ஞாயிறு, 30 மார்ச், 2014

பிளஸ் 2 : ஏப்ரல் 1 முதல் முக்கிய படங்களுக்கான திருத்தும் பணி ஆரம்பம்

ஏப்ரல் 1 முதல் பிளஸ் 2 முக்கிய படங்களுக்கான திருத்தும் பணி ஆரம்பமாகின்றது விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை பின்பற்றுவதால் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 21 ம் தேதி முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்தாண்டு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் பல புதிய முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.கடந்தகாலங்களில் அறிவியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு மட்டுமே 'டம்மி' எண் பயன்படுத்தப்படும்.தற்பொழுது மாணவர்கள் எழுதும் விடைத்தாளில் பார்கோடிங் இடப்பட்டு மாணவர்களின் எண் அடங்கிய முகப்புத் தாள்
இணைக்கப்பட்டு இருந்தது. விடைத்தாள் திருத்தும் இடத்தில் இந்த முகப்புத் தாள் கிழிக்கப்பட்டு விடைத்தாளில் திருத்தும்ஆசிரியரே அதற்கான 'டம்மி' எண் போட்டு திருத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் ஒரு விடைத்தாளை கையில் எடுத்து 'டம்மி' எண் போடுவதில் துவங்கி திருத்தி மொத்த மதிப்பெண் போடும் வரை அனைத்து விஷயத்திலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது.இதில் ஆசிரியர் கவனமின்றி செயல்பட்டால்குறிப்பிட்ட விடைத்தாள் யாருடையது என்று கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து ஆசிரியர் கூறியதாவது,
.கடந்த ஆண்டுகளைக்காட்டிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.எனவே கூடுதல் நேரம் தேவைப்படுகின்றது.முக்கியப்பாடங்களை திருத்துவதற்கு தினமும் காலை 12 விடைத்தாள்களும் மாலையில் 12 விடைத்தாள்களும் வழங்கப்படும். புதியமுறையால் மாலை 6 மணிக்குள் அனைத்து விடைத்தாள்களும் திருத்தி முடிப்பது சற்று சிரமமே என்றார்.

விடைத்தாள்திருத்தும் பணிகள் ஈடுபட்டுள்ள . ஆசிரியர்கள் கூடுதல் கவனத்துடன் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் கூறினர்.






Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக