செவ்வாய், 17 ஜூலை, 2012

சுட்டிகளுக்கு ஒரு சுட்டியின் கடிதம்

  இங்கிலாந்து பாக்ஸ்போர்டைச் சேர்ந்த  ஆட்ரின் ,வில்லியம்ஸ் தம்பதியரின் மகன் சார்லி… .பள்ளிக்கு துள்ளி செல்லவேண்டியஐந்து வயதில்     மெடுலொபிளஸ்டோமா[ [meduloblastoma] எனும் கொடிய மூளை புற்றுக்கட்டியால் பாதிக்கப்பட்டான். .நோயுடனான 7 வருட வாழ்வா சாவா  போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ள அவர் சுட்டிகளுக்காக எழுதிய  உணர்ச்சிப்பூர்வமான கடிதம் இதோ
  என் பெயர் சார்லி வில்லியம்ஸ்  நான்   இந்நேரம் இறந்திருக்க வேண்டியவன்ஆனால் இறக்கப்போவதில்லை என சமீபத்தில் அறிந்துக்கொண்டேன்    ஊசியைப் பார்த்தாலே பயப்படும் நான் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான ரேடியோதெரபி.. கீமோதெரபி..எம்ஆர்ஐ ஸ்கேன், பிளட் ட்ரான்ஸ்பியூஸன்  என மாதக்கணக்கில் கடுமையான சிகிச்சைகளை பொறுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
   ஒரு பொருள் நமக்கு கிடக்காத போதுதான் அதனோட அருமை புரியவரும்.  உதாரணத்துக்கு கம்ப்யூட்டர்கள் , கால்குலேட்டர்கள்,ஏன்.. சாதாரண பேனாக்கள்,பென்சில்கள் கூட நாம் கல்வி பெறுவதற்கு முக்கிமானவைகள்தான்.  நமக்கு பென்சில் என்பது சாதரண விஷயமாக இருக்கலாம்.. ஆனால் உகாண்டாவில ஒரு குக்கிராமத்தில இருக்கின்ற ஏழைச்சிறுவனுக்கு அதுதான் கல்வியின் தொடக்கமே…. உடல்நிலை சரியில்லாதபோது இந்தமாதிரியான சிந்தனைகள் எனக்குள்ளே தோன்றின

   நம் வகுப்புகளில் யாரவது ஒரு சிறுவன் [ சில சமயங்களில் இரண்டு மூன்றுபேர்கூட ] தன்னை எல்லாரும் கவனிக்கவேண்டும் என்பதுதற்காக எப்பப்பார்த்தலும் சேட்டை செய்துக்கிட்டே இருப்பான்...தான் கெடுவதோடு படிக்க விரும்புகின்றவர்களையும் சேர்த்து கெடுப்பான்.  மற்றவர்களைப்பற்றி அந்த சுயநலக்காரனுக்கு கொஞ்சமும் கவலையே கிடையாது.. ஏன் இப்படின்னு தெரியல... நாம எல்லாரும் ஏதோ ஒரு சமயத்துல இந்தமாதிரி நடந்துக்கறது சகஜம்தான் ஆனாஎல்லா நேரத்திலும் அப்படி நடந்துக்கறதை எப்படி ஏத்துக்கமுடியும் எனக்கு வந்த மாதிரியான கேன்சர் வந்தாதான் ஒருவேளை அவங்க மாறுவாங்களோ என்னவோ?
        சத்தானதைவிட சுவையான உணவைத்தான் நாம் விரும்புவோம். அந்த லிஸ்ட்ல சாக்லெட், கேக், ஸ்வீட்ஸ்,சீஸ்பர்க்,சிப்ஸ், எல்லாம் இருக்கும்.. .இப்போ  சாப்பிட ஏதாவது கிடைக்காதான்னு ஏங்குகின்ற உங்களை பட்டினி போட்டா எப்படியிருக்கும்னு நினைச்சிப்பாருங்க.!. மருத்துவமனையில் என் நிலமை அதுதான் மூக்கில்  சொருகிய ட்யூப் வழியாக எனக்குத் தேவையான ஊட்டச்சத்தை செலுத்துவார்கள்.. ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்கமுடியாது.. ரொம்ப கஷ்ட்டமாக இருக்கும். ஆனா  உடல் நலனுக்கு தேவையான உணவுக்கும் நமக்கு பிடிக்கின்ற உணவுக்கும் உள்ள வித்தியாசத்தை இப்ப  புரிஞ்சிக்கிட்டேன்….   நோய்   வாழ்கையில்  எது முக்கியம் எது முக்கியமில்லை என்பதை  உணர்த்தியது.

  பெற்றோர்கள் நம் விருப்பத்துக்கு எதிரா இருக்காங்கன்னு நினைக்கிறோம் அது தவறு.. ஊட்டிவிட்டுநல்ல ட்ரஸ்களை  போட்டு அழகு பார்த்து  தேவையான வசதிகளையெல்லம் செய்து கொடுத்து.. எல்லாவற்றுக்கும் மேலாக நமக்கு ஏதவது ஒன்னுன்னா ஓடோடி வருகிறவங்க பெற்றோர்கள்தான்
  சிகிச்சைகளையெல்லாம்  தங்கிக்கொள்ள முடியாமல் நான்  அவதிப்பட்டபோது   கூடவே இருந்து கவனிச்சிக்கிட்டவங்க பெற்றோர்கள்தான். .தன்னோட குழந்தை வலியால் துடிக்கின்றதை பார்க்கின்ற பெற்றோர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை நான் நேரடியா உணர்ந்தேன்..
   இன்னும் கொஞ்ச நாளில் நீங்க இறந்து போயிடுவிங்க அப்படின்னு உங்க பெற்றோருக்கு தெரிஞ்சா அவங்க எப்படி பாடுபடுவாங்கன்னு கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்..எனக்கு மூளையில புற்றுக்கட்டின்னு  என் பெற்றோர்களுக்கு தெரிஞ்சதும் நான் அதிலிருந்து மீளமாட்டேனா என்று அவங்க பட்ட அவதி எனக்கு நல்லாவே தெரியும்..
       கேன்சர் என்னோட வாழ்வில் ஒரு  பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும் வாழ்க்கையை  முன்னோக்கி    தீவிரமாக பார்க்க வச்சிருக்குகடுமையாக உழைக்கிறதுக்கும், பள்ளியில மற்றவர்களிடம் நல்ல முறையில் நடந்துக்கொள்வதற்கும் அது கற்றுகொடுத்திருக்கின்றது…”  என்று முடியும் 12 வயதான சார்லியின்  கடிதம்  நம்மையும் ஒரு கணம் சிந்திக்க வைக்கின்றதல்லவா

சி.தாமரை  சுட்டி ஸ்டார் தருமபுரி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக