சனி, 16 நவம்பர், 2013

சச்சினுக்கு பாரத ரத்னா விருது !

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு மத்திய அரசு இன்று மாலை பாரதரத்னா விருதை வழங்கி கவுவரவித்தது. விளையாட்டு துறையில் முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர் என்ற பெருமை இவருக்கு கிட்டியுள்ளது. இவருடன் வேளாண் விஞ்ஞானி சி.என்.ஆர்.,ராவ் என்பவருக்கும் இந்த பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக பலரும் வலியுறுத்தி எதிர்பார்த்து காத்திருந்தனர். இன்று இந்த விருதை தனது தாயாரிடம் சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கண்ணீருடன் விடை பெற்றார் சச்சின் : கிரிக்கெட் அரங்கில் இருந்து கண்ணீருடன் சச்சின் டெண்டுல்கர் இன்று விடைபெற்றார் . இவரது 200வது மற்றும் கடைசி டெஸ்டில், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்டம் முடிந்ததும் கையை அசைத்தப்படி ரசிகர்களை பார்த்து கண்ணீர் மல்க நடந்து சென்றார். இவருடன் விராத் கோஹ்லியும் மைதானத்தில் நின்று கொண்டிருந்த சச்சின் மகன் ஆகியோரும் கண்ணீர் விட்டபடி திகைத்து போய் நின்றனர். கிரிக்கெட் உலகில் சாதனை மன்னன் இன்றுடன் ஓய்வு பெற்றார். கிரிக்கெட் இல்லாத எனது வாழ்வை நினைத்து பார்க்க முடியவில்லை என்று அவர் ஓய்வு குறித்து சச்சின் கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பிய நன்றி கடிததத்தில் கூறியிருந்தார். சல்யூட் சச்சின், குட்பை.,
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற. கோல்கட்டா டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என, தொடரில் முன்னிலை வகிக்கித்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 182, இந்தியா 495 ரன்கள் எடுத்தன. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்து, 270 ரன்கள் பின்தங்கி இருந்தது. கெய்ல் (6) அவுட்டாகாமல் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 187 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ஆட்ட நாயகன் :

ஆட்ட நாயகன் ஓஜாவும் ( 10 விக்கெட்) , தொடர் நாயகனாக ரோகித்சர்மாவும் ( 2 டெஸ்ட் போட்டியில் சதம் ) தேர்வு செய்யப்பட்டனர். ஆட்டம் முடிந்ததும் சச்சினுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ரசிகர்களுக்கு சச்சின் நன்றி : தாய் - தந்தைக்கு மரியாதை: எனது வாழ்வில் எனக்கு வழிகாட்டியாக இருந்த எனது தந்தை, தாய் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர். இந்நேரத்தில் எனது தந்தை இல்லையே என்று வருத்தமாக உள்ளது. நான் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டேன். இதனால் நான் சாதிக்க முடிந்தது. 11 வயது முதல் துவங்கிய எனது 24 வருட பயணம் நிறைவு பெறுகிறது. எனது வளர்ச்சியில் சகோதரருக்கும் பங்கு உண்டு, எனது மனைவி உறுதுணையாக இருந்தார். 2 குழந்தைகள் வைரம் போன்றவர்கள். பயிற்சியாளர்கள், சச்சின், சச்சின் என அழைத்து அன்பு ரசிகர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பி.சி.சி.., மற்றும் தேர்வாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் எனக்கு பல முறை ஆதரவாக இருந்துள்ளனர். கிரிக்கெட் ஆட்டத்தை நான் டி.வி., மூலம் பார்த்து அதிகம் கற்று கொண்டேன்.


எனது சகோதரி எனக்கு முதல் பேட் பரிசாக வழங்கினார். எனது அணி எனது குடும்பம் போன்றது. எனது பள்ளி காலக்கட்டத்தில் இருந்து எனக்கு மீடியா அளித்த ஆதரவுக்கும், அனைத்து போட்டோகிராபர்களுக்கும் மாபெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.குட்பை என முடித்தார்.
மண்ணை தொட்டு வணங்கினார்: அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்ததும் சச்சின் மீண்டும் மைதானத்திற்கு வந்து குனிந்து இரண்டு கைகளால் தொட்டு கண்ணில் ஒத்தி வணங்கிய படி சென்றார்.
மனதிற்கு கஷ்டமாக உள்ளது : ஒமர் : சச்சின் இல்லாத கிரிக்கெட் போட்டிகளை நினைத்து பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது என, காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கூறி உள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சச்சினை பாராட்டும் வகையில் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், 'சச்சின் ஒரு உண்மையான 'ஜெண்ட்டில்மேன்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நான் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகன் இல்லை என்றாலும், சச்சின் ஓய்வு பெறுவது மனதிற்கு கஷ்டமாக உள்ளது, என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக