செவ்வாய், 3 செப்டம்பர், 2013

அரசு தொடக்கப்பள்ளிகளில் இரு மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் .....,,ஒரு பள்ளியில் ஒருவருக்கு, இரு ஆசிரியர் !

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் மூன்று பள்ளிகளில்
இரண்டு மாணவர்களுக்கு, இரண்டு ஆசிரியர்களும், ஒரு பள்ளியில் ஒரு மாணவருக்கு,
இரண்டு ஆசிரியர்களும் உள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை சரிசெய்து வரும்நிலையில், ஒருபுறம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும், ஆசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கையைவிட
அதிகரித்தும் வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் குமிழியேந்தல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, திருவாடானை கீழகோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கட்டியனேந்தல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய 
பள்ளிகளில் இரண்டு மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். 

திருவாடானை ஒன்றியம் கிளியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஒரு மாணவருக்கு,
இரண்டு ஆசிரியர்களும், பரமக்குடி ஒன்றியத்தில்கவுரிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, போகலூர் ஒன்றியத்தில் சேமனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் தலா மூன்று மாணவர்களுக்கு, இரண்டு ஆசிரியர்களும் உள்ளனர். குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில், மாணவர்கள் விடுப்பு எடுத்தால், பள்ளிக்கு விடுமுறை கணக்கில்
கொண்டு வரவேண்டியுள்ளது. இதனால் ஒரு மாணவர் உள்ள பள்ளியில், மாணவரை அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க முயற்சித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட         தொடக்கக்கல்வி அலுவலர்(பொறுப்பு) பானுமதி கூறுகையில், ""கூடுதல் மாணவர்களை ,   
   சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக