ஞாயிறு, 15 ஜூலை, 2012

உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்

                                       உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்

   கம்ப்யூட்டர் உலகின் ஜாம்பவானான ஐ.பி.எம் நிறுவனம் தனது 102 ஆம் ஆண்டில் காலடி எடுத்துவைத்திருக்கும் வேளையில் அந் நிறுவனத்தின் தயாரிப்பான செக்யுயா(Sequoia)எனும் சூப்பர் கம்ப்யூட்டர் உலகின் அதிவேக கம்ப்யூட்டர் எனும் பெருமையை தட்டிச் சென்றுள்ளது.இதுவரை ஜப்பானின் ஃபிஜிட்சு நிறுவனத்தின் K computer என்ற  சூப்பர் கம்ப்யூட்டர்தான்  உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என்று கூறப்பட்டிருந்தது. அதனைவிட செக்யுயா 1.55   மடங்கு வேகமாகக்கணக்கிடும் திறன் உடையதாக உள்ளது. ஒரு வினாடியில் 16 quadrillion கணக்கீட்டினை  செய்து முடிக்கும் திறன்படைத்தது .அதன் வேகத்தை வேறுவிதத்தில் சொல்லனும்னா, செக்யுயா ஒரு மணிநேரத்தில் செய்து முடிக்கும் கணக்கீட்டினை உலகில் வாழும் 6.7 பில்லியன் மக்கள் அனைவரும் கால்குலேட்டர் துணையுடன் செய்ய 320 நாட்கள் தேவப்படும்னா பாருங்களேன்..

 

 

 

 
சி.தாமரை,
சீனியர் ஸ்டார் தருமபுரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக