வியாழன், 21 நவம்பர், 2013

முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று (21.11.2013) விசாரணை

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டதுஇந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்
. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் .தனி  நீதிபதியின் தீர்ப்புக்கு சென்ற வாரம் நீதியரசர்கள்  எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால தடை விதித்து  வழக்கினை ஒத்திவைத்தது

அவ் வழக்கு .நாளை ( நவம்பர் 12 ந் தேதி) வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன்   ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வரவிருந்தது.அன்று நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன்    அடங்கிய  அமர்வுக்கு விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை நடைபெறவில்லை. இதற்கிடையில் அவ்வழக்கு  இவ்வாரம் மீண்டும் விசாரணைக்கு வரக்கூடும் என பலரும் எதிபார்த்திருந்த நிலையில் தலைமை நிதிபதி நீதி அரசர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் இன்று 21.11.2013அவ் வழக்கு விசாரணைக்கு வருகின்றது என்ற தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
.அரசின் நிலைப்பாடும் எதிர்மனுதாரர்களின் நிலைப்பாடும் தெரியவரும் .இன்று வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வு நமக்கு மாலை தெரியவரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக