வியாழன், 14 நவம்பர், 2013

தமிழ் இலக்கியம்-4

அறிவோம் அழகியத் தமிழை!
பத்துப்பாட்டு
* திருமுருகாற்றுப்படை, பெருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன பத்துப்பாட்டு நூல்கள் ஆகும்.
* திருமுருகாற்றுப்படையின் வேறு பெயர் புலவராற்றுப்படை ஆகும்.
* பெரும்பாணாற்றுப்படையின் வேறு பெயர் பாணாறு ஆகும்.
* முல்லைப்பாட்டின் வேறு பெயர் நெஞ்சாற்றுப்படை ஆகும்.
* குறிஞ்சிப்பாட்டு பெருங்குறிஞ்சி என்றும் அழைக்கப்படும்.
* பட்டினப்பாலையை வஞ்சி நெடும்பாட்டு என்றும் அழைப்பர்.
* மலைபடுகடாம் என்பதன் வேறு பெயர் கூத்தராற்றுப்படை ஆகும்.
* பத்துப்பாட்டில் உள்ள அக நூல்களின் எண்ணிக்கை மூன்று, புற நூல்களின் எண்ணிக்கை ஆரு ஆகும்.
* பத்துப்பாட்டில் அகமா, புறமா என்ற கருத்து வேறுபாட்டைத் தோற்றுவித்த நூல் நெடுநல்வாடை.
* பத்துப்பாட்டில் சிறிய நூல் முல்லைப்பாட்டு, மிகப்பெரிய நூல் பொருநராற்றுப்படை.
* ஆற்றுப்படை நூல்களில் மிகப்பெரியது மலைபடுகடாம்.
* திருமுருகாற்றுப்படையை இயற்றியவர் நக்கீரர். நக்கீரரால் பாடப்பட்ட கடவுள் முருகன்.
* திருமுருகாற்றுப்படை கூறும் முருகனின் அறுபடை வீடுகள் 1.திருப்பரங்குன்றம் 2,திருச்செந்தூர் 3. திருவாவினன்குடி (பழனிமலை) 4. சுவாமிமலை 5. குன்றுதோறாடல் 6..பழமுதிர்ச்சோலை ஆகியன.
* பொருநராற்றுப்படையை இயற்றியவர் முடத்தாமக் கண்ணியார். வேடம் தாங்கி நடிப்வர்கள் பொருநர்கள் ஆவர்.
* சிறுபாணாற்றுப் படையை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார். இந்நூல் கடையெழு வள்ளல்களைப் பற்றிக் குறுகிறது.
* பேகன் மயிலுக்குப் போர்வை தந்தான், அதியமான் நெல்லிக்கனியை ஒளவைக்கு தந்தான் என்பன போன்ற செய்திகளை சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.
* பெரும்பாணாற்றுப்படையை இயற்றியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் ஆவார். பட்டினப் பாலையைப் பாடியவரும் இவரே.
* திருவெஃகா என்பது காஞ்சிபுரம் என்ற நகரம் என்று பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.
* நப்பூதனார் முல்லைப்பாட்டை இயற்றினார். மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியின் ஆசிரியர் ஆவார்.
* நெடுநல்வாடையைப் பாடியவர் நக்கீரர். நெடுநல் வாடையில் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன்.
* கபிலர் குறிஞ்சிப்பாட்டை இயற்றினார். இது ஒரு அகநூல். 99 பூக்கள் குறித்துக் கூறும் நூல் குறிஞ்சிப்பாட்டு ஆகும் அத்துடன் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் குறிஞ்சி மலர் ஆகும்.
* பட்டினப்பாலையை இயற்றியவர் கடியலூர் உருட்திரங்கண்ணனார். பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினத்தைக் குறிக்கும் இந்நகருக்கு பூம்புகார், புகார் என்று வேறு பெயர்களும் உண்டு.
* புகார் நகரத்தில் நடைபெற்ற வணிகத்தைப் பற்றி பட்டினப்பாலை வரிவாக எடுத்தியம்புகிறது.
* மலைபடுகடாம் நூலை இயற்றியவர் பெருங்கெளசிகனார். பண்டைய இசைக் கருவிகள் பற்றி மிகுதியாகக் கூறும் நூல் மலைபடும்கடாம்.
* பெண் கொலை புரிந்த நன்னன் பற்றி மலைபடுகடாம் குறிப்பிடுகிறது.
* பத்துப்பாட்டில் அகநூலாக இருந்தும் புறச் செய்திகளை மிகுதியாகக் கூறும் நூல் பட்டினப்பாலை.
* பண் பாடுவோன் பாணன், பாணன் மனைவி பாடினி, விறவி. பாணனிடன் சேர்ந்து பாடுபவள் பாடினி. பாணனின் பாட்டுக்கு ஆடுபவள் விறலி. ஆடும் ஆண்கள் கூத்தர்கள். வேடந்தாங்கி நடிப்போர் பொருநன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக