திங்கள், 24 பிப்ரவரி, 2014

முதல்–அமைச்சர் இன்று (திங்கட்கிழமை) 66– வதுபிறந்தநாளை கொண்டாடுகிறார்: எனது பிறந்தநாளையொட்டி தொண்டர்கள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்தால், அது பயன்பெறுவோரை மகிழ்விக்கும், என்னை மேலும் உற்சாகப்படுத்தும்- முதல்–அமைச்சர்

முதல்–அமைச்சர் இன்று (திங்கட்கிழமை) 66– வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பிறந்தநாளில் முதுகலை தமிழாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர்கள் அரசுப்பணியில் சேர உள்ளனர்
மாண்புமிகு முதல்வர் அவர்களையும் இன்று பணியில் சேரவிருக்கும் அனைவரையும் தமிழ்த்தாமரைவாழ்த்துகின்றது.

முதல்–அமைச்சர் பிறந்தநாளயொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். 'எனது பிறந்தநாளையொட்டி தொண்டர்கள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்தால், அது பயன்பெறுவோரை மகிழ்விக்கும், என்னை மேலும் உற்சாகப்படுத்தும்' என்று முதல்– அமைச்சர் ஜெயலலிதா பல முறை தொண்டர்கள் மத்தியில் கூறியுள்ளார்.
அவரின் வேண்டுகோளின்படி அ.தி.மு.க.வினர் பல்வேறு நல உதவி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலும் வர இருப்பதால், 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறித்து முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பரிசளிக்கும் வகையில், நாடும் நமதே, 40–ம் நமதே என்ற முழக்கத்தோடு முதல்– அமைச்சரின் பிறந்தநாளை கொண்டாட உள்ளனர்.
அதன்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் உற்சாகமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாட உள்ளனர். தமிழகம் முழுவதும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்தி சுவரொட்டிகளையும், சாலைகளில் தோரணங்களையும் கட்டி உள்ளனர்.
இதனால் தமிழகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு உள்ளது. நலத்திட்ட உதவிகள் தமிழகம் முழுவதும் அன்னதானம், ரத்ததானம், மருத்துவமுகாம், விளையாட்டு போட்டிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாட உள்ளனர். மேலும் முதியோர், ஆதரவற்றோர் நல உதவிகள், மாணவ–மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படுகிறது.
முதல்–அமைச்சரின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பேரில் அர்ச்சனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. தொண்டர்கள் ஏற்பாடு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி காலை 9.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தலைமை கழகத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் சிறப்புமலர் வெளியிடப்பட்டு, 66 கிலோ கேக் வெட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொள்கின்றனர்.
சென்னை தலைமை செயலகத்திற்கு செல்லும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அங்கு காணொலி காட்சி (வீடியோ காண்பரன்சிங்) மூலம் உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்துதுறை சார்பிலான நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார். புதியதாக கட்டப்பட்ட குடிசை மாற்றுவாரிய வீடுகளை திறந்து வைக்கிறார். உணவு மற்றும் கூட்டுறவு துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கிட்டங்கிகளை திறந்து வைக்கிறார். செங்கல்பட்டு மேம்பாலம், தகவல் தொழில் நுட்பம் சார்பிலான அரசு நகர்புற பொது இ– சேவை மையங்களையும் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் மற்றும் மருத்துவத்துறை சார்பிலான மருத்துவ முகாமை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழகம் சார்பில் மூட்டு உள்நோக்கு கருவி மற்றும் விளையாட்டு அறிவியல் மையத்தை ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பட அதிபர்கள் எல்.வி.பிரசாத், நாகிரெட்டியார், டி.வி.எஸ்.ராஜூ, கே.சுப்பிரமணியம், பி.சுப்பிரமணியம், பட அதிபர்–இயக்குனர் பி.ஆர்.பந்தலு, தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் மறைந்த டி.ராமானுஜம் ஆகிய 7 பேருடைய மார்பளவு சிலையையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.
இது தவிர சென்னை நகர் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் 5–ந் தேதி வரை பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திர பிரதேசம், கேரளா, மராட்டியம், அந்தமான் தீவுகள், புதுடெல்லி மற்றும் வெளிநாடுகளிலும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை தொண்டர்கள்


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக