வியாழன், 21 நவம்பர், 2013

குரூப் 2 வினாத்தாள் வழக்கு: துணை கமிஷனரை விசாரிக்க அனுமதி

குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கில் கைதான, வணிக வரித்துறை துணை கமிஷனரை, ஐந்து நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, கோவை, சி.பி.சி..டி., போலீசாருக்கு, ஈரோடு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில், டி.என்.பி.எஸ்.சி., மூலம், 3,631 பணியிடங்களுக்கு, 2012 ஆக., 12ல், குரூப் 2 தேர்வு நடந்தது. இதில், 6.40 லட்சம் பேர் பங்கேற்றனர். ஈரோடு மற்றும் தர்மபுரி மாவட்டம், அரூரில், தேர்வுக்கு முன், வினாத்தாள் வெளியானதால் தேர்வு ரத்தானது. இவ்வழக்கில், இதுவரை, 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கின், 41வது குற்றவாளியாக, சென்னை, வணிக வரித்துறை துணை கமிஷனர், ஞானசேகரனை, 31, கோவை, சி.பி.சி..டி., போலீசார், கடந்த வாரம் கைது செய்து, ஈரோடு சிறையில் அடைத்தனர். துணை கமிஷனரை, ஏழு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, சி.பி.சி..டி., போலீசார்,நேற்று, ஈரோடு, ஜே.எம்., 3 நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
நீதிபதி கவிதா மனுவை ஏற்று, துணை கமிஷனரை, ஐந்து நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக