புதன், 19 செப்டம்பர், 2012

தடைகளை ‘தாண்டிய’ சாதனை...

                      தடைகளைதாண்டிபதக்கம்
 எல்லோருடைய வாழ்விலும் தடைகள் வரத்தான் செய்கின்றது அத் தடைகளை
 சவாலாக ஏற்றுக்கொள்பவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்பதை
 நிருபித்திருக்கிறார் 24 வயதான கிரிஷா ஹோசநகரா நாகராஜ்கவுடா….

      கர்நாடக மாநிலம் ஹசனுக்கு அருகில் ஹொசநகர் வட்டத்தில் அரக்கல்குட்எனும்
    குக்கிராமத்தில் பிறப்பின்போதே இடதுகால் ஊனத்துடன் குடும்பத்துக்கு வேண்டாத
    குழந்தையாகத்தான் பிறந்தார் கிரிஷா.. .தந்தை நாகராஜ்கவுடா ஏழ்மை தாண்டவமாடும்
    தங்கள் குடும்பத்தை காப்பாற்றவேண்டிய  தலைப்பிள்ளையே ஊனத்தோடு  பிறந்ததைக்
    கண்டு கடவுளை நொந்துக்கொள்ள.. அவருக்கு நம்பிக்கையூட்டி தாய் ஜெயம்மா தன்
    மகனை யாருக்கும் பாரமாக இல்லாமல் இருக்கும்படி வளர்ப்பேன் என்று உறுதியளித்தார்.

 அந்த வார்த்தை பொய்த்துப்போகவில்லைமாற்றுத்திறனாளிகளுக்காக லண்டனிலில் நடைபெற்ற  பாராலிம்பிக்போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துக்கொண்டு உயரம்தாண்டுதல் பிரிவில் 1.74 மீ தாண்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்று தாயின் வார்த்தயை மெய்ப்பித்து, தாய் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் கிரிஷா..

  குழந்தைப்பருவத்தில் தனக்கு ஊனம் என்பதே இல்லாதது போல மற்ற சாதரண  குழந்தைகளுடன் ஓடியாடி தாண்டி விளையாடும் வகையில் கிரிஷாவுக்கு  தன்னம்பிக்கையூட்டி வளர்த்ததில் அவரது தாய்க்கு பெரும்பங்கு உண்டுஎன்கிறார் அவரது உறவினர் ஹரிஷ்

  பன்னூர் பள்ளியில் படிக்கும்போதே கிரிஷா அங்கு நடைபெறும்   பல விளையாட்டுப்போட்டிகளில் மற்ற பிள்ளைகளோடு பிள்ளைகளாக கலந்துகொண்டு சிலவற்றில் வெற்றிவாகையும் சூடி பலரின் புருவத்தை உயரவைத்தார்….அந்த விளையாட்டுப் போட்டிகலெல்லாம்  நார்மல் குழந்தைகளுக்கானது என காரணங்காட்டி அவர் அதில் கலந்துகொள்ள தகுதியில்லை என சிலர் எதிர்ப்புதெரிவித்தபோது பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அவருக்கு ஆதரவாக நின்று அளித்த ஊக்கமும்,அதன்பின்னர் பெங்களூரு பாராலிம்பிக் அஷோசியேஷன் அளித்த பயிற்சியும், உதவியும் இன்று கிரிஷாவை இமயத்துக்கு உயர்த்தியிருக்கிறது

     வெற்றி குறித்து கிரிஷா கூறுகையில்   எனது கடின உழைப்பு, பதக்கமாக மாறியிருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். பாராலிம்பிக் வீரர்களுக்கு அரசு மட்டுமே உதவுகிறது. எங்களின் சாதனை, ஒலிம்பிக் பதக்கத்தை விட குறைந்தது கிடையாது.
நான் வென்ற பதக்கத்தின் மூலம், இந்தியாவில் பாராலிம்பிக் வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்தப் பதக்கத்தை இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.என்கிறார்.
 பிஜீங், லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார்தான்
 இவரது ரோல் மாடல்.
  லண்டனில் மூவர்ணக் கொடியை சுஷில் குமார்    ஏந்திச் சென்ற போது, நானும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று எண்ணினேன். தற்போது தங்கத்தை தவற விட்டுவிட்டாலும் அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன்என்று தன்னம்பிக்கையோடு சொல்லும் கிரிஷா   இன்று பலருக்கு  ரோல் மாடலாகமிளிர்கிறார்! நடக்கவே சிரமப்பட்ட ஒருவர் நம்பாவேமுடியாத சாதனை நிகழ்த்தி சுட்டிகள் நமக்கும் நம்பிக்கையூட்டியிர்க்கிறார்!!

சி.தாமரை
சுட்டி ஸ்டார்
தருமபுரி

1 கருத்து: