வியாழன், 22 ஆகஸ்ட், 2013

TNTET 2013 NEWS:  டி.இ.டி., வினாத்தாள் மோசடி

           
டி.இ.டி., வினாத்தாள் மோசடி தொடர்பாக மேலும், ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர்.டி.இ.டி., வினாத்தாள் மோசடி தொடர்பாக தளியை சேர்ந்த அசோக்குமார் என்பவர், எஸ்.பி.,ஆஸ்ராகர்க்கிடம் புகார் கொடுத்தார். அவரின் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி., பரமேஸ்வரா தலைமையிலான தனிப்படை போலீஸார் கிருஷ்ணகிரியை சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் கணபதி, அவருடைய மனைவி எஸ்டர்,33, ஓசூர் அடுத்த காமன்தொட்டியை சேர்ந்த கிருஷ்ணப்பா,42, ஓசூர் அடுத்த பஸ்தியை சேர்ந்த (சாக்ஷி நாளிதழ் நிருபர்) சந்திரசேகர்,33, பாலக்கோட்டை அடுத்த ஜக்கசமுத்திரத்தை சேர்ந்த டாஸ்மாக் சேல்ஸ்மேன் அசோகன்,37, பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த இருளப்பட்டை சேர்ந்த இளையராஜா,30, ஆகிய, ஆறு பேரை கடந்த, 17ம் தேதி கைது செய்தனர்.அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணையில் வினாத்தாள் மோசடி தொடர்பாக போலீஸார் நேற்று முன்தினம் அரூர் அம்பேத்கர் காலனியை சேர்ந்த வெங்கட்செல்வன், 34, அவரது தம்பி சீனிவாசன், 28, மற்றும் ஜேம்ஸ், 41, அரூர் பொய்யப்பட்டியை சேர்ந்த துரைப்பாண்டியன், 33, பாப்பிசெட்டிப்பட்டியை சேர்ந்த வெங்கட்ராமன், 29, நாசன்கொட்டாயை சேர்ந்த ரமேஷ், 28, பென்னாகரத்தை சேர்ந்த கோபி, 38, உள்ளிட்ட, பத்து பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்

.இதில் டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் வெங்கடசெல்வன், சீனிவாசன், ஜேம்ஸ், வெங்கட்ராமன், ரமேஷ் ஆகியோருக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்கள், ஐந்து பேரையும் கைது செய்தனர்.இவர்களிடம் விசாரணை செய்ததில், டி.இ.டி., இராண்டாம் தாள் தேர்வில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வினாக்களில் பெரும்பாலான வினாக்கள் தேர்வில் வந்துள்ளது தெரியவந்துள்ளது.இதையடுத்து டி.இ.டி., வினாத்தாள் மோசடி தொடர்பாக போலீஸாரின் விசாரணை வளையத்திற்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள சில அலுவலர்களும் வரவுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.மேலும் டி.இ.டி., வினாத்தாள் மோசடி தொடர்பாக இதுவரை, ஒரு பெண் உட்பட, 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளது குறிப்பிட தக்கது.

        டி.இ.டி.,வினாத்தாள் மோசடி தொடர்பாக, முக்கிய குற்றவாளியை கஷ்டடி எடுத்து விசாரிக்க, போலீஸார் முடிவு செய்துள்ளனர். தனிப்படை போலீஸார்   விசாரணையில் டி.இ.டி., வினாத்தாள் மோசடியில், சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு முக்கிய பங்கிருப்பது தெரியவந்தது. மேலும், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பது குறித்த விபரங்களை அறிய, தலைமறைவாக உள்ள கண்ணனை தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர்.

மேலும், கண்ணன் குறித்தும், இந்த மோசடியில் தொடர்புடைய முக்கியமானவர்களின் விபரங்களை அறியவும், டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளையராஜாவை கஷ்டடியில் எடுத்து விசாரிக்க, தனிப்படை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

Source : dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக