ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

கோவை மாநகராட்சி பள்ளி ஆங்கிலப் பாடஆசிரியர்களுக்கு, "இங்கிலீஷ் ஹெல்பர்' டிஜிட்டல்பாடத்திட்டம் குறித்து பயிற்சி


கோவை மாநகராட்சி பள்ளியில், "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்'சார்பில், பல்வேறு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநகராட்சி பள்ளி மாணவர்களின் ஆங்கில
அறிவையும், பேச்சு திறனையும் மேம்படுத்த "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்' சார்பில், "இங்கிலீஷ் ஹெல்பர்'என்ற "சாப்ட்வேர்' புதிதாக நிறுவப்பட்டுள்ளது.ஒப்பணக்கார வீதி (பெண்கள்), ஆர்.எஸ்.புரம், ரத்தினபுரி,ராமகிருஷ்ணாபுரம், பீளமேடு, ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளிலும், செல்வபுரம்(பெண்கள்), கே.கே.புதூர், ராமலிங்கம்காலனி, கோவில்மேடு, புலியகுளம், வரதராஜபுரம், அனுப்பர்பாளையம் ஆகிய உயர்நிலைப்பள்ளிகளில் "இங்கிலீஷ் ஹெல்பர்' வகுப்பு துவங்கப்படுகிறது. இப்பள்ளில் 6-8ம்
வகுப்பு வரையுள்ள 2424 மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு முன்,ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது."அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்'
நிர்வாகி அலெக்ஸாண்டர் வரவேற்றார். டில்லி "இங்கிலீஷ் ஹெல்பர்' நிறுவன மேலாளர்
கல்பனா பேசியதாவது:மாநில அரசின் பாடத்திட்டம் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. "இங்கிலீஷ்ஹெல்பர்' முறையில், "ரீடு டூ மி' என்ற பெயரிலுள்ள சாப்ட்வேரில் 6 - 8 ம் வகுப்பு வரையிலும் மூன்று பருவத்துக்கான பாடங்கள் அடங்கியுள்ளன. எந்த பாடத்தை வேண்டுமானாலும்தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு வார்த்தையை தேர்வு செய்தால், அதற்கான இணைச்சொல், எதிர்ச்சொல்,பொருள், உச்சரிப்பு போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். ஒரு வாக்கியத்தை தேர்வு செய்தால், அதற்கான அர்த்தத்தை பெறலாம். பாடத்திட்டத்திற்கான புகைப்படங்கள், 12 வகையான அகராதிகள் உள்ளன.
அனைத்து விளக்கங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.மாணவர்கள் பயிற்சியின் போது, "ஹெட் போன்'பொருத்திக்கொள்ள வேண்டும்; அவர்களின் ஆங்கில வார்த்தை உச்சரிப்புகள் கம்ப்யூட்டரில் பதிவாகும். இதன்மூலம் மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு திறன் மேம்படும். பாடங்களை படித்தும், பார்த்தும், அர்த்தம்புரிந்தும் படிக்கும் போது, எளிமையாக இருப்பதுடன், திறனை வளர்த்துக்கொள்ளவும் உதவும். இவ்வாறு,கல்பனா பேசினார்.

பயிற்சி வகுப்பு குறித்து, ஒக்கிலியர் காலனி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பிரமிளா கூறுகையில்,
""ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி பாணியில் பாடம் கற்பிக்கிறோம். "இங்கிலீஷ் ஹெல்பர்' திட்டத்தால், ஆங்கில உச்சரிப்பு ஒரே மாதிரி இருக்கும். ஆசிரியர், மாணவர் இருதரப்புக்கும் எளிதாக இருக்கும். இந்தமுறையை கடைபிடிக்கும் போது, மாணவர்கள் "ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்புகளுக்கு செல்லவேண்டியதில்லை,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக