வெள்ளி, 18 அக்டோபர், 2013

பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்புக்
கட்டணத்தை ரத்து செய்ததன் மூலம், பள்ளிகளுக்கு ஏற்படும்
இழப்பீட்டை ஈடு செய்வதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை செயலாளர்
சபீதா வெளியிட்டுள்ளார். தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி
பெறும் பள்ளிகளில் ஆறாம்வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களிடம் 
ஆண்டுதோறும்சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டணம்
ரத்து செய்யப்பட்டது. அதனால் பள்ளிகளுக்கு ஏற்படும்
நிதி இழப்பை அரசே ஈடு செய்யும் வகையில் உத்தரவு வெளியிடப்பட்டது.
அதன்படி, கடந்த 2011-12-ஆம் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு வழங்கிட ரூ.21
கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், 2012 முதல்
தொடர்ச்சியாக இரண்டு கல்வியாண்டுகளுக்கு இழப்பீட்டு நிதி ரூ.41
கோடியாக இருந்தது. இந்த நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக