வெள்ளி, 18 அக்டோபர், 2013

குரூப் 1 பிரதானத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

குரூப் 1 பிரதானத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
அறிவித்துள்ளது.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி. வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 1 பிரதானத் தேர்வு, அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில்
சென்னை தேர்வு மையத்தில் நடைபெறுகிறது. இந்தத்
தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் ஹால் டிக்கெட்டுகளை தேர்வாணைய
இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு மூன்று நாள்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1
மணி வரை நடைபெறுகிறது. தேர்வாணைய இணையதளங்கள்:பதிவிறக்கம் செய்வதில்
 ஏதேனும் சந்தேகம்இருந்தால் மின்னஞ்சல்மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறைதீர்க்கும் கட்டணமில்லாத தொலைபேசிஎண்ணான 18004251002-இன் 
மூலமாகவோ கேட்டுத் தெளிவு பெறலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக