சனி, 26 ஏப்ரல், 2014

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணியில்,பங்கேற்காத ஆசிரியர்கள் குறித்த விவரப் பட்டியல், மாவட்டம் வாரியாக தாயாரகிறது.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும்
பணியில்,பங்கேற்காத ஆசிரியர்கள் குறித்த விவரப் பட்டியல், மாவட்டம் வாரியாக தாயாரகிறது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3 துவங்கி 25 வரையும், பத்தாம்
வகுப்பு தேர்வு மார்ச் 26 துவங்கி, ஏப்., 9 வரையும் நடந்தன. இதற்கான விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 2விற்கு, மார்ச் 28 முதல் ஏப்., 12 வரையும், பத்தாம் வகுப்பிற்கு ஏப்.,10 முதல் 22 வரையும் நடந்தன.
லோக்சபா தேர்தல் பணிகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை போன்ற காரணங்களால், தேர்வுத் துறை எதிர்பார்த்தநாட்களுக்குள், விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவுறாமல் போனதாக சர்ச்சை எழுந்துள்ளது.விடைத்தாள் திருத்தும் பணி ஒதுக்கப்பட்டு, வராத ஆசிரியர்கள் 'பட்டியல்' கேட்டு,முதன்மை கல்வி அலுவலர்களுக்கு,'ஆன்-லைன்' மூலம் தேர்வு துறை தகவல் தெரிவித்துள்ளது.இதன்தொடர்ச்சி யாக, முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், 'ஆன்-லைன்' மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில்,'விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அதில் பங்கேற்காத ஆசிரியர்கள் விவர பட்டியல்ஒரு வாரத்திற்குள் அளிக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: விடைத்தாள் திருத்தும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கமுடியவில்லை. அப்பணியில் பங்கேற்ற மற்றும் பங்கேற்காத ஆசிரியர் விவரங்களை மாவட்டம் வாரியாக தேர்வுத்துறை கேட்டுள்ளது. பணி ஒதுக்கியும் பங்கேற்காத ஆசிரியர்கள் சரியான விளக்கம் அளிக்காத பட்சத்தில்,தேர்வுத்துறை அவர்களை எச்சரிக்கலாம் அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், என்றார்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக