புதன், 19 செப்டம்பர், 2012

தடைகளை ‘தாண்டிய’ சாதனை...

                      தடைகளைதாண்டிபதக்கம்
 எல்லோருடைய வாழ்விலும் தடைகள் வரத்தான் செய்கின்றது அத் தடைகளை
 சவாலாக ஏற்றுக்கொள்பவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்பதை
 நிருபித்திருக்கிறார் 24 வயதான கிரிஷா ஹோசநகரா நாகராஜ்கவுடா….

      கர்நாடக மாநிலம் ஹசனுக்கு அருகில் ஹொசநகர் வட்டத்தில் அரக்கல்குட்எனும்
    குக்கிராமத்தில் பிறப்பின்போதே இடதுகால் ஊனத்துடன் குடும்பத்துக்கு வேண்டாத
    குழந்தையாகத்தான் பிறந்தார் கிரிஷா.. .தந்தை நாகராஜ்கவுடா ஏழ்மை தாண்டவமாடும்
    தங்கள் குடும்பத்தை காப்பாற்றவேண்டிய  தலைப்பிள்ளையே ஊனத்தோடு  பிறந்ததைக்
    கண்டு கடவுளை நொந்துக்கொள்ள.. அவருக்கு நம்பிக்கையூட்டி தாய் ஜெயம்மா தன்
    மகனை யாருக்கும் பாரமாக இல்லாமல் இருக்கும்படி வளர்ப்பேன் என்று உறுதியளித்தார்.

 அந்த வார்த்தை பொய்த்துப்போகவில்லைமாற்றுத்திறனாளிகளுக்காக லண்டனிலில் நடைபெற்ற  பாராலிம்பிக்போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துக்கொண்டு உயரம்தாண்டுதல் பிரிவில் 1.74 மீ தாண்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்று தாயின் வார்த்தயை மெய்ப்பித்து, தாய் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் கிரிஷா..

  குழந்தைப்பருவத்தில் தனக்கு ஊனம் என்பதே இல்லாதது போல மற்ற சாதரண  குழந்தைகளுடன் ஓடியாடி தாண்டி விளையாடும் வகையில் கிரிஷாவுக்கு  தன்னம்பிக்கையூட்டி வளர்த்ததில் அவரது தாய்க்கு பெரும்பங்கு உண்டுஎன்கிறார் அவரது உறவினர் ஹரிஷ்

  பன்னூர் பள்ளியில் படிக்கும்போதே கிரிஷா அங்கு நடைபெறும்   பல விளையாட்டுப்போட்டிகளில் மற்ற பிள்ளைகளோடு பிள்ளைகளாக கலந்துகொண்டு சிலவற்றில் வெற்றிவாகையும் சூடி பலரின் புருவத்தை உயரவைத்தார்….அந்த விளையாட்டுப் போட்டிகலெல்லாம்  நார்மல் குழந்தைகளுக்கானது என காரணங்காட்டி அவர் அதில் கலந்துகொள்ள தகுதியில்லை என சிலர் எதிர்ப்புதெரிவித்தபோது பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அவருக்கு ஆதரவாக நின்று அளித்த ஊக்கமும்,அதன்பின்னர் பெங்களூரு பாராலிம்பிக் அஷோசியேஷன் அளித்த பயிற்சியும், உதவியும் இன்று கிரிஷாவை இமயத்துக்கு உயர்த்தியிருக்கிறது

     வெற்றி குறித்து கிரிஷா கூறுகையில்   எனது கடின உழைப்பு, பதக்கமாக மாறியிருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். பாராலிம்பிக் வீரர்களுக்கு அரசு மட்டுமே உதவுகிறது. எங்களின் சாதனை, ஒலிம்பிக் பதக்கத்தை விட குறைந்தது கிடையாது.
நான் வென்ற பதக்கத்தின் மூலம், இந்தியாவில் பாராலிம்பிக் வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்தப் பதக்கத்தை இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.என்கிறார்.
 பிஜீங், லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார்தான்
 இவரது ரோல் மாடல்.
  லண்டனில் மூவர்ணக் கொடியை சுஷில் குமார்    ஏந்திச் சென்ற போது, நானும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று எண்ணினேன். தற்போது தங்கத்தை தவற விட்டுவிட்டாலும் அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன்என்று தன்னம்பிக்கையோடு சொல்லும் கிரிஷா   இன்று பலருக்கு  ரோல் மாடலாகமிளிர்கிறார்! நடக்கவே சிரமப்பட்ட ஒருவர் நம்பாவேமுடியாத சாதனை நிகழ்த்தி சுட்டிகள் நமக்கும் நம்பிக்கையூட்டியிர்க்கிறார்!!

சி.தாமரை
சுட்டி ஸ்டார்
தருமபுரி

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

இந்தியா விண்வெளியில் நூற்றுக்கு நூறு




விக்ரம் சாராபாய்

                          சதத்தைப் போற்றுவோம்

  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 100வது திட்டமாகிய பி.எஸ்.எல்.வி-சி21 ராக்கெட் பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டின் செயற்கை கோள்களை சுமந்துகொண்டு விண்ணில் வெற்றிகரமாக சீறி பாய்ந்ததைக் கண்டு மகிழ்ந்து கைதட்டிய இந்திய பிரதமர்
 இந்தியா  போன்ற ஏழை நாடுகள் விண்வெளி ஆய்வுக்காக ஏராளமாக செலவிடுவது தேவைதானா? என்று பலரும் கேட்கிறார்கள்…. இத்தகைய ஆய்வுகளாளும் தொழில் நுட்பத்தாலும்தான் நம்முடைய வளர்ச்சியே சாத்தியமானது என்பதுதான் அவர்களுக்கு அளிக்கும் பதில்என்றார் பெருமிதத்துடன்.

 இந்த சதத்தை கொண்டாடும் வேளையில் அதற்கு அடித்தளமிட்ட பலரை நாம் நினைகூர்வது அவசியமாகும்.. இந்தியாவின் விண்வெளி ஆய்வின் வரலாறு 1920ல் கொல்கத்தாவில் அறிவியலார் சிசிர் குமார் மித்திராவின் செயல்பாடுகளில் துவங்கியது..மித்திரா தரையளாவிய வானொலி அலைகள் மூலம் அயனி வெளியை ஆய்வு செய்ய சோதனைகளை நிகழ்த்தினார். அதன் பின்னர், இந்திய அறிவியலாளர்கள் சி. வி. ராமன் , மேக்நாத் சாகா போன்றோர் விண்வெளி அறிவியலுக்கு உதவும் பலஅறிவியல் கொள்கைகளை வெளியிட்டனர்.
. 1945ஆம் ஆண்டிற்குப் பின்னரே இத்துறையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  அகமதாபாத்தில் அமைந்துள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவிய இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை எனப் போற்றப்படும் விக்கிரம் சாராபாய் மற்றும் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவனர் ஹோமி ஜெஹாங்கீர் பாபா  ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது..
விண்வெளித் துறையில் துவக்கத்தில் அண்டக் கதிரியக்கம், உயர்வெளி மற்றும் காற்றுவெளி சோதனைக் கருவிகள், கோலார் சுரங்கங்களில் துகள் சோதனைகள் நடத்தப்பட்டன.ஆராய்ச்சி ஆய்வகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியிடங்களில் நிகழ்ந்த ஆய்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. அணு ஆற்றல் துறைக்கு ஓமி பாபா செயலாளராகப் பொறுப்பேற்றப் பின்னர் அணுவாற்றல் துறை இந்தியாவெங்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கு நிதியுதவி வழங்கியது
      1960 ல் திருவணந்தபுரத்துக்கு அருகில் உள்ள தும்பாவிலிருந்து செய்யப்பட்ட உயர் வளிமண்டல மற்றும் அயனமண்டல ஆராய்ச்சிகள் நமது விண்வெளி ஆராய்ச்சியின் மைல்கல் எனலாம்….   1969 ல் இஸ்ரோ நிறுவப்பட்டபின்னர் 1972 ல் தலைவராக பொறுப்பேற்ற சதிஷ் தவன்,. ஆரியபட்டா, பாஸ்கரா ,ஆப்பிள், ரோகினி, என பல இந்தியச் செயற்கைகோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய  முன்னாள் தலைவர் பேராசிரியர் யு.ஆர் ராவ், அவருக்குபின் பொறுப்பேற்றவர்களான. கே.கஸ்தூரிரங்கன், ஜி.மாதவன் நாயர்,தற்போதைய தலைவர் டாக்டர் ராதகிருஷ்ணன் ஆகியோருடன் தமிழகத்தைச் சேர்ந்தமுன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜேஅப்துல்கலாம், சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை  பிரம்மோஸ் ஏவுகணைத்திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.சிவதாணுப்பிள்ளைஆகியோரும் விண்ணில் நாம் வெற்றிகொடி நாட்ட உறுதுணையாக நின்றிருக்கின்றார்கள் அவர்கள் மட்டுமல்ல அவர்களுக்கு பின் நின்ற ஆயிரமாயிரம் விஞ்ஞானிகளின் ஒருமித்த உழைப்பும்தான் இந்த சதமடித்த சாதனை!. இத்தருணத்தில் அவர்களையும்  நாம் போற்றுவோம்..







  
 

வியாழன், 13 செப்டம்பர், 2012

வானத்தில் ஒரு சாதனை

                      விண்ணில் ஒரு சாகசம்
ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரிஎன்று மிதப்பவர்களின் சாகச விளையாட்டுதான் ஸ்கை டைவிங்…. அதில் பிரமிக்கவைக்கும் வான்வெளி
உலகச் சாதனையை  ஒருவர் இருவர் அல்ல 138  ஸ்கைடைவர்ஸ்  ஒன்றாக
இணைந்து நிகழ்த்தியிருக்கின்றனர்

 ,அமெரிக்கவின் வடக்கு இல்லியனாய்ஸில் நிகழ்ந்த இச் சாதனைக்காக . இதற்காகவே உள்ள ஸ்பெஷல்  விமானங்களின் உதவியுடன் விண்ணுக்கு சென்ற ஸ்கைடைவர்ஸ்  சுமார் 18, 500 அடி உயரத்திலிருந்து  குதித்தனர்  கரணம் தப்பினால் மரணம்எனும் மணிக்கு 220 மைல் வேகத்தில் பூமியை நோக்கி தலைகிழாக  கீழிறங்கிய அவர்கள் . அனைவரும் இணைந்து 150 அடி அகலமுள்ள  ஸ்னோஃப்ளேக்வடிவத்தை ( snowflake formation) உருவாக்கினர்.
          மூன்று நாட்களில்  15 முறைகளுக்கும் மேலாக முயற்சிசெய்து இந்த அபாயகரச்சதனையைச்  அபாரமாகச் செய்ததன் மூலம் ஏற்கனவே 2009 ஆண்டில்
108 பேர்கள் இணைந்து நிகழ்த்திய  சாதனையை முறியடித்துள்ளனர்.
                  பிரான்ஸ், ஸ்பெயின்,நார்வே,ஸ்விடன், சுஜர்லாந்து, உக்ரைன் ,ரஸ்யா,இத்தாலி,பெல்ஜியம்,ஆஸ்திரியா,பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த13 பெண்கள் உள்ளிட்ட 138  ஸ்கைடைவர்ஸ்  இதில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்











வெள்ளி, 7 செப்டம்பர், 2012

இனிய இயந்ராவின் ஒலிம்பிக்...

             இயந்திராவின் ஒலிம்பிக் -2012

 கிரேட் பிரிட்டனின் லண்டன் மாநகரில் ஒலிம்பிக் போட்டிகள்  கோலாகலமாக முடிந்தசுவடுகள் மறைவதற்குமுன்னரே FIRA வின் இன்னோரு  வருடாந்திர ஒலிம்பிக்  விளையாட்டுப்போட்டிகள்   பிரிஸ்டன் நகரில் குதுகலமாக தொடங்கியதுபுட்பால்,பேஸ்கட்பால்,மராத்தான் ஓட்டம்,வெயிட்லிப்டிங்,100 மீட்டர் ஓட்டம் என பல்வேறு போட்டிகளில்  தங்களது தங்கவேட்டைக்காக உலகெங்கிலுமிருந்து 27 அணிகளின் விளையாட்டு வீர்ர்கள் களமிறங்கினர். அவர்களெல்லாம் யார் தெரியுமா? ‘ஹுமனாய்ட் ரோபோக்கள்!’(Humanoid Robots)

   பிர்ராவின்(Federation of International Robotics Association)ரோபோ உலகக்கோப்பை கால்பந்துப் -2012 போட்டியில் கலந்துகொள்ள மனிதர்களைப்போலவே காலில் அடிடாஸ் ஷூவிடன் போட்டி மைதனத்தில் இறங்கிய வீரர்கள் விளையாடிய காட்சி பார்வையாளர்களை கவர்ந்திழுத்தது.. இந்த ரோபோக்கள் ஒவ்வொன்றையும் அது பங்கேற்கும் போட்டிக்கேற்ப தனித்தன்மையுடன் தயாரித்திருந்த ரோபோ விஞ்ஞானிகள்  ஹுசைன் வோல்ட் ஹுசைன் போல்ட்  ‘.த மொபோல்ட்என தங்களின் ரோபோக்களுக்கு விதவிதமாக பெயரிட்டிருந்தனர்சுமார் 200 விஞ்ஞானிகளின் ரோபோக்கள் இப்போட்டியில் பங்கேற்றன…. போட்டியில் தங்கள் ரோபோக்கள் வென்ற போதெல்லாம் தாங்களே வெற்றிபெற்றதாக விஞ்ஞானிகள் ஆரவாரித்து கொண்டாடினர்….


சி.தாமரை,
சீனியர் ஸ்டார்
தருமபுரி

சனி, 1 செப்டம்பர், 2012

இதோ ஒரு வித்தியாசமான ஆங்கிலப்பள்ளி

துளிர்களின் கனவு மெய்ப்பட...

ளபளக்கும் ஷூ, கழுத்தை இறுக்கும் டை, நுனி நாக்கு ஆங்கிலம், யாரைப் பார்த் தாலும் 'அங்கிள் - ஆன்ட்டி!
 பொதுவாக, ஆங்கிலப் பள்ளி மாணவர்களின் அடையாளம் இதுதான். படிப்பு, படிப்பு, படிப்பு... பள்ளிக்கூடங்கள் திணிப்பதும் இதைத்தான். பெற்றோர்கள் விரும்புவதும் இதைத்தான். ஆனால், ஓர் ஆசிரியர் நினைத்தால்... மாற்றங்கள் சாத்தியம்தான்!
திருச்சியில் ஒரு தலைமை ஆசிரியர் தனது வித்தியாசமான முயற்சிகளால், ஆங்கிலப் பள்ளிகளின் இந்த அடையாளத்தைக் கொஞ்சம் மாற்ற முயற்சிக்கிறார். அவர், திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக் பள்ளியின் தலைமை ஆசிரியர் துளசிதாசன்.
''பள்ளிக்கூடங்கள் வெறுமனே ஏட்டுக் கல்வி யைச் சொல்லித் தர மட்டும் இல்லை. சமூகத்தை எதிர்கொள்ளவும், வாழ்க்கையை எதிர் கொள்ளவும் ஒரு குழந்தையை முழுமையாகத் தயார் செய்வதே பள்ளிக்கூடங்களின் பணி. வாழ்க் கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு வேண்டும் என்பதையும், அந்தக் கனவை நனவாக் குவது எப்படி என்பதையும் உணர்த்தும் வகையில் 'கனவு மெய்ப்படதிட்டத்தைச் செயல்படுத்துகிறோம். இதன்படி, மாதந்தோறும் ஓர் ஆளுமையை - நிஜ உலகக் கதாநாயகரை அழைத்து வந்து, இங்கு பேசச் சொல்கிறோம். இதுவரை அப்படி வந்து பேசியவர்களில் நடிகர் சிவகுமார், நம்மாழ்வார், தமிழருவி மணியன், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன், வெ.இறையன்பு, மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சமூகத்தின் முன் வரிசை நாயகர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்தத் திட்டம். இதுபோலவே 'விடை பெறுதல்திட்டம் என்று ஒன்று உள்ளது. பள்ளியில் பணியாற்றும் சமையல்காரர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் விழா எடுத்து, அவர் களை மேடைக்கு அழைத்து, அவர்களுடைய முக்கியத்துவத்தைச் சொல்லி, அவர்களைக் கௌரவப்படுத்தும் திட்டம் இது.
அப்புறம் 'விடுமுறை உலகம்திட்டம். விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கான அசைன்மென்ட் இது. கிராமப் பள்ளி மாணவர் கள், அரசு மருத்துவனை நோயாளிகள், கூலித் தொழிலாளிகள்... இப்படி யாரையேனும் ஒவ்வொரு மாணவரும் சந்திக்க வேண்டும். அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய வாழ்க்கை முறையைக் கட்டுரையாக்க வேண்டும். சமூக ஏற்றத் தாழ்வுகளைப் புரிந்து கொள்ளவும், நமக்குத் தெரியாத இன்னோர் உலகத்தை அறிந்துகொள்ளவும் இது உதவும்.
நம் சமூகத்தில் அறிஞர்களைக் கொண்டாடும் வழக்கம் இப்போது குறைவு. இதனால், நாம் வாழும் காலத்தின் அறிஞர்கள் யார் என்பதுகூட நமக்குத் தெரிவது இல்லை. இதை மாற்றவும் மாணவப் பருவத்திலேயே நல்ல அறிஞர்களைக் கொண்டாடும் பழக்கத்தை உருவாக்கவும் 'அறிஞர் போற்றுதும்... அறிஞர் போற்றுதும்திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். எழுத்தாளர் அசோகமித்திரன், கீரனூர் ஜாகீர் ராஜா, தேனி சீருடையான் போன்றோரை அழைத்துக் கௌரவம் செய்தோம்.
அடுத்தது, 'துளிர்திட்டம். மாணவர்கள் சுதந்திரமாக விவாதிக்க வாய்ப்பு அளிக்கும் மேடை. எதைப்பற்றியும் வெளிப்படையாக விமர்சிக்கலாம், விவாதிக்கலாம்.
'வாசிப்பின் அவசியம்திட்டத்தின் கீழ் வாரம் இரண்டு நூலக வகுப்புகளைக் கட்டாயமாக்கி இருக்கிறோம். இந்த வகுப்புகளில், ஒவ்வொரு மாணவரும் புதிய நூல்களைப் படித்து, அவற்றில் பாதித்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
இவை தவிர, வாரம் ஓர் உலகத் திரைப்படம் திரையிட்டுக் காட்டுகிறோம். இவை எல்லாமே சின்ன முயற்சிகள்தான். ஆசிரியர்கள் மனது வைத்தால், எல்லாப் பள்ளிகளிலும் இதுபோல ஆயிரமாயிரம் முயற்சிகள் சாத்தியம்!'' என்கிறார் துளசிதாசன்.
சரி, இந்த முயற்சிகள் எல்லாம் மாணவர் களிடம் எத்தகைய மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன? சில மாணவ, மாணவிகளுடன் பேசினோம்.
''நான் கீரை விற்பவர் ஒருவருடன் உரையாடினேன். அதன் பிறகு, சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்லும் பழக்கத்தையே விட்டுவிட்டேன்!'' என்கிறார் சஹானா ராய் என்ற மாணவி.
அரசு மருத்துவனைகளுக்குச் சென்று வந்த சண்முகசுந்தரம், வெங்கடேஸ்வரன் என்கிற மாணவர்கள், ''அங்கு நோயாளிகள் நடத்தப்படும் விதம் எங்களைக் கடுமையாகப் பாதித்தது!'' என்கிறார்கள்.
பொதுவாக, இங்கு உள்ள மாணவர்கள் நவீன நாடகங்கள் முதல் ஸ்பெக்ட்ரம் முறைகேடு வரை எல்லாவற்றையும்  தெரிந்துவைத்து இருக்கிறார்கள்.
விடை பெறும்போது ஒரு மாணவர் கேட்டார்... ''சார், மரண தண்டனை சரியா, தவறா? உங்க கருத்து என்ன?''
நம்புங்கள்... ஒரே ஒரு ஆசிரியர் நினைத்தால்கூட... உலகத்தையே மாற்ற முடியும்

நன்றி விகடன்