சனி, 31 ஆகஸ்ட், 2013

மாணவிக்கு எம்.பி.பி.எஸ்., இடம் இழுத்தடிப்பு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

 :மதுரையை சேர்ந்த மாணவிக்கு, திருத்தி அமைக்கப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண்
பட்டியல்படி, எம்.பி.பி.எஸ்., இடம் ஒதுக்காமல்இழுத்தடித்ததற்காக, அரசுத் தேர்வுகள் இயக்குனர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனர தேர்வுக்குழு செயலர் ஆகியோர் 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.
மதுரை கோசாகுளத்தை சேர்ந்த பிளஸ் 2மாணவி அம்ரிதா. இவரது தந்தை ஜெயக்குமார்ஏற்கனவே தாக்கல் செய்த மனு: பிளஸ் 2 தேர்வு வேதியியல் பாடத்தில், அம்ரிதாவிற்கு 195 மதிப்பெண் கிடைத்தது. "கீ' விடைகளை ஒப்பிட்டு பார்த்தார். வினா எண் (57, 65 (ஏ) 68 (ஏ) க்கு, சரியாக விடையளித்தும், 4 மதிப்பெண் வழங்கவில்லை. மறு மதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்கி, மருத்துவ (எம்.பி.பி.எஸ்.,) படிப்பிற்கு அனுமதிக்கஉத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.மணிக்குமார் உத்தரவு:
அம்ரிதாவிற்கு அரசுத் தேர்வுகள்துறை இயக்குனர், தகுந்த மதிப்பெண் வழங்க வேண்டும்.
திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பெண் விபரத்தை, மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு செயலருக்கு தெரிவிக்க வேண்டும். அதன்படி, "கட்-ஆப்' தரவரிசை பட்டியலை,
மாற்றி அமைத்து வெளியிட வேண்டும். தகுதி பெறும் பட்சத்தில், மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், என்றார். இதை எதிர்த்து அரசுத்தரப்பில், "மதிப்பெண் வழங்குமாறு உத்தரவிடும் அதிகாரம் கோர்ட்டிற்கு இல்லை. நிபுணர் குழு பரிந்துரைப்படிதான் வழங்க முடியும். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இதில், நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் கொண்ட பெஞ்ச் உத்தரவு: மாணவியின் விடைத்தாளை, நிபுணர் குழு மதிப்பீடு செய்து, 3.5 மதிப்பெண் வழங்க பரிந்துரைத்தது. அரை, முக்கால் மதிப்பெண இடும்போது, அதை முழுமையாக்கி வழங்க விதிகளில் இடம் உண்டு. மாணவிக்கு தற்போது, வேதியியலில் 199 மதிப்பெண் கிடைத்துள்ளது. இந்த திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை, மருத்துவக் கல்வி இயக்குனரக
தேர்வுக்குழு செயலருக்கு, அரசுத் தேர்வுகள் இயக்குனர் அனுப்ப வேண்டும். மாணவி பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர். அவரது "கட்-ஆப்' மதிப்பெண்- 197. "மாணவிக்கு,அரசு மருத்துவக்
கல்லூரியில் இடம் ஒதுக்க வேண்டும்' என, ஆக., 21 ல், ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டது. மறுநாள், மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு செயலர், "திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலின் உண்மைத தன்மையை ஆராய, அரசு தேர்வுகள் துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.
இதுவரை அரசுத் தேர்வுகள் இயக்குனரகத்தில் இருந்து பதில் இல்லை. மாணவர்களின் விடைத்தாட்கள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகிறது? என்பதற்கு, இது நல்ல உதாரணம்.
மறு மதிப்பீடும் சரியாக மேற்கொள்ளவில்லை. மாணவி, ஐகோர்ட்டை அணுகியதால், உரிய மதிப்பெண்கிடைத்துள்ளது. ஏற்கனவே, மருத்துவப் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், மதிப்பெண் பட்டியல்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க, தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு அனுப்பவில்லை. இம்மாணவியின்மதிப்பெண் பட்டியலை மட்டும் அனுப்பி, பாகுபாடு காட்டியுள்ளனர். மாணவி, 3 மாதங்களாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இம்மாணவிக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் 30 ஆயிரம் ரூபாய்; மருத்துவக்கல்வி இயக்குனரக தேர்வுக்குழு செயலர் 5,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மாணவிக்கு எம்.பி.பி.எஸ்.,
படிக்க இடம் ஒதுக்க வேண்டும். அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

Sourrce : dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக