ஞாயிறு, 22 ஜூலை, 2012

ஆர்வமூட்டிய அகழ்வைப்பகம்………

      ஆர்வமூட்டிய        அகழ்வைப்பகம்………

               சுட்டிகளின் சுவையானா அனுபவம்...

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் எப்படியெல்லம் வாழ்ந்தாங்க என்னென்ன பொருட்களையெல்லாம் பயன்படுத்தினாங்க என்பதையெல்லம் வரலாற்று புத்தகங்களில்மட்டுமே படிச்சிருக்கோம். அவற்றை நேரில்  பார்த்து தெரிந்து கொள்வதற்காக  சுட்டிகளுடன் தருமபுரி அகழ்வைப்பகத்துக்கு படையெடுத்தோம்….

   அவ்வைக்கு அருநெல்லிக்கனி தந்த வள்ளல் அதியமான் ஆண்ட  தருமபுரியில் அமைந்துள்ள அகழ்வைப்பகத்துக்கு  உங்களை அன்போடு வரவேற்கிறேன்…” என்று இலக்கியநயத்தோடு சுட்டிகளை வரவேற்றார்.   அகழ்வைப்பகத்தின் தொல்லியல் அலுவலர் ஜெயராமன்
    இந்த அகழ்வைப்பகம் தகடூர் வராலாற்றுப் பேரவையைச் சார்ந்த ஆசிரியர்கள் உதவியுடன் முதலில் தொடங்கப்பட்டது.தற்போது தமிழகத் தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அரிய நடுகற்கள் சேகரிக்கப்பட்டு இங்கே பராமரிக்கப்படுவதால்நடுகல் அகழ்வைப்பகம்என்ற சிறப்பும் இதற்கு உண்டுஎன்று கூறிய அவர். “நாம் இப்போ காலச்சக்கரத்தில் ஏறி பின்னோக்கி போவோமாஎன்று கேட்க சுட்டிகள் ஒரே குரலில்  போலாமே… ”என்று கோரஸ் பாடினர்.
       முதல்ல  நடுகற்கல் பற்றி சொல்லுங்க அங்க்கிள் என பொதிகைவேந்தன் கேட்க  சுட்டிகளை நடுகற்கள் இருக்குமிடத்துக்கு அழைத்துச் சென்றார் , “ போரில்  வீர மரணம் அடைந்தவர்களின்  நினைவாக நடப்படுவதுதான் நடுகல். இந்த நடுகல் வணக்கம் சங்க காலம் முதல் இருந்துள்ளது….போரில் மட்டுமல்லாமல் புலி, காட்டுப்பன்றி போன்ற காட்டுவிலங்குகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்தவர்களுக்கும் வீரக்கல் எடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் இப்படி 150 க்கும் மேற்பட்ட நடுகற்கல் கிடைத்துள்ளனஎன்று கூறியபடி நடுகல் ஒன்றினை சுட்டிகளுக்கு காட்டினார். அதில் புலியை எதிர்த்து ஈட்டியுடன் வீரன் போரிடுவதுபோன்ற புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டிருந்தது. இந்த கல்புலிக்குத்த பட்டான் கல்என்று அழைக்கப்படுகின்றது என விளக்கினார்.
    அடுத்து சுட்டிகள்  கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  நவகண்டச் சிற்பம்இருக்கும் இடத்திற்குச் சென்றனர் அதில் வீரன் ஒருவன் நின்றவாறு தன்னுடைய  இரண்டு கைகளிலும் கத்தியை கழுத்தின் பின்புறம் பிடித்திருக்கும் நிலையில் காணப்படுகிறான்.

      நவகண்டம் என்பது உடலில் உள்ள ஒன்பது அங்கங்களில் ஒன்றை வெட்டி கொற்றவைக்கு காணிக்கையாக தருவதாகும். இது வீரன் ஒருவன் தன் தலையைத் தானே வெட்டி காணிக்கையாக்கும் நவகண்ட சிற்பமாகும்என்றார் உடன் இருந்த வரலாற்று ஆர்வலர் முத்து. .மேலும்கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்ததைக் காட்டும் சதிக்கல் இதோ ..” என்று அதனையும் சுட்டிகளுக்கு காட்டினார்.  அம்மாடியோவ்.. .கேட்கவே பயமா இருக்கேஎன்றாள் காவ்ய நிலா.      
         அங்கிருந்த குடுகுடுவென ஓடிய சந்ரு, ”நான் இப்போ புத்தராகப்போறேன்என்றபடி அங்கு தலை சிதைந்த நிலையில் காணப்பட்ட புத்தர் சிலைக்கு தன் தலையைக் கொடுத்து புத்தராகஅவதார்எடுத்தான்.. சுட்டிகள்  புத்தம் சரணம், கச்சாமிஎன்றபடி புத்தரை வணங்கி நின்றனர் “.இது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது..நின்ற நிலையில் இருக்கும் புத்தரை அகழ்வைப்பகத்தின் உள்ளே      
      பார்க்கலாம்என்றார் ஜெயராமன்
  சுட்டிகள் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தகண்ணனும் கோபியரும்புடைப்புச் சிற்பத்தை பார்த்து இரசித்தபடி, சுடுமண் பொருட்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றனர் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த .சீனமனிதன் தலை, ஐரோப்பிய மனிதன் தலை, குடுமி அலங்காரம் போன்றவை அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது அதுமட்டுமல்லாமல் சுடுமண்ணால் செய்யப்பட்ட தாங்கி,காசுக்கலயம், ஆங்கிலேயர் காலத்து சாரட் விளக்கு
ஆகியவற்றைப்பற்றியெல்லாம் பார்த்தும்,கேட்டு விளக்கம் பெற்றனர்.  
     இப்போ நாம் பார்க்கப்போவது பெருங்கற்காலத்தை சேர்ந்த பொருட்களை என்றார் ஜெயராமன்.  பெருங்கற்காலம் அப்படின்னா எந்த காலம்?” எனத் தன் சந்தேகத்தை கேட்டாள் திரிஷா.
  இன்றைக்கு சுமார் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய காலம் அப்படின்னு சொல்லாம். இங்கே இருக்கின்ற குடுவைகள் ,ஐந்துகால் சாடி,மூன்றுகால் சாடி சுடுமண் கெண்டி   எல்லாம் ஏறக்குறைய கி.மு 300 ஆம் ஆண்டை ஒட்டியவை  என்று கூற, அதனைப்பார்த்து   அடேங்கப்பாஅவ்வளவு காலத்துக்கு முந்தியதாஎன ஆச்சரியப்பட்டனர் சுட்டிகள்
  அடுத்து தோலினால் செய்யப்பட்ட குடுவை, சுடுமண் காதணிகள், சங்கு வளையல்கள். கற்கால  ஆயுதங்கள், இரும்பினாலான ஆயுதங்கள் என வரிசயாக பார்த்து விளக்கம் பெற்றபடி மரத்தினாலான இராவணன் சிற்பத்தருகே வந்தனர்.  இந்த சிற்பம் 18 ஆம் நூற்றண்டைச் சேர்ந்தது காரிமங்கலம் என்னுமிடத்திலிருந்து எடுத்துவரப்பட்டதுஎன்றார் ஜெயராமன் சுட்டிகளிடம் .
   அருகில்   பெரிதாக பானை வடிவில் இருந்ததை எட்டிப் பார்த்த அஸ்வினிஇது எங்க கிராமத்து பாட்டி வீட்டில் தானியங்களை போட்டுவைக்கின்ற கலன் மாதிரி இருக்கே..” என்றாள்.
இதுக்கு பேர்முதுமக்கள்தாழி’ ..பழங்காலத்தில் இறந்தவங்களை அவங்க பயன்படுத்திய பொருட்களுடன் இந்தமாதிரியான தாழியில் போட்டுபுதைப்பாங்க.. இந்த தாழி கி.மு 300 முதல் கி.பி 300 வரையிலான காலகட்டத்தைச்சேர்ந்தது. இதுக்குள்ளே இறந்தவர்களின் எலும்புகள், தங்கத்திலான நெற்றிப்பட்டம், செம்பினாலான ஆண், பெண்தெய்வ உருவங்கள், இரும்பிலான கத்திகள் விளக்குத்தாங்கிகள் போன்ற பொருட்களும் கூட சில இடங்களில் கிடைச்சிருக்குஎன்றார் ஜெயராமன்.
   ஜீபூம்பா மாதிரி எதாவது வந்துடப்போகுது..நகருங்க.. நகருங்க”… என்று அகிலன் பயமுறுத்தினாலும் சுட்டிகள் அதனுள்ளே எட்டிப்பார்த்து தொட்டு தடவி பார்த்தப்பின்னரே அங்கிருந்து நகர்ந்தனர்.
   அடுத்து சுட்டிகள் பார்வையிட்டது பழங்கால நாணயங்களைதருமபுரி மாவட்டத்தில் கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் பல்வேறு கால கட்டங்களைச் சார்ந்த தங்கம் வெள்ளி,செம்பு, இரும்பினாலான காசுகள் கிடைச்சிருக்கு.இவற்றின் ஒரு பக்கத்திலோ இரு பக்கங்களிளோ சூரியன் மலைமுகடு, ஆறு,காளை, ஸ்வஸ்திகம்,கும்பம்முதலிய சின்னங்கள் முத்திரையாக பொறிக்கப்பட்டுள்ளனஎன்றார்.ஜெயராமன்.
         நாம் இப்ப அச்சிட்ட புத்தகத்தை பயன்படுத்துகின்றோம் ஆனா பழங்காலத்தில எப்படி நூல்களை உருவாக்கினாங்கனு தெரியுமா?” என ஜெயராமன் கேட்க ஓலையில் எழுத்தாணி கொண்டு  எழுதி உருவக்கினாங்க.. அந்த மாதிரி பல ஓலைசுவடிகளை சேகரிச்சு சங்க இலக்கியங்களை  தமிழ் தாத்தா உ..வே.சா பதிப்பிச்சார்னு நான் படிச்சிருக்கேன்என்று வேதவல்லியிடமிருந்து டக்கென பதில் வந்தது.   கரெக்ட் சரியா சொன்னஎன்று பாராட்டியபடி அங்கிருந்த ஒலைசுவடிகளை  சுட்டிகளின் பார்வைக்கு கொடுத்தார்.
   18 ஆம் நூற்றாண்டில் போரில் பயன்படுத்தப்பட்ட கல்லினாலான பீரங்கி குண்டுகள், பீரங்கிகள் என அகழ்வைப்பகத்தின். அனைத்து  பகுதிகளையும் பார்த்து முடித்த சுட்டிகள்அங்க்கிள் இன்றைக்கு எங்கள நீங்க பழங்காலத்துக்கே கூட்டிட்டு போயிட்டிங்க.. நம் முன்னோர்களின் நாகரிகத்தையும் வாழ்க்கைமுறைகளையும்பற்றி தெரிஞ்சிக்கிட்டோம்வாவ் இப்படியொரு அனுபவம் எங்களுக்கு இதுவரை கிடைச்சதே இல்லைரொம்ப ரொம்ப தேங்க்ஸ்என்றபடி அங்கிருந்து விடை பெற்றனர்.. 

நன்றி: சுட்டி விகடன்

சி.தாமரை
சுட்டி ஸ்டார்
தருமபுரி.        
    


   .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக