வியாழன், 30 ஜனவரி, 2014

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.

பகல் 12 மணிக்கு கவர்னர் உரையுடன் பேரவை நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும், கவர்னர் ரோசய்யாவின் உரையுடன் பேரவை தொடங்குகிறது. அவர், ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். அதில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும். அதன் தமிழாக்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் தனபால் வாசிப்பார்.

அத்துடன் இன்றைய கூட்டம் முடியும். இதை தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழுக் கூடி கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பதை முடிவு செய்யும்.

அதை தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். விவாதங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலுரை வழங்குவார். இந்த கூட்டத்தொடர் ஒரு வாரம் நடக்கும் என்று தெரிகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக