்! நடக்கவே சிரமப்பட்ட ஒருவர் நம்பாவேமுடியாத சாதனை நிகழ்த்தி சுட்டிகள் நமக்கும் நம்பிக்கையூட்டியிர்க்கிறார்!!

சி.தாமரை
சுட்டி ஸ்டார்
தருமபுரி