திங்கள், 16 ஜூலை, 2012

          சேம்ப்பியன்ஸ் ஆப் த எர்த்’-2012

 சுற்றுப்புறச் சூழலினை பாதுகாக்கும் வகையில் மிகச்சிறந்தவகையில் பாடுபடுவோருக்கு
சேம்ப்பியன்ஸ் ஆப் த எர்த்’ (champions of the earth )  விருதினை ஐ.நா சபையின் சுற்றுப்புறச்சூழல் அமைப்பு ஆண்டுதோறும்  வழங்கி வருகின்றது.
 2012 ஆண்டுக்கான சேம்ப்பியன்ஸ் ஆப் த எர்த்விருது மங்கோலியாவின்  அதிபர்
 சகியா எல்பெக்டோர்ஜ், பிரேசியல் வங்கியாளர் பார்போசா, சுஜர்லாந்தின் விமானவியலாளர் பெட்ரண்ட் பிக்கார்ட்,டச்சு நாட்டைச்சேர்ந்த விஞ்ஞானி சண்டெர் வான் டெர் லீயுவ், ஐக்கிய அரபு எமிரேட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை  தொழிலதிபர் சுல்தான் அஹமது அல்ஜாபர், கென்யாவின் மசாய் இயற்கை பாதுகாவலர் சாம்சன் ஆகிய அறுவருக்கு வழங்கப்பட்டுள்ளது
 விருதுபெற்றவர்களில்  ஒருவரான  பெட்ரண்ட் பிக்கார்ட் [Bertrand Piccard] க்கு சுற்றுபுறத்துக்கு கேடுவிளைவிக்காத எரிபொருளைப் பயன்படுத்தவேண்டியதன் அவசியத்தைப்பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக இவ் விருது வழங்கப்பட்டுள்ளது.

     முழுக்க முழுக்க சூரிய சக்தியினால் பறக்கக்கூடிய விமானம் ஒன்றை வடிவமைத்துள்ள  பெட்ரண்ட்  உலகச்சுற்றுப்புறச் சூழல் தினமான ஜூன் 5ல் HB-SIA Solar Impulse எனப்படும் அந்த குட்டிவிமானத்தில் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் விமானதளத்திலிருந்து மொராக்கோ நாட்டின் ரபாட் விமானதளத்திற்கு எரிபொருளே இல்லாமல்   பறந்துசென்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
    அதிகபட்சமாக 8,829 மீட்டர் [ 27000 அடி].. உயரத்தைத் தொட்ட.இந்த விமானம், சரசரியாக மணிக்கு 51.8 கி.மீ வேகத்தில் பறநது, 830 கிலோமீட்டர் தொலைவினை சுமார் 19மணி 8 நிமிடங்களில் கடந்தது.
   சுற்றுப்புறச்சுழலை மாசுபடுத்தாத இந்த விமானத்தின் இறக்கை 63 மீட்டர் நீளமுடையது. இறக்கை முழுவதும் சூரிய ஒளியை கிரகிக்கும் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.  இது பகலில் மட்டுமில்லாமல் இரவிலும் பறக்கும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுதான் ஹைலைட்.

      இதுபற்றி பெட்ரண்ட் பிக்கார்ட் [Bertrand Piccard] கூறுகையில்எங்களின் இந்த விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு பறப்பதற்காக    வடிவமைக்கப்பட்டதல்ல ,மக்களிடையே மாசற்ற எரிபொருள் பற்றிய விழிப்புணர்வு செய்தியை பரப்புவதற்கான வாகனம்  என்கிறார்
      மேலும் “.இது மக்களிடையேயும், அரசியல் பொருளாதர உயர்மட்டத்தினரிடையேயும் தற்போதைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பெட்ரோல்,டீசல் போன்ற மாசுபடுத்தும் எரிசக்தி தேவைகளிலிருந்து நாம் விடுபடுவது சாத்தியமே என்பதை நிரூபிப்பதற்காக நடத்தப்பட்ட நிகழ்வு  என்கின்ற பெட்ரண்ட் அன்றாட வாழ்வில் சூரிய ஆற்றலை மக்கள் பெருமளவுக்கு பயன்படுத்த வலியுறுத்துகின்றார்

     புவியின் சாம்பியன்களுடன் நாமும் கைகோப்போம்….புவியை காப்போம் ஃப்ரண்ட்ஸ்!


சி.தாமரை, சுட்டி ஸ்டார், தருமபுரி

சூரியமின் ஆற்றல் மூலம் இயங்கும் விமானம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக