சனி, 19 ஏப்ரல், 2014

தந்தி சேவைக்கு இணையாக முந்தி செல்லும் 'இ போஸ்ட்'; வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

தபால் துறையின் ஈடு இணையற்ற சேவைகளில் ஒன்றான தந்தி சேவைக்கு இணையாக,
தற்போது 'இ போஸ்ட்' சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.தபால் துறையில்,160 ஆண்டுகளாக புழக்கத்திலிருந்த, தந்தி சேவை, கடந்தாண்டு ஜூலை முதல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, 'இ-போஸ்ட்' எனப்படும் மின்னணு தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.'இ-மெயில்' போல செயல்படும் இம்முறையில், கையால் எழுதப்பட்ட தகவல் அல்லது, 'பிரிண்ட்'செய்யப்பட்ட தகவல், 'ஸ்கேன்' செய்து, தகவல் தருபவர் குறிப்பிடும் இடத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. பின், சம்பந்தப்பட்ட இடத்திலுள்ள தபால்காரர், அத்தகவலை உரியவரின்இடத்துக்கு கொண்டு சேர்ப்பார். கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும்
இச்சேவை அளிக்கப்படுகிறது.

மாநகராட்சி சார்பில் அறிக்கைகள், வரி நோட்டீஸ்கள் இம்முறையில்அனுப்பப்படுகின்றன. மேலும், தனியார் நிறுவனங்களும் இம்முறையைப்
பயன்படுத்தி வருகின்றன.பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், 'இ--போஸ்ட் கார்ப்பரேட்' எனும்திட்டத்தில், 9,999 முகவரிகளுக்கு, ஒரே நேரத்தில் தகவலை அனுப்ப முடியும். 'ஏ 4' சைஸ் பேப்பர் ஒன்றுக்கு 10 ரூபாயும், அதே தகவலை 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்ப, ஒரு தகவலுக்கு, ஐந்து ரூபாயும்வசூலிக்கப்படுகிறது.தந்தி சேவை பயன்பாட்டில் இருந்தபோது வார்த்தைக்கு 50 பைசா என வசூல்
செய்யப்பட்டது. ஆனால், 'இ போஸ்ட் சேவை'யில் ஏ4 சைஸ் பேப்பருக்கு 10 ரூபாய்
மட்டுமே வசூலிக்கப்படுவதால், வாடிக்கையாளர்களின்எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

.கோவை தலைமை தபால் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
'தந்தி சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, தற்போது இ-போஸ்ட்டில் வாழ்த்துக்கள் அனுப்பும் முறை அதிகரித்துள்ளது. கோவையில், முதலில் மாநகராட்சி மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்கள்மட்டுமே பயன்படுத்தி வந்தன. 'தற்போது, தேர்தல் சீசன் என்பதால், அரசியல் கட்சியினர் பயன்படுத்துகின்றனர்.நடிகர்களின் பிறந்த நாட்களில் ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் இ-போஸ்ட் பயன்படுத்தி, வாழ்த்து அனுப்புகின்றனர். இது குறித்த விழிப்புணர்வை, மக்களிடையே ஏற்படுத்தும் பல்வேறு செயலில்ஈடுப்பட்டுள்ளோம்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக