சனி, 24 ஆகஸ்ட், 2013

14 LAKHS CANDIDATES FOR. TNPSC. GROUP 4 EXAM

 தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) நடைபெறவுள்ள குரூப் 4
காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை 14 லட்சம் பேர்
எழுதுகிறார்கள். இந்தத் தேர்வு 244 மையங்களில் நடைபெறுகிறது. புதிய நடைமுறையாக தேர்வு மையங்களை எளிதாக அடையாளம் காண
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நவநீத கிருஷ்ணன்
தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குரூப் 4 பணியிடங்கள் 5 ஆயிரத்து 566 காலியாக உள்ளன. இந்த
காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை கடந்த ஜூன் 14
ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வை எதிர்கொள்ள மொத்தம் 17 லட்சம் பேர்
விண்ணப்பித்திருந்தனர். ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை 3 லட்சம் பேர்
அளித்திருந்தனர். தேர்வு எழுத மொத்தம் 14 லட்சம்
தகுதி பெற்றுள்ளனர்.சிறப்பு ஏற்பாடு: விண்ணப்பங்கள் பெறப்பட்டதற்கான ஒப்புகைச் சீட்டுகளும் முதல் முறையாக
இணையதளத்திலேயே (www.tnpsc.gov.in, www.tnpscexams.net)
வெளியிடப்பட்டது. குரூப் 4 தேர்வு தமிழகத்தில் 244 மையங்களில் 4
ஆயிரத்து 755 தேர்வுக் கூடங்களில் நடைபெறுகிறது. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக் கட்டணம்
மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணைய இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.தேர்வுக் கூடத்தை எளிதாக அறிந்து கொள்ளும்
வகையில், தேர்வுக்கூட முகவரியுடன் அதன் தொலைபேசி எண் மற்றும் அதன்
அருகில் அமைந்துள்ள பிரபலமான இடத்தின் பெயரும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் இடம்பெற்றுள்ளது. தேர்வர்களின் வசதிக்காக தேர்வுக்கூட நுழைவுச்
சீட்டில் முதல் முறையாக இத்தகைய
சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்வுக்கென 4 ஆயிரத்து 755 முதன்மை கண்காணிப்பாளர்களும்,
சுமார் 70 ஆயிரத்து 230 கண்காணிப்பாளர்களும் தேர்வுப் பணியில் ஈடுபட
உள்ளனர். தொலை தூரங்களில் அமைந்துள்ள தேர்வுக் கூடங்கள் மற்றும்
சர்ச்சைக்குரிய தேர்வுக் கூடங்கள் இணையவழியாக அந்தந்த மாவட்ட
ஆட்சியர்கள் மற்றும் தேர்வாணைய தலைமையகத்திóன் முதன்மைக்
கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் கண்காணிக்கப்படும். செல்போனுக்குத் தடை: அனைத்துத் தேர்வுக் கூடங்களின் நடவடிக்கைகளும்
ஒளிப்பது செய்யப்படும். ஒவ்வொரு தேர்வுக் கூடத்துக்கும்
ஒரு ஒளிப்பதிவு கருவி வீதம் சுமார் 4 ஆயிரத்து 500 கருவிகள்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு எழுதச் செல்லும் விண்ணப்பதாரர்கள்
செல்போன் உள்ளிட்ட எந்த மின்னணுச் சாதனங்களையும் தேர்வுக்
கூடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு எழுதுவதில் இருந்தும் விலக்கிó
வைக்கப்படுவர் என்று தேர்வாணையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக