வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

போலீஸ் பணியில் சேர தகுதியானவர்கள் யார்? : ஐந்து நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவு

"குற்ற வழக்கிலிருந்து ஒருவரை, சந்தேகத்தின் பலனை அனுபவிப்பதற்கு முன்,
விடுதலை செய்யப்பட்டிருந்தால் அல்லது வழக்கு விசாரணை முடிவடைவதற்கு முன்,
விடுவிக்கப்பட்டிருந்தால், அவர்களை, போலீஸ் பணியில் சேரத் தகுதியில்லாதவர்களாக கருதவேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்
உத்தரவிட்டது.
போலீஸ் நியமனத்தில் எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற, 17பேருக்கு, குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனக் கூறி, பணி வழங்க மறுப்பதால், வேலை வழங்க உத்தரவிடக் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனுக்கள் தாக்கல்செய்தனர்.
மாறுபட்ட தீர்ப்புகள் : மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, 2013ல் பிறப்பித்த உத்தரவு:குற்ற வழக்குகளில் சிக்கியவர்களுக்கு போலீஸ் வேலை வழங்குவது குறித்து, ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளில் ஒன்றுக்கொன்று, மாறுபட்டதாக உள்ளன. எந்த தீர்ப்பை பின்பற்றுவது என, தெளிவாக முடிவெடுக்க முடியாத நிலையில், அரசு குழப்பமடைந்துள்ளது. தற்போது, சட்டச் சிக்கல் எழுந்துள்ளது. தனி நீதிபதி விசாரித்தால், பொருத்தமாக இருக்காது. இவ்வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்
விசாரித்து முடிவெடுக்க, பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

மதுரை ஐகோர்ட் கிளை, 2004ல் துவங்கிய பின், முதல் முறையாக, நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.தமிழ்வாணன்,ஏ.செல்வம், எம்.சத்தியநாராயணன், பி.ராஜேந்திரன் கொண்ட பெஞ்ச் அமைக்கப்பட்டது. பணி விதிகளில்.. அவர்கள் உத்தரவு: குற்ற வழக்கிலிருந்து ஒருவரை, சந்தேகத்தின் பலனை அளித்து,விடுதலை செய்யப்பட்டிருந்தால் அல்லது வழக்கு விசாரணை முடிவடைவதற்கு முன், விடுவிக்கப்பட்டிருந்தால்,அவர்களை, போலீஸ் பணியில் சேர தகுதியில்லாதவர்களாக கருத வேண்டும் என, தமிழ்நாடு காவல் துறை பணி விதிகளில் உள்ளது. இதுபோல், பணியில் சேர தகுதியில்லாதவர்கள் என, மாநில அரசு உத்தரவிட்டிருந்தால், அதுவும் தவறில்லை. இது போன்ற சூழ்நிலையில், பணி நியமனம் செய்யும்அதிகாரி, சம்பந்தப்பட்டவர்களின் மனுக்களை நிராகரிக்க உரிமை உண்டு. அது சரியான நடைமுறையே என, ஏற்கனவே, மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. அதையே, நாங்கள் உறுதி செய்கிறோம்.

தற்போது, நீதிபதி எஸ்.தமிழ்வாணன், "வழக்கிலிருந்து விடுதலையானவர்களை, குற்றமற்றவர்களாக கருதவேண்டும். குற்றமற்றவர்களுக்கு, பணி வழங்க மறுப்பது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது' என, மாற்றுக்கருத்து தெரிவித்துள்ளார். இதுபோல், நீதிபதி ஏ.செல்வம் மாற்றுக் கருத்து தெரிவித்துள்ளார். இருவரின்கருத்துக்களையும், மரியாதையுடன் ஏற்கிறோம். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக