வியாழன், 26 டிசம்பர், 2013

சென்னை பல்கலை. ஆசிரியர் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா?


சமூக நீதி பாதுகாக்கப்படும் வகையில் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்
தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையே எழுந்துள்ளது.
 பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ள புதியஇடஒதுக்கீடு சுழற்சி முறை (200 பாயின்ட் ரோஸ்டர்) காரணமாக,பேராசிரியர் பணியில் எம்.பி.சி., பி.சி., மற்றும் எஸ்.சி. பொதுபபிரிவினருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்றும் அவர்கள் புகார்தெரிவிக்கின்றனர். சென்னைப் பல்கலைக்கழகம் 52 துறைகளில் 96 ஆசிரியர் பணியிடங்களுக்கானவிண்ணப்பங்களைக் கோரும் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு: அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்கள்: 96 இதில் பொதுப் பிரிவுக்கு: 51 இடங்கள் தாழ்த்தப்பட்ட பிரிவு (முந்தைய நியமனத்தில் நிரப்பப் படாத எஸ்.சி. பொதுப்
பிரிவு காலியிடம்): 3 எஸ்.சி. அருந்ததியர் - மகளிர்: 27 மிகவும் பிற்பட்ட பிரிவு மற்றும் சீர்மரபினர்: 11 பிற்படுத்தப்பட்ட பிரிவு (முந்தைய நியமனத்தில் நிரப்பப்படாத பி.சி.காலியிடம்): 1 பிற்படுத்தப்பட்ட பிரிவு: 3 இந்த விளம்பரத்தின்படி, அனைத்து சமூகப் பிரிவினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டிய சுழற்சி முறை, பொதுப்பிரிவு மற்றும் அருந்ததியர்மகளிருக்கு மட்டுமே அதிக அளவில் ஒதுக்கப்பட்டு, எஸ்.சி. (பொது),எம்.பி.சி., பி.சி. பிரிவினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்கின்றனர் பேராசிரியர்கள்.
 இது குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகள் கூறியது: இடஒதுக்கீட்டில் ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் உள் ஒதுக்கீடு வந்ததன் காரணமாகவே தமிழக அரசு 200 பாயின்ட் சுழற்சி முறையை அறிமுகம் செய்தது. மேலும், அரசுத் துறைகளில் ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்களை நிரப்ப 200 பாயின்ட் சுழற்சி முறை ஏற்றது. ஆனால், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு துறையிலும் 3 உதவிப் பேராசிரியர்கள், 2 இணைப் பேராசிரியர்கள், ஒரு பேராசிரியர் என அதிகபட்சம் 6 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருக்கும். இதுபோன்று குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அறிமுகம் செய்த புதிய முறை ஏற்றதல்ல. உதாரணமாக, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் உள்ள 6 ஆசிரியர் பணியிடங்களில், 2 உதவிப் பேராசிரியர் பணியிடம் காலியாக உள்ளது என்றால், 100 பாயின்ட் ரோஸ்டர் முறையை பின்பற்றும்போது முதல் பணியிடம் பொதுப் பிரிவினருக்கும், இரண்டாவது பணியிடம் எஸ்.சி. பிரிவினருக்கும் வழங்கப்படும். பின்னர் மீண்டும் ஆங்கிலத் துறையில் ஒரு உதவிப் பேராசிரியர் பணியிடம் காலியாகும்போது, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எம்.பி.சி.
பிரிவு விண்ணப்பதாரருக்கு ஒதுக்கப்படும். அடுத்த முறை பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்படும். இந்த நிலையில், 200 பாயின்ட் சுழற்சி முறையை பின்பற்றும்போது இடஒதுக்கீட்டின் கீழ் சமூகப் பிரிவினர் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்படாது. அதாவது ஒரு துறையில் 2 பணியிடம் காலியாகிறது என்றால், முதல் பணியிடம் பொதுப் பிரிவினருக்கும், இரண்டாம் பணியிடம் எஸ்.சி.பிரிவினருக்கும் வழங்கப்படும். சில மாதங்களுக்குப் பின் அதே துறையில்
மீண்டும் 2 பணியிடம் காலியாகும்போது, முதல் பணியிடம் பொதுப் பிரிவினருக்கும், இரண்டாம் பணியிடம் எஸ்.சி. பிரிவினருக்குமே வழங்கப்படும். அந்தத் துறையில் எப்போது 4-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடம் உருவாகிறதோ, அப்போதுதான் அனைத்து சமூகத்தினருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும். இந்த புதிய சுழற்சி முறை தொடர்பாக நீதிமன்றத்தில் அண்மையில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மீண்டும்
அதே சுழற்சி முறை அடிப்படையில் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப பல்கலைக்கழகம் முயற்சி எடுத்து வருவது சமூக நீதிக்கு எதிரானது. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றமும் தமிழக அரசும் உரிய தீர்வு காணவேண்டும் என்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக