வியாழன், 17 ஏப்ரல், 2014

பெண் ஆசிரியர்களுக்கு தொலை தூரத்தில் தேர்தல் பணி: தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் எதிர்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பெண் முதுகலை ஆசிரியர்களுக்கு தொலை தூரத்தில் தேர்தல் பணி நியமனம்வழங்கப்படுவதற்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ப.கோபி, புதன்கிழமை வெளியிட்டசெய்திக் குறிப்பு: நடைபெற உள்ளமக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஆசிரியர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாகவே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும், இதனால் பெண்ஆசிரியர்களுக்கு எந்தவிதமான சிரமும் இருக்காது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்துவது குறித்த 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பானது ஆசிரியர்களின்வசிப்பிடத்திலிருந்து தொலைதூரத்தில் நடத்தப்பட்டது. அதாவது, ஊத்தங்கரையைச் சேர்ந்த ஆசிரியர், தளி சட்டப் பேரவை தொகுதிக்கு பணி நியமனம் செய்யப்பட்டு, அவர்களுக்கு தேன்கனிக்கோட்டையில் தேர்தல்பயிற்சி வழங்கப்பட்டது.இது கிட்டத்தட்ட 120 கி.மீ. தொலைவாகும். இதுபோன்ற உத்தரவால் தேர்தல் பணியானது அதிக தொலைவில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் நியமனம் செய்யப்படுவார்களோ என்ற அச்சம் பெண் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, பெண் முதுகலை ஆசிரியர்களுக்கு 15 கி.மீ. தூரத்தில் தேர்தல் பணி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக