சனி, 31 மே, 2014

பிளஸ் 2, பத்தாம் வகுப்பில்தேர்ச்சி விகிதம் குறைவு: ஆசிரியர்களை மாற்ற முடிவு?

பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. சமீபத்தில் வெளியான பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. சில அரசு பள்ளிகள் 42 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளன.

இதையடுத்து, நாகர்கோவில் மாவட்டத்தில் சில தலைமை ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால், 'சஸ்பெண்ட்' நடவடிக்கையை கல்வித்துறை நிறுத்தியது. இந்நிலையில், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.

இதையடுத்து, 60 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை கல்வித்துறை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். 'ஆசிரியர்கள் இடமாறுதல், பதவிஉயர்வுக்கான 'கவுன்சிலிங்' துவங்குவதற்கு முன், இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 30 மே, 2014

ஆசிரியர் தேர்வு வரியா இணையதளத்தில் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான உத்தேச விடைகள்..

ஆசிரியர் தேர்வு வரியா இணையதளத்தில் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான உத்தேச விடைகள்தற்போது வெளியிடப்பட்டுள்ளது..தமிழில் 3 வினாக்களும், ஆங்கிலத்தில் ஒரு வினாவும்,கணக்கில் ஒரு வினாவும் நீக்கப்பட்டுள்ளன.மேலும்தமிழில் ஒரு வினாவுக்கும்,சமூகவியலில் ஒரு வினாவுக்கும் இரண்டு சரியான விடைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு TRB has released the Tentative Key answers for Paper II

Teachers Recruitment Board College Road, Chennai-600006 SPECIAL TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2014 FOR PERSONS WITH DISABILITY (PWD) CANDIDATES As per the Notification 01/2014 published on 17.02.2014 Teachers Recruitment Board conducted, the Special Tamil Nadu Teachers Eligibility Test 2014 for Paper II on 21.05.2014.
Now, the Board has released the Tentative Key answers for Paper II of Special Teachers Eligibility Test 2014. Candidates are given time up to 09.06.2014 to submit their representation regarding objection if any on the Tentative Answer Keys published. Candidates have to attach the proof for the disputed answer keys. Their representation may be sent through post or may be dropped in the Box provided at Teachers Recruitment Board on or before 5.00 P.M on 09.06.2014. Utmost care has been taken in preparing the Tentative Key Answers list and in publishing it. Teachers Recruitment Board reserved the right to correct any errors that may have crept in. Incorrect key answer would not confer any right of enforcement

:30-05-2014. Member Secretary

மாணிக்க வாசகர்

பக்தனைக் காக்க சிவன் செய்யும் லீலைகள் ஆச்சரியகரமானவை. திருமாணிக்க வாசகரின் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு லீலை இதற்குச் சரியான உதாரணம்.

மதுரைக்கு அருகே அமைந்துள்ள திருவாதவூர் என்ற ஊரில் வசித்துவந்த சம்புபாதசிருதர் சிவஞானவதி தம்பதியர் தங்கள் மகனுக்குத் திருவாதவூரார் எனப் பெயரிட்டனர். இந்தக் குழந்தைக்கு இளம் வயதிலேயே சகல வித கலைகளும் கை வரப் பெற்றன. திறமை மிக்க திருவாதவூரார் குறித்து கேள்விப்பட்ட மதுரை மன்னன் வரகுணபாண்டியன் தன் அமைச்சரவையில் பதவி அளித்தான். அவரது திறமைகளைக் கண்ட மன்னன், தென்னவன் பிரம்மராயன் என்னும் பட்டத்தை அவருக்கு அளித்து முதன்மை அமைச்சராகப் பதவி உயர்வும் அளித்தான். நிதி நிர்வாகமும் இவரே செய்துவந்ததால், தன் படைக்குத் தேவையான புதிய அரேபியக் குதிரைகளை வாங்க இவரையே பணித்தான் பாண்டியன்.

படை வீரர்கள் பலருடன் புறப்பட்ட அவர் திருப்பெருந்துறை என்ற இடத்திற்கு வந்தார். படை வீரர்கள் சிறிது ஓய்வு எடுத்த பின் செல்லலாம் என்று கூறினார். அப்போது குரு ஒருவர் மரத்தடியில் அமர்ந்திருக்க அவரைச் சுற்றிலும் மாணாக்கர்கள் அமர்ந்து ஞான பாட விளக்கம் கேட்டுக்கொண்டு இருந்ததைப் பார்த்தார்.

பிறக்கும்போதே சிவ பக்தி அதிகம் கொண்ட இவருக்குச் சூழ்நிலையும் அப்பக்தியை உரமிட்டு வளர்த்தது. இந்த நிலையில் குரு, சிஷ்யர்களைக் கண்ட அவர் மனம் புரியவொண்ணா சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. தான் வந்த வேலையை மறந்தார். அப்பெருமானை நோக்கி வேகமாகச் சென்றார். அருகில் வந்து வணங்கிய திருவாதவூராரின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்த அவர், இப்பொழுது கைக்கொண்ட கடமைகளை முடித்துவிட்டுத் தில்லைக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு கூறினார். சிவனே அந்த குருவின் உருவாய் வந்தார் என்கிறது திருவிளையாடல் புராணம்.

நல்ல குதிரைகள் வருவதற்குக் கால தாமதம் ஆனதால், படை வீரர்களை மீண்டும் தலைநகருக்கு அனுப்பிவிட்டார் அமைச்சர். தாம் மட்டும் அங்கேயே இருந்தார். நெஞ்சிலோ கரை புரண்ட சிவ பக்தி. கையிலோ மித மிஞ்சிய காசு பணம். செல்வத்தைத் திருப்பணிகளுக்கு வாரி வாரி வழங்கினார். அடியார்களை அரவணைத்தார். செல்வமெல்லாம் விரைவில் கரைந்து காணாமல் போய்விட்டது. ஒற்றன் மூலம் செய்தி அறிந்தான் மன்னன். அமைச்சரை அழைத்துவரச் செய்தான். அப்போதுதான் தன் நிலை உணர்ந்த அவர், இறைவனிடம் முறையிட்டார். காத்தருளுமாறு வேண்டினார்.

சிவனோ குதிரைகள் வந்து சேருமென மன்னனிடம் தெரிவிக்குமாறு அசரீரியாகப் பணித்தார். வாதவூராரும் அவ்வாறே கூற, ஏற்கெனவே நிகழ்ந்த அனைத்தையும் ஒற்றர் மூலம் அறிந்திருந்த மன்னன், இவர் சொல்லை நம்பாமல் சிறையில் அடைத்தான். சிறையில் துன்பங்கள் பலவற்றை அனுபவித்த திருவாதவூராரைக் காக்க சிவன் திருவுளம் கொண்டார்.

காட்டில் உள்ள நரிகளை எல்லாம் பரிகளாக அதாவது குதிரைகளாக மாற்றிய சிவன், தானே அப்படைக்குத் தலைவனார். பூத கணங்களைப் படை வீரர்களாக்கினார். அரசவைக்கு வந்தார். குதிரைகள் கம்பீரமாகவும், பிடரி சிலிர்த்தும் நின்றிருந்தன. அவை படைக்கு உரிய அத்தனை அங்க லட்சணங்களையும் கொண்டிருந்தன. மனம் மயங்கிய மன்னன் அவற்றைப் பெற்றுக்கொண்டு திருவாதவூரரை விடுதலை செய்தான்.

அதே நாள் இரவு வந்ததும் குதிரை லாயத்தில் கட்டப்பட்டிருந்த பரிகள் அனைத்தும் நரிகளாக மாறி ஊளையிட்டன. படை வீரர்களாக இருந்த பூத கணங்கள் மாயமாய் மறைந்தன. இதைக் கேள்விப்பட்ட மன்னன் திருவாதவூரரை மீண்டும் கைது செய்து வைகை ஆற்றங்கரையில் சுட்டுப் பொசுக்கும் மணலில் நிற்க வைத்துக் கட்டியதோடு தலையில் பெரிய பாறாங்கற்களையும் வைத்துச் சுமை தூக்கச் செய்தான். சூடு பொறுக்காமல் காலை மாற்றி மாற்றி வைத்துப் பரிதவித்த வாதவூரின் காலடி மண் சூடு தணியப் பெரும் மழையை வரவழைத்தார் சிவபெருமான்.

சில நொடிகளிலேயே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. வைகை உடைப்பெடுத்துக்கொண்டு வெள்ளம் ஊருக்குள் பாயத் தொடங்கியது. உடைப்பைத் தடுக்கப் படை வீரர்கள் போதாது என்பதால் வீட்டுக்கு ஒருவர் வீதம் வந்து உடைப்படைக்கக் கட்டளையிட்டான் மன்னன். ஊர் முழுவதும் முழு வீச்சில் வேலையில் இறங்கியது. அப்போது புட்டு விற்கும் வயதான பெண்மணி ஒருவரின் இல்லத்து ஆண்கள் அனைவரும் வெளியூர் சென்றிருக்க, உதவிக்கு ஆள் இன்றித் தவித்தாள். அப்போது சிவன் அவள் முன் திடகாத்திரமான இளைஞன் போல் தோன்றி, தான் உதவுவதாக வாக்களித்தார். அதற்குக் கூலியாகப் புட்டு ஒரு வட்டில் வழங்க வேண்டும் என்று வாய்மொழி ஒப்பந்தமும் செய்துகொண்டார். அப்பெண்ணும் கவலை தீர, கூடைப் புட்டினை வியாபாரம் செய்வதற்காகச் சென்றுவிட்டாள்.

இங்கோ அந்த இளைஞன் படுத்துத் தூங்கிவிட்டான். அவன் பகுதி இடம் மட்டும் அடைபடாததால், வெள்ளம் ஊருக்குள் தொடர்ந்து வந்தது. காரணம் அறிய வந்த மன்னன் இளைஞனை எழுப்பி, சவுக்கால் அடித்தான். ஈசனின் முதுகில் விழுந்த அந்த அடி அங்கிருந்த அனைவர் முதுகிலும் விழுந்தது. அவ்விளைஞன் ஒரு கூடை மண்ணெடுத்து விடுபட்ட இடத்தில் மட்டும் கொட்டினான். அணை முழுவதும் சீராகி வெள்ளமும் ஊருக்குள் வராமல் கடல் நோக்கி ஓடியது. இதனைக் கண்டு வியந்த அனைவரும் அந்த இளைஞன் இருந்த இடம் நோக்கித் திரும்பினார்கள். இளைஞனோ மாயமாக மறைந்துவிட்டான்.

"மன்னா நீ திரட்டிய செல்வமெல்லாம் உனது நல்ல எண்ணத்தினாலேயே வளர்ந்தது. அவை திருவாதவூரரின் நல்ல எண்ணத்தின் மூலம் நற்செயலுக்கே செலவிடப்பட்டது. அவர் மணி போன்ற சிறந்த சொற்களால் திருவாசகத்தைப் பாடியதால், மாணிக்க வாசகர் என்று இனி அழைக்கப்படுவார்" என்று அசிரீரியாக இறைவன் குரல் ஒலித்தது என்கிறது சிவபுராணம்.

சிவனாலேயே சிறப்புக் காரணப் பெயர் பெற்ற திருவாதவூரார் அது முதல் மாணிக்க வாசகர் என்று அழைக்கப்பட்டார். அவர் இயற்றிய திருவாசகம் படிப்போரை உருக வைக்கக்கூடியது. 'திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்ற சொலவடை சிவ பக்தர்களிடையே இன்றும் மிகப் பிரபலம்.

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் பெயருடன் மெட்ரிகுலேஷன்,ஆங்கிலோ இந்தியன் போன்று குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளை நீக்கக்கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழகஅரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் பெயருடன் மெட்ரிகுலேஷன்,ஆங்கிலோ இந்தியன் போன்று குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளை நீக்கக்கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழகஅரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கத்தின் தலைவர்வி.வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:மாநில வாரியான பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேஷன்,ஓரியண்டல் போன்ற நான்கு வகையான பாடத் திட்டங்கள் இருந்தன. அவையனைத்தையும் களைந்து ஒரே கல்வி முறையை செயல்படுத்தும்
நோக்கில் கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர்கல்வி முறையை கொண்டு வந்தது. சமச்சீர்கல்வி முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதை எதிர்த்து தாக்கல்
செய்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. அரசுப் பள்ளிகள் மற்றும் இதர அனைத்துப் பள்ளிகளிலும்ஒரே கல்வி முறைதான் செயல்பாட்டில் உள்ளன. ஆனால், தனியார் பள்ளிகள்அரசுப் பள்ளிகளை விடதங்களது பள்ளி கல்வி முறை சிறப்பானது என்பதை வெளிப்படுத்துகின்றன. இவை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இது தொடர்பாக தமிழகஅரசுக்கு கடந்த ஆண்டு மனு அளித்தேன். இதுவரை அதற்கு பதில்
அளிக்கவில்லை. அதனால், தனியார் பள்ளிகள் தங்களது பள்ளிகளின் பெயருடன்
சேர்த்து மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் போன்றவார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும்வார்த்தைகளை நீக்குவதற்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விடுமுறைகால நீதிபதிகள் அருணாஜெகதீசன், எஸ்.வைத்தியநாதன்ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில்(நெட்) மாற்றம் கொண்டுவர பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு

பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில்
(நெட்) மாற்றம் கொண்டுவர பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)முடிவு செய்துள்ளது.

உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக தகுதித் தேர்வில் மாற்றம்
கொண்டுவர யுஜிசி திட்டமிட்டிருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்காக www.ugc.ac.in என்ற இணையதளத்தில் 10 கேள்விகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதாவது, உயர்கல்வி ஆசிரியரை அடையாளம் காண "நெட்' தேர்வு போதுமானதாக உள்ளதா,தேர்வில் பங்கேற்க வயது வரம்பு கொண்டுவர வேண்டுமா, இந்தத் தகுதித்
தேர்வில் ஒருவர் இத்தனை முறைதான் பங்கேற்க வேண்டும் எனகட்டுப்பாடு கொண்டுவர வேண்டுமா, தவறான பதில்களுக்கு "நெகட்டிவ்'மதிப்பெண் கொடுக்கப்பட வேண்டுமா என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்இந்த கேள்விகளுக்கு தங்களுடைய கருத்துகளைத்தெரிவிக்குமாறு யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கேள்விக்கு அருகிலும் ஆம், இல்லை என்ற இரண்டு பதில்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பதிலில்ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, சமர்ப்பிப்பு பட்டனை அழுத்தினால் போதும்;கருத்து பதிவு செய்யப்பட்டு விடும்.
இது குறித்து யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் கூறியது: உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், "நெட்' தகுதித் தேர்வில் சிலமாற்றங்களைக் கொண்டுவர யுஜிசி முடிவு செய்துள்ளது. இதற்காக தனி குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, தகுதித் தேர்வில்என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம் என்பது குறித்து தீவிரமாகஆய்வு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு தரப்பினரின் கருத்துகளை அறிவதற்காக 10கேள்விகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கருத்துகள் மற்றும் குழு முடிவுகளின் அடிப்படையில், "நெட்' தகுதித்தேர்வில் மாற்றம் கொண்டுவரப்படும். இப்போது ஜூன் மாதம் நடைபெற உள்ள "நெட்' தேர்வில் எந்தவித மாற்றமும்இருக்காது. ஆனால், டிசம்பரில் நடத்தப்படும் தேர்வில் மாற்றம் இருக்கவாய்ப்பு உள்ளது என்றார். இப்போது "நெட்' தகுதித் தேர்வில் "நெகட்டிவ்' மதிப்பெண், வயது வரம்பு ஆகியவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கால்நடை மருத்துவப்படிப்பில் சேர விண்ணப்பங்கள் பெற இன்று கடைசி நாள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்குழு தலைவர் எம்.திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– கால்நடை மருத்துவம், உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழியின உற்பத்தி தொழில்நுட்ப இளநிலை பட்டப்படிப்புகளில் 2014–15–ம் ஆண்டு மாணவ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 12–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகத்தின் 14 விற்பனை நிலையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை கால்நடை மருத்துவம், உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழியின உற்பத்தி தொழில்நுட்ப இளநிலை பட்டப்படிப்புகளில் சேர 19 ஆயிரத்து 56 பேர் விண்ணப்பங்களை பெற்று சென்றுள்ளனர்.

விண்ணப்பங்கள் பெறுவதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். விண்ணப்பங்களை மாலை 5 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் (ஜூன்) 2–ந்தேதி மாலை 5.45 மணிக்குள் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்களும் அடுத்த மாதம் (ஜூன்) 2–ந்தேதி மாலை 5.45 மணிக்குள் பல்கலைக்கழக இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மதுரை காமராஜ் பல்கலையில், உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்குமாறு, ஐகோர்ட் கிளை, இடைக்கால உத்தரவு

மதுரை காமராஜ் பல்கலையில், உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்குமாறு, ஐகோர்ட் கிளை, இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை காமராஜ் பல்கலை, தாழ்த்தப்பட்டோர் உயர்நிலை மற்றும்கடைநிலை பணியாளர்கள் நலச் சங்க செயலர், பார்த்தசாரதி தாக்கல் செய்த மனு:
மதுரை காமராஜ் பல்கலையில், ஆங்கிலம், இதழியல், அரசியல் அறிவியல் உட்பட
பல்வேறு துறைகளில், ஒன்பது உதவி பேராசிரியர்கள்; 17 இணை பேராசிரியர்கள் நியமனத்திற்கு, ஜன., 22ல், பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டார். ஒப்புதல் பெறவில்லை:அதில், 'பொதுசுழற்சி முறையில், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, உள்ளது.ஆதிதிராவிடர்கள், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு, பின்பற்றப்படவில்லை; கல்விக்குழுவின் ஒப்புதலும்பெறவில்லை.அனைத்துத் துறைகளிலும், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான, பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்குமாறு, 1993ல், அரசு உத்தரவிட்டது.உதவி மற்றும் இணைப்பேராசிரியர்கள் நியமனத்திற்கான நேர்காணல் முடிந்துள்ளது. நியமன உத்தரவு வழங்கும் நிலையில்,பல்கலை நிர்வாகம் உள்ளது. பதிவாளரின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். புதிய அறிவிப்பு வெளியிட்டு, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை பின்பற்றி, நியமனம் மேற்கொள்ள உத்தரவிடவேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுஇருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள், ஆர்.கருப்பையா, வி.எஸ்.ரவி பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.நீதிபதிகள்உத்தரவு:பணி நியமனத்திற்கு, தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதிப் பட்டியலை, வெளியிடக் கூடாது. ஜூன் 4வரை, பணி நியமன உத்தரவு வழங்கக் கூடாது. பல்கலை துணைவேந்தர், பதிவாளருக்கு 'நோட்டீஸ்'அனுப்பப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

'பிளஸ் 2 முடிக்காமல், 'டிப்ளமோ' தகுதியுடன் பி.எட்., சேர்ந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை

'பிளஸ் 2 முடிக்காமல், 'டிப்ளமோ' தகுதியுடன் பி.எட்., சேர்ந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
அருப்புக்கோட்டை சங்கரேஸ்வரி தாக்கல் செய்த மனு:நான் பத்தாம் வகுப்பில் 81 சதவீத
மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றேன். பிளஸ் 2 படிக்காமல், 'டிப்ளமோ' (கம்ப்யூட்டர்
தொழில்நுட்பம்) படித்தேன். பி.எஸ்.சி., தேர்ச்சி பெற்றேன்.விருதுநகர் பி.குமாரலிங்கபுரம்
ஸ்ரீவித்யா கல்வியியல் கல்லுாரியில் 2013 ல் பி.எட்., படிப்பில் சேர்ந்தேன். பிப்.,27 ல் செய்முறைத் தேர்வு நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர்,' நீங்கள் பிளஸ் 2படிக்கவில்லை. அனுமதிக்க முடியாது,' என்றார். 'பி.எட்., படிக்க எனக்குத் தகுதி இல்லை என இறுதி முடிவு எட்டப்படும் பட்சத்தில், பட்டத்தை திரும்பப்
பெற்றுக்கொள்ளலாம்,' என உறுதியளித்ததன் பேரில்,செய்முறைத் தேர்வுக்கு அனுமதித்தனர்.எழுத்துத் தேர்வு மே 30 ல் துவங்குகிறது. தேர்வுக் கட்டணத்தை,
பல்கலைக்கு செலுத்திவிட்டேன். எனக்கு 'ஹால்டிக்கெட்' வழங்கவில்லை.'டிப்ளமோ' பிளஸ் 2 விற்கு சமமானது;'டிப்ளமோ' படித்திருந்தாலும், பி.எட்.,சேர தகுதி உண்டு என 2012 ல் அரசு உத்தரவிட்டுள்ளது.இதனடிப்படையில் தேர்வு எழுத அனுமதிக்கவும், தேர்வு முடிந்த பின் சான்றிதழ் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்

இதுபோல், செல்லம்மாள் மற்றொரு மனு தாக்கல்செய்தார்.நீதிபதி ஆர்.கருப்பையா முன், விசாரணைகு வந்தது. மனுதாரர்களின் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான்
ஆஜரானார்.நீதிபதி: மனுதாரர்களுக்கு 'ஹால்டிக்கெட்' வழங்கி, தேர்வு எழுத பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர்அனுமதிக்க வேண்டும். மற்றவை, இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து அமையும். விசாரணை ஜூன் 10க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த 10 கட்டளைகள்

குடிநீர், மின்சாரம், கல்வி போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும்'என்பது உட்பட, 10 கட்டளைகளை, மத்தியஅமைச்சர்களுக்கு மோடி பிறப்பித்து உள்ளார்.அத்துடன், 'ஒவ்வொரு மத்திய அமைச்சரும், 100நாள் செயல் திட்டம் ஒன்றை உருவாக்கி நிறைவேற்ற வேண்டும்' என்றும் உத்தரவிட்டு உள்ளார்.

மத்திய அமைச்சரவையின், இரண்டாவது கூட்டம்,டில்லியில், பிரதமர் நரேந்திர
மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தகூட்டத்திற்குப் பின், நிருபர்களிடம் பேசிய,பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர்,வெங்கையா நாயுடு கூறியதாவது: அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றஅமைச்சர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, சில
அறிவுரைகளை வழங்கினார். 100 நாள் செயல்திட்டம் என்ற யோசனையையும்முன்வைத்தார்.
ஒவ்வொரு அமைச்சரும், தன் அமைச்சகத்தின் கீழ்உள்ள துறைகளில், அடுத்து வரும், 100 நாட்களில், என்னென்ன திட்டங்களை செயல்படுத்தலாம்என்பதையும், தேவையான திட்டங்கள் பற்றியும்,தகவல்களை தொகுக்க வேண்டும். அந்தத்திட்டங்களை, 100 நாட்களுக்குள் அமல்படுத்த,முழுஅளவில் தயாராக வேண்டும் என, கேட்டுக்கொண்டார். பொதுமக்களின் அடிப்படை தேவைகளான, குடிநீர், கல்வி மற்றும்மின்சாரத்தை மேம்படுத்துவதே, புதிய அரசின்திட்டம் என்று கூறிய மோடி, வரும் நாட்களில்,
இவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்என்பது உட்பட, 10 கட்டளைகளையும் பிறப்பித்தார்.
1. பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள தடைகளை அகற்ற வேண்டும்.
2. மக்களின் முக்கிய தேவைகளை தீர்க்க, அதிகமுன்னுரிமை அளிக்க வேண்டும்.
3. உட்கட்டமைப்பு துறைகளில்,சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும். உலக
நாடுகளின் உற்பத்தி மையமாக, இந்தியா மாறவேண்டும்.
4. நல்ல திறமையானநிர்வாகத்தை அளிக்கவேண்டும். மக்களுக்கு,நன்மை தரும்
திட்டங்களை அமல்படுத்தவேண்டும்.
5. மக்களுக்கான திட்டங்களையும்,கொள்கைகளையும், குறிப்பிட்டகாலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும்.
6. கொள்கைகளில் உறுதியாக இருப்பதோடு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும்
காப்பாற்ற வேண்டும்.
7. மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயானஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும். கேபினட் அந்தஸ்து உடைய அமைச்சர்கள், தங்களுக்கு கீழ் பணிபுரியும்
இணை அமைச்சர்களை அரவணைத்து,ஒரு குழு போல செயல்பட வேண்டும்.
8. அதிகாரிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும்.
9. அரசின் ஏல நடைமுறைகள் அனைத்தும்,வெளிப்படையாக நடைபெற வேண்டும். அதற்கேற்றவகையில், இ டெண்டர் முறையை,அனைத்து துறைகளிலும் அமல்படுத்த வேண்டும்.
10. அதிகாரிகள் திறமையாக செயல்பட,அவர்களுக்கு அதிகாரமும், சுதந்திரமும்
அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, 10கட்டளைகளைப் பிறப்பித்தார்.
மொத்தத்தில், தே.ஜ., கூட்டணி அரசு, மக்கள்
நலன் சார்ந்த அரசாக செயல்பட வேண்டும். ஒன்றுக்கொன்று தொடர்புடைய
அமைச்சகங்களுக்கு தலைமை ஏற்றுள்ள அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் மற்றும்
அதிகாரிகள் என, அனைத்து தரப்பினரும்,ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடன் செயல்பட
வேண்டும். முதலீடுகளை அதிகரிப்பது,நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள்திட்டங்களை முடிப்பது, நாட்டின் நலனுக்காக இயற்கை வளங்களை முறையாகப்பயன்படுத்துவது போன்றவற்றை சிறப்பாகசெயல்படுத்த வேண்டும்.ஒவ்வொரு துறை செயலர்களையும்,
அவ்வப்போது சந்திக்கப் போவதாகக்கூறியுள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், விவசாயம்மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு, அரசு, அதிகமுன்னுரிமை அளிக்கும். 'மக்கள் நம்மிடம் நிறையஎதிர்பார்க்கின்றனர். ஒவ்வொரு தரப்பினரும், ஒவ்வொரு விதமான
கோரிக்கைகளுடன் உள்ளனர். அனைவரின்வேண்டுகோள்களுக்கும் முன்னுரிமை அளிக்க
வேண்டும். உண்மையானகூட்டாட்சி தத்துவத்தை பேணிக்காக்கும்வகையில், மாநிலங்கள் எழுப்பும் பிரச்னைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்' என,பிரதமர் மோடி கூறியுள்ளார். தன்னுடைய இந்தச்செய்தியை, நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத்தெரிவிக்க, லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் முடிவடைந்ததும், பிரதமர்மோடி,தொலைக்காட்சியில் உரை நிகழ்த்துவார்.
இவ்வாறு, வெங்கையா நாயுடு கூறினார்.

'பிளஸ் 2 ' ஓரிரு நாளில், விடைத்தாள் நகல்

''பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு,
ஓரிரு நாளில், விடைத்தாள் நகல், தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படும்,''என, துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:பிளஸ் 2, விடைத்தாள் நகல் கேட்டு, 80 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். மறுகூட்டல் கேட்டு, 3,000 பேர்விண்ணப்பித்தனர்.விடைத்தாள் நகல் கேட்ட மாணவர்களின், விடைத்தாள்கள்,சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அவை, 'ஸ்கேன்' செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணி, மிக விரைவில் முடிவடையும். அதன்பின், ஓரிரு நாளில், ஜூன், 2ம் தேதிக்குள், விடைத்தாள்நகல்கள், தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படும். ஒரே நாளில், 80 ஆயிரம் பேருக்குமானநகல்கள், பதிவேற்றம் செய்யப்படாது.பாட வாரியாக, வெவ்வேறு தேதிகளில், விடைத்தாள் நகல்கள், பதிவேற்றம்
செய்யப்படும். மறு மதிப்பீட்டில், மதிப்பெண் குறையவும் வாய்ப்பு உள்ளது.எனவே, மாணவர்கள், தங்கள் பாடஆசிரியரிடம், நன்றாக ஆலோசித்து, அதன்பின் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார்.

மத்தியஅரசு ஊழியர்களுக்கு செயல்திறன்அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் ?

மத்தியஅரசு ஊழியர்களுக்கு செயல்திறன்அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் ?
மத்தியஅரசு ஊழியர்களுக்கு செயல்திறன்அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு, அமல்படுத்தலாம் என,
எதிர்பார்க்கப்படுகிறதுஇதுதொடர்பாக, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:
'மத்திய அரசு ஊழியர்களுக்கு, அவர்களின் திறமை மற்றும் செயல்திறன் அடிப்படையில்,
ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தலாம்'என, ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்தது.
இதை, மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஏற்றுக் கொண்டாலும்,கொள்கை அளவில் மட்டுமே ஒப்புதல் அளித்தது. இந்த செயல்திறன் அடிப்படையிலானஊக்கத்தொகை குறித்து, பிரதமர் நரேந்திர மோடியிடம், மத்திய பணியாளர் நலத்துறை அதிகாரிகள், விரைவில் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது, ஊக்கத் தொகை திட்டத்திற்கு மோடி ஒப்புதல்அளித்து விட்டால், விரிவான வழிகாட்டிக் குறிப்புகள் தயார் செய்யப்படும். ஏற்கனவே இதுதொடர்பாக,முந்தைய ஆட்சியில், வரைவு வழிகாட்டிக் குறிப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த வரைவு வழிகாட்டிக்
குறிப்புகளுடன், மோடி தெரிவிக்கும் யோசனைகளின் அடிப்படையில், புதிய விதிமுறைகள் இடம் பெறும்.நாடு முழுவதும், மத்திய அரசு ஊழியர்கள், 50 லட்சம் பேர் உள்ளனர். அவர்களை சிறப்பாக செயல்பட வைத்து,மக்களுக்கு அதிகபட்ச நலன் கிடைக்க, மத்திய பணியாளர் நலத்துறை, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்தச் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தால்,
ஒவ்வொரு ஆண்டும், ஊழியர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில், மாறுபட்ட சம்பளம் வழங்கப்படும்.இந்தத் திட்டம், தனி நபர்கள் என்ற அளவிலோ அல்லது ஒரு குழு என்ற அளவிலோ அமல்படுத்தப்படும்.இவ்வாறு, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

* உதாரணமாக, ஒரு போலீஸ் அதிகாரி, குற்றங்களை குறைப்பதில் சிறப்பாக செயல்பட்டால்,அவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

* ஊக்கத்தொகை வழங்கப்படுவதால், வழக்கமான சம்பள உயர்வு, பதவி உயர்வில் பாதிப்பும் ஏற்படாது.

* ஊக்கத்தொகை, ஒவ்வொரு ஆண்டின் செயல்பாட்டில் வழங்கப்படும்.

* இதற்காக, துறை வாரியாக ஆவணம் தயார் செய்யப்படும்.

* திறமையான அதிகாரிகளுக்கு கூடுதல் சம்பளம் நிச்சயம்.

* ஏற்கனவே இம்முறை பல தனியார் நிறுவனங்களில் பல ஆண்டுகளாக திறம்பட பின்பற்றப்படுகிறது.
* ஆறாவது சம்பள கமிஷன், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்டது.

''உற்பத்தியில் ஈடுபடாத, சேவை நோக்கை மட்டுமே கொண்ட, மத்திய அரசுத் துறை ஊழியர்களுக்கு,பணி திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகை திட்டம் பொருந்தாது; சாத்தியமும் இல்லை,'' என, மத்தியஅரசு ஊழியர்கள் சம்மேளனம் கூறியுள்ளது. இதுகுறித்து, சம்மேளனத்தின் பொருளாளர், சுந்தரமூர்த்தி கூறியதாவது:

மத்திய அரசில், 110 துறைகள்உள்ளன. இவற்றில், 32 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். ஒரு துறையின் செயலர் முதல் கடைநிலை ஊழியர் வரை,ஒன்றிணைந்து தான், வேலை செய்ய முடியும். இவர்களில், யாரையும் தனித்து ஒரு வேலைக்கு மதிப்பிட
முடியாது. ஆறாவது ஊதியக் குழுவின், பணி திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகையை,
ஏற்கனவே எதிர்த்துள்ளோம். மத்திய அரசுத் துறைகள் லாப நோக்கில் செயல்படுவதில்லை. எந்தஉற்பத்தியையும் மேற்கொள்வதில்லை. மக்கள் நலனுக்கான சேவையை செய்து வருகின்றனர். உற்பத்தியை மையமாகக் கொள்ளாத அரசு துறைகளில், பணி திறனை எப்படி கணக்கிட முடியும் என,தெரியவில்லை. பணித் திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகை என்பது, மூத்த அதிகாரிகளின் விருப்பு,வெறுப்புகளுக்கு உட்பட்டதாக முடியும். மேலும், அதிகாரிகளை திருப்தி செய்பவர்களுக்கு, ஊக்கத் தொகை அளிப்பதாக
அமையும். இதனால், ஊழியர்கள் மத்தியில் தேவையற்ற பிரிவினையை ஏற்படுத்தும். எனவே, பணி திறன் அடிப்படையிலானஊக்கத் தொகைத் திட்டத்தை, மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனம் எதிர்க்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம்.

செயல்திறன் அடிப்படையிலான சம்பளம் என்பது, ஒவ்வொரு ஆண்டும் அல்லது குறிப்பிட்டகால இடைவெளியில்வழங்கப்படும். ஒவ்வொரு தனி நபரின் அல்லது குழுவினரின் செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில், மாறுபட்ட வீதத்தில்வழங்கப்படும். ஐந்தாவது சம்பள கமிஷன், தன் பரிந்துரையில், 'மிகச்சிறப்பாக செயல்படுவோருக்கு கூடுதல் சம்பள
உயர்வு வழங்கலாம் என, தெரிவித்துள்ளதோடு, சிறப்பாக செயல்படாத நபர்களுக்கு, வழக்கமான சம்பள உயர்வை மறுக்கலாம்'என்றும் கூறியுள்ளது.

டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம்?பணிநிரவலுக்குப் பின்னரே தெரியும்!!

டிஇடி ஆசிரியர் தேர்வில் பட்டதாரிகள் அளவில் தமிழ் 9,853, ஆங்கிலம் 10,716, கணக்கு 9,074, இயற்பியல் 2,337, வேதியியல் 2,667, விலங்கியல் 405, வரலாறு 6,210,
புவியியல் 526 ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மொத்தம் 12,000 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்போவதாகபள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சான்று சரிபார்ப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் உடனடியாக ஜூன் மாதம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று பட்டதாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று முன்தினம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், உபரி ஆசிரியர்கள் பட்டியல்தயாரிக்க கூறியதால், அதற்கான பணி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் அரசுப் பள்ளிகளில்பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது இட மாறுதல் கவுன்சலிங் மற்றும் பதவி உயர்வு கவுன்சலிங்நடத்தப்படுவது வழக்கம். அதற்கு பிறகு தான் புதிய ஆசிரியர்கள் நியிமிக்கப்படுவார்கள்.ஆனால் கடந்த 2013ல் எடுக்கப்பட்டஉபரி ஆசிரியர்கள் பட்டியலில் உள்ளபடி இடமாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் செய்ய வேண்டியுள்ளது. இந்த மே மாதம்நடக்கும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது உபரி ஆசிரியர்கள் பட்டியலை அமைச்சர் எடுக்கச் சொல்லியதால் 2014ம் ஆண்டு பட்டியலும் சேர்ந்தால், அதிக அளவில் இடமாறுதல் வழங்க வேண்டி வரும். அப்படி செய்தால் டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம் பெற முடியும் என பணிநிரவலுக்குப் பின்னரே தெரியும்!!

Source Dinakaran

பாரதியார் பல்கலையில் அஞ்சல் வழி எம்.எட்

. கோவை பாரதியார் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு தொலைதூரக் கல்வியில் எம்.எட். படிப்பை அறிமுகப்படுத்துகிறது.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. பி.எட். முடித்து 2 ஆண்டு ஆசிரியர் அனுபவம் உள்ளவர்கள்எம்.எட். படிப்பில் சேரலாம். அரசு பள்ளியிலோ, அரசு உதவி பெறும் பள்ளியிலோ அல்லது அங்கீகாரம் பெற்ற தனியார்பள்ளியிலோ தற்போது பணியில் இருக்க வேண்டும்.பி.எட். படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும் என்று முன்பு கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது, 55 சதவீத மதிப்பெண் என் பது 50சதவீதமாக மாற்றப்பட்டிருப் பதாக பல்கலைக்கழக பதிவாளர் பி.கே.மனோகரன் அறிவித்துள் ளார். எம்.எட். படிப்புக்கு
ஜூலை 4-ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு ஜூலை 20-ம் தேதி நடைபெறுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

10.06.2014 to 13.06.2014 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்களும்,உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்காதவர்களும் பங்கேற்கலாம் என TRB அறிவித்துள்ளது
Teachers Recruitment Board College Road, Chennai-600006
TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
Certificate Verification for Absentee Candidates
As per the Notification No.3/2013 published on 22.05.2013, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test 2013 for Paper -1 on 17.08.2013 & Paper-II on 18.08.2013 and Provisional result and final answer key were published on 05.11.2013 in the TRB website.
The Board had already conducted Certificate Verification process for those entire candidates who have secured minimum eligible marks in Paper-1 & Paper II on various dates. Inspite of repeated opportunities which were already given to the candidates, certain candidates have absented themselves from the above mentioned certificate verification.
Now the Board has decided to give an one time final opportunity for the absentee candidates and release the Certificate Verification list herein.Candidates are advised to download the Certificate Verification letters and other relevant forms and attend the certificate verification as per the schedule given therein (10.06.2014 to 13.06.2014). It is also decided to give one final chance to all those candidates who have not submitted the required certificates during the earlier certificate verification process. No separate intimation will be given. All such candidates are informed that this will be final chance and no other chance shall be given.
Utmost care has been taken in preparing the certificate verification list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.

Dated: 29-05-2014
Member Secretary

வியாழன், 29 மே, 2014

TNPSC DEO EXAM :709 பேர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளன

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஜூன் மாதம் 8-ந்தேதி காலை DEO பதவிக்கு முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள் 2342 உள்ளன. எழுத்து தேர்வு நடத்த உள்ளது. இத்தேர்வுக்கு 20000 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 709 பேர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளன. . பெரும்பான்மையான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு உரிய கல்வித்தகுதி இல்லாததே காரணம் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு ஹால் டிக்கட் TNPSC இணையதளத்திலிருந்து தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு ஹால் டிக்கட் TNPSC இணையதளத்திலிருந்து தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

தற்போது 11 காலிப்பணி யிடங்களை நிரப்ப அறிவிக்கப் பட்டுள்ள டி.இ.ஓ. தேர்வில் முதல்நிலைத் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு ஹால் டிக்கட் TNPSC இணையதளத்திலிருந்து தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

ஜூன் 2ல் பள்ளிகள்திறக்கப்படும்

கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ல் மீண்டும் பள்ளிகள்திறக்கப்படும்,'' என, பள்ளிக்
கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன்தெரிவித்தார். மதுரையில் 11 மாவட்டங்களில், கல்வித்
துறை தணிக்கை தடைகளை நீக்குவது, குறித்தஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. மாநிலகணக்காயர் சந்தான வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இயக்குனர் ராமேஸ்வரமுருகன் கூறியதாவது:
அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ல் திறக்கப்படும். இதில் மாற்றம் இல்லை. பிளஸ் 1வகுப்புகள் ஜூன் 16ல் துவங்கும். மாநிலத்தில்கடந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம்
அதிகரித்து வருகிறது. இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி 5 சதவீதம்அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறையவில்லை, என்றார். மீனாட்சி சுந்தரேஸ்வரர்பள்ளியில் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். மாவட்டத்தில், 2,48,252 பாடப் புத்தகங்கள், 1,82,541 நோட்டுக்கள், 43,775 மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கும் பணி நடக்கிறது.

மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்பு, எழுத்து பயிற்சி,கணிதப்பயிற்சி

கடந்த கல்வியாண்டில், 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்திறன் தேர்வு நடத்தப்பட்டது. அதில், குறைந்த மதிப்பெண் பெற்றமாணவர்களுக்கு, அவர்களை மேம்படுத்தும் நோக்கில், தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்பு, எழுத்து பயிற்சி,கணிதப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது..

தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்!

அடுத்தகல்வியாண்டு (2015-16) முதல்,அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பில்
தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும்.அப்பொழுது தான்அரசு பொதுத்தேர்வு எழுத முடியும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னையில், அமைச்சர் வீரமணி தலைமையில்,பள்ளிகல்வித்துறை ஆய்வுக்கூட்டம் நடந்தது.முதன்மை செயலர் சபீதா, அனைவருக்கும் கல்வி இயக்கதிட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, மெட்ரிக் பள்ளி இயக்குனர் பிச்சை, உயரதிகாரிகள், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், தொடக்ககல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட வாரியாக, பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம், அதை அதிகரிப்பது எப்படி, மாணவர்களுக்கு அரசின் இலவசநலத்திட்டங்களை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

அடுத்த கல்வியாண்டு(2015-16)முதல், மெட்ரிக் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும், 10ம்வகுப்பில், தமிழ் முதல் பாடமாக இருக்க வேண்டும்.இல்லையெனில், அம்மாணவர்கள், அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனஅறிவிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறியதாவது: ஆறாம் வகுப்பில், தமிழ்முதல்பாடமாக கட்டாயம் இருக்க வேண்டுமென, முன்னர் அமல்படுத்தப்பட்ட திட்டம், படிப்படியாக அடுத்தடுத்தவகுப்புகளுக்கு கொண்டுவரப்பட்டு, அடுத்த கல்வியாண்டில், 10ம் வகுப்பில் அமல்படுத்தப்படுகிறது. தமிழ் முதல்பாடமாக இருந்தால் மட்டுமே, அப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியும். மாறாக, மலையாளம்,இந்தி, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்டவற்றை முதல்பாடமாக எடுத்தால், அவர்கள் கண்டிப்பாக
தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் நோக்கிலேயே இவ்வாறு கூறப்பட்டது. தற்போது, பிற மொழியை, முதல் பாடமாக எடுத்து படிக்கும்மாணவர்கள், 500க்கு 500 பெற்றாலும், அவர்களுக்கு, மாநில ரேங்க் தரப்படுவதில்லை.

புதன், 28 மே, 2014

பொறியியல் படிப்பில் சேர ஜூன் 3-வது வாரத்தில் கவுன்சலிங்

பொறியியல் படிப்பில் சேர 1.70 லட்சம் மாணவ, மாணவிகள் விண் ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு ஜூன் மூன்றாவது வாரத்தில் கவுன்சலிங் தொடங்குகிறது.

பொறியியல் படிப்பில் மாண வர் சேர்க்கைக்கான விண்ணப் பங்கள், தமிழகம் முழுவதும் 60 மையங்களில் கடந்த 3-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தன. விண் ணப்பம் பெறவும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்க வும் மே 20-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அது 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட் டது. அதன்படி செவ்வாய்க்கிழமை கடைசி நாள் ஆகும். அன்று ஏராளமானோர் விண்ணப்பங் களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து விண்ணப்பங்கள் விற் பனையானது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை மாலை வரை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட் டுள்ளன. இன்னும் தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவும் வாய்ப் பிருப்பதாக தமிழ்நாடு பொறியி யல் மாணவர் சேர்க்கை செயலா ளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்திருந் தனர். இந்த ஆண்டு 20 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. விண் ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்வது, ரேங்க் பட்டி யல் வெளியிடுவது ஆகிய பணி கள் முடிவடைந்ததும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான கவுன்சலிங், ஜூன் 3-வது வாரத்தில் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வயது வரம்பு மற்றும் வாய்ப்புகளில் சலுகை

இந்த ஆண்டு ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வயது வரம்பு மற்றும் வாய்ப்புகளில் பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் 2 ஆண்டுகள் சலுகை வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்பட 24 விதமான அரசு உயர் அதிகாரிகளை நேரடியாகத் தேர்வு செய்வதற்காக ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் இந்தத் தேர்வை எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப் படுகிறது. பொதுப்பிரிவினர் 4 முறையும் (அட்டெம்ட்), ஓபிசி வகுப் பினர் 7 தடவையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயது வரை எத்தனை தடவை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.

வயது வரம்பு, வாய்ப்புகளில் சலுகை

இந்நிலையில், நடப்பு ஆண்டு அறிவிக்கப்பட உள்ள சிவில் சர்வீசஸ் தேர்வில் அதிரடி மாற்றங் கள் கொண்டுவரப்பட உள்ளன. அதன்படி, பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் கூடுதலாக 2 வாய்ப்புகளும், வயது வரம்பில் கூடுதலாக 2 ஆண்டுகளும் சலுகை வழங்க யூபிஎஸ்சி முடிவு செய்துள்ளது.

இதன்மூலம், பொதுப்பிரிவினர் 32 வயதுவரை ஐஏஎஸ் தேர்வு எழுதலாம். அத்துடன் அவர்கள் 6 முறை முயற்சி செய்யலாம். அதேபோல், ஓபிசி வகுப்பினர் 35 வயதுவரை ஐஏஎஸ் தேர்வு எழுத முடிவதுடன் 9 முறை முயற்சிக்கலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் 37 வயது வரை சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத முடியும். கூடுதலாக 2 வாய்ப்புகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 31-ல் தேர்வு அறிவிப்பு

மேற்கண்ட மாற்றங்கள் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள சிவில் சர்வீசஸ் தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தேர்வு தொடர்பான அறிவிப்பு மே 31-ம் தேதி வெளியிடப்படுகிறது. தேர்வு முறையிலோ, தேர்வுக்கான பாடத்திட்டத்திலோ எவ்வித மாற்றமும் இல்லை என்று யூபிஎஸ்சி அறிவித்துள்ளது.

தற்போது முதல்நிலைத் தேர்வு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக கோவையிலும் முதல்நிலைத்தேர்வு மையம் அமைக்கப்படும் என்று முந்தைய காங்கிரஸ் அரசு அறிவித்திருந்தது. கோவை மையம் இடம்பெறுமா, இல்லையா என்பது மே 31-ம் தேதி வெளியிடப்படும் தேர்வு அறிவிக்கையில்தான் தெரியும்.

கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதம்

சிவில் சர்வீசஸ் தேர்வில் கூடுதலாக 2 வாய்ப்புகள் மற்றும் 2 ஆண்டு வயது வரம்பு சலுகை அளிக்கப்படுவது குறித்து தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மைய இணை பேராசிரியை பி.பிரேம்கலா ராணி கூறியதாவது:

அனைத்து வகுப்பினருக்கும் கூடுதலாக 2 வாய்ப்புகளும், 2 ஆண்டு வயது வரம்பு சலுகைகளும் அளிக்கப்படுவதால் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் குறிப்பாக விளம்பு நிலையில் இருப்பவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவர்.

இன்னும் ஒரு வாய்ப்பு இருந்தால் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த வாய்ப்புகள் பெரும் வரப்பிரசாத மாக இருக்கும். அதேபோல், சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்து தாமதமாக விழிப்புணர்வு கிடைக்கப் பெற்று, தேர்வுக்கு படித்து வரும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கும் இந்தச் சலுகைகள் பெரும் வாய்ப்பாக இருக்கும்.

இவ்வாறு பிரேம்கலா ராணி கூறினார்.

திடீர் மாற்றத்துக்கு காரணம்

சென்னை ஷங்கர் ஐ.ஏ.எஸ். அகடமி இயக்குநர் டி.சங்கர் கூறியதாவது:

கடந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தனர். 2 விருப்பப் பாடங்கள் என்பது ஒன்றாக குறைக்கப்பட்டு பொது அறிவுத்தாள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிக்கப்பட்டது.

ஏற்கெனவே, தொடர்ந்து பல பழைய தேர்வுத் திட்டத்தில் படித்துவந்த மாணவர்களுக்கு மெயின் தேர்வில் செய்யப்பட்ட திடீர் மாற்றங்களை எதிர்கொள்ள சிரமமாக இருந்தது. இதைச் சமாளிக்கும் வகையில் தேர்வெழுத கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதுடன், வயது வரம்பையும் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அந்தக் கோரிக்கையை ஏற்று அனைத்து வகுப்பினருக்கும் கூடுதலாக 2 வாய்ப்புகளும், 2 ஆண்டு வயது வரம்பு சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதனால், தற்போது கடைசி வாய்ப்பு, வயது வரம்பில் கடைசி நிலையிலும் இருக்கும் மாணவர்கள் குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன்பெறுவர். கிராமப்புற இளைஞர்களுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய விழிப்புணர்வு தாமதமாக ஏற்படுவதால், தற்போது அளிக்கப்படும் சலுகைகள் அவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
இவ்வாறு சங்கர் கூறினார்.

ஜூன் 1 முதல் மின்வெட்டு அறவே இருக்காது: முதல்வர் ஜெயலலிதா

தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் ஜூன் 1 முதல் அறவே நீக்க, தான் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மேலும், தான் ஏற்கெனவே உறுதி அளித்தபடி மின் வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை மூன்றே ஆண்டுகளில் கொண்டு வந்ததில் தான் பெருமிதம் அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டின் மின் நிலைமை குறித்து எனது தலைமையில் இன்று (27.5.2014) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் துறை வளர்சிக்கும் இன்றியமையாததாக விளங்குவது மின்சாரமே ஆகும். 2011 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாவது முறையாக நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தின் மின் தேவை 12,000 மெகாவாட் என்ற அளவில் இருந்தது. ஆனால், கிடைத்த மின்சாரமோ வெறும் 8,000 மெகவாட் தான். அதாவது கிடைத்த மின்சாரத்திற்கும், தேவைப்பட்ட மின்சாரத்திற்குமான இடைவெளி 4,000 மெகாவாட்டாக இருந்தது.

மேலும், தமிழ்நாடு மின்சார வாரியமும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. இவற்றையெல்லாம் சீர் செய்வதற்கான பகீரத முயற்சிகளை எனது தலைமையிலான அரசு எடுத்ததன் விளைவாக, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, 500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய நடுத்தர கால ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்த மின்சாரம் பெறப்பட்டு வருகிறது.

இது தவிர, 3,300 மெகாவாட் மின்சாரத்தை நீண்ட கால அடிப்படையில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த மின்சாரம் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து படிப்படியாக பெறப்படும்.

புதிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலமும், கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் மூலமும் நமக்குத் தேவையான மின்சாரம் தற்போது கிடைக்கப் பெற்று வருகிறது. எனவே, கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் மின் தடை என்பதே இல்லாத நிலை உருவாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் காற்றாலை மூலம் அதிக அளவில் மின்சாரம் கிடைக்கும். காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 2 முழுவதையும் பயன்படுத்திட வேண்டும் என்று நான் தமிழ்நாடு மின்சார வாரியத்தை அறிவுறுத்தியுள்ளேன்.

ஜூன் மாதம் முதல் கிடைக்கப் பெறும் காற்றாலை மின்சாரத்தையும் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் 1.6.2014 முதல் அறவே நீக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதன்படி, தற்போது உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைமுறையில் உள்ள 90 விழுக்காடு மின் கட்டுப்பாடு 1.6.2014 முதல் நீக்கப்படும்.

இதே போன்று, உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மற்ற நேரங்களில் தற்போது நடைமுறையில் உள்ள 20 விழுக்காடு மின் கட்டுப்பாடும் 1.6.2014 முதல் நீக்கப்படும். இதன் மூலம் 1.11.2008 முதல் தமிழ்நாட்டில் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியினரால் அமல்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நடவடிக்கையின் காரணமாக தமிழ்நாட்டில் தொழில் வளம் மேலும் பெருகவும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் வழிவகை ஏற்படும். நான் ஏற்கெனவே உறுதி அளித்தபடி மின் வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை மூன்றே ஆண்டுகளில் கொண்டு வந்ததில் நான் பெருமிதம் அடைகிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

TNTET- 2013 : தாள்-2 பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை

தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை
Total. MBC
தமிழ் - 9853. 2871
ஆங்கிலம் - 10716. 3359
கணிதம் - 9074. 2410
இயற்பியல் - 2337. 520
வேதியியல் - 2667. 638
விலங்கியல். - 405. 84
தாவரவியல். - 295. 53
வரலாறு - 6211. 1379
புவியியல் - 526. 119



(TRB RTI கடிதத்திற்கு அளித்த பதில்)

THANKS TO MR GOVINDRAJ

01.04.2003 க்கு பிறகு நியமனம் பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர்கள் C.P.S எண் உள்ளவர்களுக்கு மட்டுமே ஊதியம் கோரப்படவேண்டும்.C.P.S எண் பெற ஆகஸ்ட் 2014 வரை மட்டுமே காலக்கெடு .

தமிழக அரசு 1.4.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய பென்ஷன் திட்டத்தை (சிபிஎஸ்) தமிழஅரசு ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.அவ்வாறு புதிதாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஏராளமானோர் புதிய பென்ஷன் திட்டத்தில்
சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும்புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து சிபிஎஸ் பதிவு எண் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

புதியஅரசு ஊழியர்கள் சிபிஎஸ் எண் பெறுவதற்கு அந்தந்த துறை தலைவர்கள், அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அதனை துறை தலைவர்
வாயிலாக அரசின் டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கிருந்து சிபிஎஸ் எண் பெற்றுக்கொள்ள வேண்டும்.
1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் புதிய பென்ஷன் திட்டத்தில்சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இனி ஊதியம் கோரப்பட வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான எண் பெறுவதற்காக மேலும் 3மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறை தலைவர்களும், தலைமை அதிகாரிகளும், சம்பள பிரிவில் உள்ள அதிகாரிகளும் புதிய ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து அதற்கான எண் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசுஉத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PG TRB : தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதுநிலைப் பட்டத்துடன் பி.எட். படிப்பை கண்டிப்பாக இரண்டாவது பதிவு செய்ய வேண்டும்.

இளநிலை பட்டத்துடன் பி.எட். முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு, முதுநிலைப் பட்டத்துடன்தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் பி.எட். படிப்பை2-ஆவது முறை பதிவு செய்யாமல் ஏராளமான முதுநிலைப்பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி முதல் தொடர்ந்து மேல் படிப்புகளை மாணவ, மாணவியர்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்புகள் வரை அந்தந்த மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூடுதல் படிப்புகளாக பதிவுகளைச் செய்து வருவது வழக்கம்.ஐடிஐ, பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகள், பொறியியல் பட்டம் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளை முடிக்கும் மாணவ, மாணவியர் தொழில்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஊட்டியில் துவங்கி கன்னியாகுமரி வரை 16 மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாவட்டங்களுக்கு மதுரையில் தொழில்வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வருகிறது.மேற்படி தொழில் படிப்புகளை இந்த அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். மேலும், எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுநிலைப் பட்டப்படிப்புகளையும் இந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில்பதிவு செய்ய வேண்டும்.இதில் பட்டப்படிப்பு முடித்தவுடன் பி.எட். முடிக்கும் மாணவ,மாணவியர் உடனடியாகவேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூடுதல் தகுதியாக அதைப் பதிவு செய்கின்றனர். அதன்பிறகு, இதே மாணவ, மாணவியர்எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுநிலைப் பட்டத்தைப் பெற்றவுடன், அந்தப் படிப்பை மட்டும் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு நிறுத்திக் கொள்கின்றனர். அதாவது, பி.எட். படிப்பை ஏற்கெனவே,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து விட்டதால், பதிவு மூப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனகருதி விடுகின்றனர்.இதனால், பி.எட். படிப்புடன் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்,முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளை இழந்து வருவதாக, வேலைவாய்ப்பு அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், பலமுறை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமும், தொழில்வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் இது தொடர்பாக முதுநிலைப் பட்டம் பெறுவோருக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இளநிலைப் பட்டத்துடன் பி.எட். பதிவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தாலும், முதுநிலைப் பட்டம் பெற்றவுடன் மீண்டும் பி.எட். படிப்பை தொழில்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதுநிலைப் பட்டத்துடன் கண்டிப்பாக இரண்டாவது பதிவு செய்ய வேண்டும்.அப்போது தான், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் பரிந்துரையின்போது,தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்படும் என்றார்.

ஞாயிறு, 25 மே, 2014

தருமபுரி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் கடினமான உழைப்பு -முதன்மைக் கல்வி அலுவலர்கே.பி.மகேஸ்வரி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தருமபுரி மாவட்டம் கடந்தாண்டைக்காட்டிலும் 6.54 சதக் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் 36 அரசுப்பள்ளிகள் 100 சதத் தேர்ச்சி பெற்றுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் மற்றும் மெட்ரிக் என 285பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் இருந்து 13,493 மாணவர்கள், 11,796மாணவிகள் என 25,289 பேர் தேர்வெழுதினர். இதில் 12,296 மாணவர்கள், 10,885 மாணவிகள் என 23,181 பேர்தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.13 சதமும், மாணவிகள் 92.28 சதம் பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.66 சதமாகும்.
தருமபுரி மாவட்டத்தைப் பொருத்தவரையில் கடந்தாண்டு நடைபெற்ற பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வில் 85.12 சதம் தேர்ச்சி பெற்றிருந்ததே அதிகபட்சமாகஇருந்தது. இந்த நிலையில், நிகழாண்டில் 6.54 சதம் தேர்ச்சி கூடுதல் பெற்று 25-வது இடத்தில் இருந்து 19-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அதேபோல, கடந்தாண்டில் 14 அரசுப் பள்ளிகள் 100 சதத் தேர்ச்சி பெற்றிருந்தநிலையில் நிகழாண்டில் 36 அரசுப் பள்ளிகள், 58 தனியார் பள்ளிகள் 100 சதத்தேர்ச்சி பெற்றுள்ளன.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கே.பி.மகேஸ்வரி கூறியது: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் கடினமான உழைப்புதான் முக்கியக் காரணம். மேலும், பின்தங்கிய மாவட்டத்தை கல்வியால்தான் முன்னுக்கு கொண்டு வர முடியும் என்ற நோக்கில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின்கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியது, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்
சிறப்பு வகுப்புகள் நடத்தியது போன்றவைதான் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க முக்கியக் காரணமாக அமைந்தது என்றார் அவர்.

தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை 6 பேர் பிடித்தனர்

தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை மாணவ,
மாணவிகள் 6 பேர் பிடித்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 204 அரசுப்பள்ளிகள், 6 உதவி பெறும் பள்ளிகள், 18 சுயநிதி பள்ளிகள், 57 மெட்ரிக்பள்ளிகள் என 285 பள்ளிகளில் இருந்து 13,493 மாணவர்கள், 11,796 மாணவிகள்என 25,289 பேர் எழுதினர். இதில் 12,296 மாணவர்கள் 10,885 மாணவிகள்தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவற்றில் அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வெழுதியவர்களில்
நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.ராகுல் 494 மதிப்பெண்கள்பெற்று முதலிடம் பிடித்தார்.

தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.புவனேஸ்வரி, கே.ஜான்சிராணி இருவரும் 493மதிப்பெண்களும், பென்னாகரம் அருகே புதுபாலசமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் கே.லோகேஷ் 493 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம்பெற்றனர்.

ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.சரத், காரிமங்கலம்
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் கே.கே.பிரதீப் ஆகியோர் தலா 492
மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.

அரசுப் பள்ளிகளில் 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம்பெற்ற மாணவர் எஸ்.ராகுலின் தாய் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். ராகுல் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-99, ஆங்கிலம்-96,கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-99. எதிர்காலத்தில் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம்
என்று தெரிவித்தார்.

493 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்த எம்,புவனேஸ்வரியின் தந்தை மாதேஸ்வரன் டீ கடை நடத்தி வருகிறார். தாய் தெய்வானை. இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-97, ஆங்கிலம்-98, கணிதம்-98, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. எதிர்காலத்தில் ஆட்சியராவதே லட்சியம்என அவர் தெரிவித்தார்.

493 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்ற கே.ஜான்சிராணியின் தந்தை கே.குமார் விவசாயி. தாய் சித்ரா. இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்-96,அறிவியல்-100, சமூக அறிவியல்-100.எதிர்காலத்தில் மருத்துவராக விருப்பம்
தெரிவித்தார்.

493 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்ற கே.லோகேஷின்தந்தை குமரேசன் மெக்கானிக். தாய் லட்சுமி. இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-97, ஆங்கிலம்-96, கணிதம்-100,அறிவியல்-100, சமூக அறிவியல்-100. மருத்துவராவதே லட்சியம்
என்று தெரிவித்தார்.

492 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்த எம்.சரத்தின் தந்தை முருகேசன் பெயின்டராகவும், தாய் மல்லிகா ஆசிரியையாகவும்
உள்ளனர். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-98, ஆங்கிலம்-94, கணிதம்-100,அறிவியல்-100, சமூக அறிவியல்-100. வருங்காலத்தில் மருத்துவராக
விரும்புவதாக தெரிவித்தார்.

492 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்த மாணவர் கே.கே.பிரதீப்பின் தந்தை கிருஷ்ணன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தாய் மாது. எதிர்காலத்தில் வானவியல் ஆராய்ச்சியாளராக விரும்புவதாக பிரதீப்தெரிவித்தார்.

தற்போது வரை, பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் இல்லை.

அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வரும் தருவாயிலும், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்நிலை, மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்பதால், தமிழகத்தில்,பள்ளி திறப்பு தேதியை, இரு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோர்எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில், தென் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும், தலைநகர் சென்னை உட்பட, வட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், கடும் வெயிலால் அவதிப்பட்டு வருகின்றனர்.பகலில், வெளியே செல்ல முடியாத அளவிற்கு, வெப்பம் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரத்தின் தாக்கம்,வரும், 28ம் தேதியுடன் முடிவுக்கு வந்தாலும், தற்போதுள்ள வெயிலின் கொடுமை, மேலும் சிலநாட்களுக்கு நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும், ஜூன், 2ம் தேதி,பள்ளிகள் துவங்கும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு, இன்னும்,எட்டு நாட்களே உள்ளன. கடந்த ஆண்டு, கடும் வெயில் காரணமாக, பள்ளி திறப்பு தேதி, ஜூன், 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும், இரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என,பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, ஆரம்ப பள்ளி மாணவர்கள் முதல், நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வரை,வெயில் பாதிப்பிற்கு ஆளாவர் என்பதால், இந்த பள்ளிகளின் திறப்பு தேதியை, இரு வாரங்களுக்கு தள்ளி வைக்கவேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறுகையில்,. எனினும், வெயில் அதிகமாக இருந்தால்,அதற்கேற்றார்போல், தமிழக அரசு, உரிய முடிவை எடுத்து அறிவிக்கும்' என, தெரிவித்தது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன், முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ்?

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன், முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நேற்று முன்தினம் வெளியானது.
இதையடுத்து, தேர்வெழுதிய, 10.21 லட்சம் மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும்பணி, சென்னையில், மும்முரமாக நடந்து வருகிறது. ஜூன், முதல் வாரத்தில், மதிப்பெண்சான்றிதழ் வழங்கப்படும் என, தெரிகிறது. தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து,பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கை, தீவிரம் அடைந்துள்ளது.

ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்களிடம் ஆர்வம் இல்லை, 4,000 விண்ணப்பம் விற்பனை.

இரண்டாண்டு ஆசிரியர்பயிற்சி டிப்ளமா படிப்பிற்கு, கடந்த, 14ம் தேதி முதல், விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20ஆயிரம் இடங்கள் உள்ளபோதும், வேலை வாய்ப்பு இல்லாத படிப்பாக, ஆசிரியர் பயிற்சி டிப்ளமா உள்ளது. இதனால்,
மாணவர்களிடம் ஆர்வம் இல்லை. நேற்று மாலை வரை, மாநிலம் முழுவதும், 4,000 விண்ணப்பம் விற்பனையானதாக,துறை வட்டாரம் தெரிவித்தது. கடைசி தேதியான, ஜூன், 2ம் தேதி வரை, மேலும், 500 விண்ணப்பம் விற்பனை ஆகலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 2,000க்கும் அதிகமாக பெறப்பட்டுள்ளதாகவும், துறை வட்டாரம் தெரிவித்தது. ஜூன் இறுதியில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கும்.

சனி, 24 மே, 2014

தருமபுரி மாவட்டத்தில் 2அரசுபள்ளிகள் 60% க்கும் குறைவான தேர்ச்சி

1. GOVT GOVT HS S.AMMAPALAYAM 13 7 6 53.85%
2. GOVT A A GHSS KOTTAPATTI 83 44 39 53.01%

தருமபுரி மாவட்டத்தில் 35 அரசுபள்ளிகள் 100% தேர்ச்சி

1 March 2014 - Dharmapuri Dist.-Percentage wise list.(GOVT)
SL.NO NAME OF THE SCHOOL
1 GOVT HS M ODDAPPATTI
2 GOVT HS K.EACHAMBADI 635 202
3 GOVT HSS NAVALAI 635305
4 GOVT HS PARAIYAPATTI 636 305
5 GOVT HS ALAPURAM 636 904
6 GOVT HS VENKATASAMUDRAM 636 905
7 GOVT HS OOTTAMALAI 636 810
8 GOVT HS SITLING 636 906
9 GOVT HS PUDUBALASAMUDHIRAM 636 810
10 GOVT HS THAMMANAMPATTI 636 804
11 GOVT HS NAGARKOODAL 636 803
12 GOVT HS VASIGOUNDANOOR 635 303
13 GOVT HS T.AMMAPETAI 636 906
14 MODEL SCHOOL PENNAGARAM 636 811
15 GOVT HS THASARAHALLI 635 305
16 GOVT HS BARIGAM 636 807
17 GOVT HS ELLAPUDIYAMPATTI
18 GOVT HS NATHATHAHALLI 636 803 38
19 GOVT HS BATHIREDDIHALLI 635 301
20 GOVT HS GULIYANOOR
21 GOVT HS THIPPIREDDIHALLI 635301
22 GOVT HS SATTAIYAMPATTI 636 906 18
23 GOVT HS KETHUREDDIPATTI
25 GOVT HS ELAVADAI
26 GOVT HS GOOLIKOTTAI
27 GOVT HS PANGUNATHAMKOTTAI
28 GOVT HS POOVALMADUVU 636 807
29 GOVT HS SANTHARAPATTI.
30 GOVT HS KAMMALAPATTI 635 809
31 GOVT HS KOVILUR 636 808
32 GOVT HS MATTIYAMPATTI 636 809
33 GOVT HS KOMBOOR
34 GOVT HS KARIYAPPANAHALLI 636 809
35 GOVT HS ALAMARATHUPATTI 636 803

கவிச்சக்கரவர்த்தி கம்பர்

3.1 கவிச்சக்கரவர்த்தி கம்பர் கம்பராமாயணத்தைத் தமிழில் இயற்றிய பெரும் புலவர் கம்பர். கம்பர் கவிச்சிறப்பு தமிழிலக்கிய வரலாற்றில் தலை சிறந்ததாக அறிஞர்களால் போற்றப்படுகிறது. கவிச் சக்கரவர்த்தி கம்பரைப் பற்றி மகாகவி பாரதியார் தமது சுயசரிதையில் "கம்பர் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்" என்று குறிப்பிட்டு உள்ளார். "கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பர் பிறந்த தமிழ்நாடு" என்றும் அவர் பாராட்டி உள்ளார். "அம் புவியில் மக்கள் அமுதம் அருந்த வைத்த கம்பர் கவியே கவி" (அம் - அழகிய; புவி - உலகம்) என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை போற்றி உள்ளார். தமிழ்மொழிக்குத் தவச் சிறப்புத் தந்தது என்ற பொருளில் நாமக்கல் கவிஞர் , "தமிழ்மொழி தனக்கு ஒரு தவச்சிறப்பைத் தந்தது கம்பரின் கவிச் சிறப்பே" என்று புகழ்ந்து உள்ளார். "கல்வியிற் பெரியன் கம்பன்" எனவும் "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" எனவும் வரும் பழம் தொடர்கள் கம்பரின் சிறப்பை வெளிப்படுத்தும்.

3.1.1 கம்பர் - பெயர் கம்பர் தஞ்சை மாவட்டத்துத் திருவழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். இதனைத் தனிப்பாடல் ஒன்று விவரிக்கிறது. கம்பர் என்ற பெயர் பற்றிப் பல்வேறு கதைகள் வழங்குகின்றன. கம்பர் உவச்சர் குலத்தில் (பூசாரிக் குலம்) பிறந்தமையால் பெற்ற பெயர் என்று கூறுவர். காளி கோயிலில் பூசை செய்யும் மரபினர் என்று உவச்சர்கள் சுட்டப்பெறுகின்றனர். கம்பர் குழந்தையாகக் காளி கோயில் கம்பத்தின் அருகே கிடந்தமையால் இப்பெயர் பெற்றார் என்பர். கம்பங் கொல்லையைக் காத்து வந்தமையால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் என்றும் கூறுவர். காஞ்சிபுரத்தில் உள்ள இறைவனாகிய ஏகம்பன் தேவாரப் பதிகங்களில் 'கம்பன்' என்றே சுட்டப்படுகிறான். அந்தப் பெயர் இவருக்கும் இடப்பட்டது என்பர்.

3.1.2 கம்பர் - காலம் கம்பரது காலத்தைப் பற்றி மூன்று வேறு கருத்துகள் நிலவுகின்றன. இராமாயணத்தின் தொடக்கத்தில் "கம்பர் தனியன்கள்" என்ற தலைப்பில் 17 பாடல்கள் உள்ளன. இவற்றில் ஒரு பாடலில் எண்ணிய சகாப்தம் எண்ணூற்று ஏழின் மேல் என்ற தொடர் அமைந்துள்ளது. இத்தொடர் இராமாயணம் எழுதப்பட்ட காலத்தை உணர்த்துவதாக உள்ளது. இப்பாடலை ஆதாரமாகக் கொண்டு கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றிய காலம் கி.பி. 885 என்று அறிஞர்கள் கூறுவர். ஆனால் இத்தனியன்கள் கம்பர் காலத்திற்கும் பின்னால் 16ஆம் நூற்றாண்டில் யாரோ சிலர் எழுதி இடைச் செருகலாகச் சேர்த்திருக்க வேண்டும் என்று வையாபுரிப் பிள்ளை கருதுகிறார். இதே போல் ஆவின் கொடைச் சகரர் என்ற பாடலை ஆதாரமாகக் கொண்டு கம்பர் காலம் கி.பி. 978 என்று சிலர் விளக்கி உள்ளனர். இது முதலாம் இராசராச சோழனுக்கு முன்பு இருந்த உத்தம சோழன் காலம் ஆகும். இந்தக் காலத்தையும் சில சான்றுகள் கொண்டு அறிஞர்கள் மறுத்து உள்ளனர். கம்பருடைய காலம் மூன்றாம் குலோத்துங்கன் வாழ்ந்த காலம் என்று அறிஞர் பலரும் கூறி உள்ளனர். மூன்றாம் குலோத்துங்கன் வாழ்ந்த காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு ஆகும். கி.பி. 1376இல் பொறிக்கப்பட்ட ஒரு கன்னடக் கல்வெட்டை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். அந்தக் கல்வெட்டு தோன்றிய காலத்திற்கு முன்பு இரண்டு தலை முறை காலமாகக் கம்பராமாயணம் கன்னட நாட்டில் வழங்கி வந்ததைத் தெரிவிக்கிறது. எனவே கி.பி. 1325க்கு முன்பே கம்பர் காவியம் தோன்றி இருக்க வேண்டும் என்று மா.இராசமாணிக்கனார் கருதுகிறார். கம்பர், சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவருக்குப் பிற்பட்டவர் என்பது அறிஞர் பலரும் ஒப்புக் கொண்ட உண்மை. கம்பர் சோழ மன்னனோடு மாறுபட்டு ஆந்திர நாட்டில் சில காலம் தங்கினார். அவர் தங்கி இருந்த நாடு ஓரங்கல் என்பது ஆகும். அந்த நாட்டின் அரசன் பிரதாபருத்திரன் ஆவான். அவன் காலம் கி.பி. 1162 - 1197 வரை ஆகும். இதே கால கட்டத்தில் சோழப் பேரரசனாக இருந்தவன் மூன்றாம் குலோத்துங்கன் ஆவான். இவன் காலம் கி.பி. 1178 - 1208 வரை ஆகும். எனவே கம்பர் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று முடிவு கூறலாம்.

3.1.3 கம்பர் இயற்றிய நூல்கள் வடமொழியில் வான்மீகி எழுதிய இராமாயணத்தைக் கம்பர் தமிழில் இராமகாதையாக இயற்றினார். அவர்தம் நூல்களுள் இதுவே தலைசிறந்த நூல் ஆகும். இதுவன்றி வேறு சில நூல்களையும் எழுதியதாகக் கம்பர் பற்றிய கதைகள் கூறுகின்றன. கம்பர் உழவுத் தொழிலையும் உழவரையும் பாராட்டி எழுதிய நூல்கள் ஏர் எழுபது, திருக்கை வழக்கம் என்பன. கலைமகளின் (சரசுவதி) அருளைப் போற்றி எழுதிய நூல் சரசுவதி அந்தாதி ஆகும். நம்மாழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இவர் மீது கம்பர் கொண்ட ஈடுபாட்டைச் சடகோபர் அந்தாதி என்னும் நூல் வெளிப்படுத்துகிறது. கம்பர் செய்ததாக மும்மணிக்கோவை என்ற நூலையும் தனிப்பாடல் ஒன்று தெரிவிக்கிறது. 3.1.4 கம்பரைப் பற்றிய கதைகள் கம்பர் பற்றிய பல்வேறு கதைகள் வழங்குகின்றன. கம்பரின் தந்தை ஆதித்தன் என்றும், மகன் அம்பிகாபதி என்றும் அக்கதைகள் கூறுகின்றன. அம்பிகாபதி பெரும் கவிஞனாக விளங்கி உள்ளான். சோழ மன்னனின் மகள் அமராவதி இவன் மேல் காதல் கொண்டாள். இக்காதல் காரணமாக அம்பிகாபதி மன்னனால் கொல்லப்பட்டதாகக் கதை ஒன்று கூறுகின்றது. மகனின் பிரிவால் கம்பர் பெருந்துயர் அடைந்தார். இந்தத் துயரமே இராமனைப் பிரிந்த தயரதன் துயராகவும், இந்திரசித்தைப் பிரிந்த இராவணன் துயராகவும் கம்ப இராமாயணத்தில் வெளிப்படுவதாகக் கூறுவர். கம்பரும் சடையப்ப வள்ளலும் வெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த வள்ளல் ஒருவன் சடையப்ப வள்ளல் என்று புகழப்பட்டான். இவனே கம்பரை ஆதரித்த வள்ளல் ஆவான். தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலைக் கம்பர் பத்து இடங்களில்
இராமாயணத்தில் குறிப்பிட்டு உள்ளார். இந்த இடங்களில் வள்ளலின் கொடை, பண்பு, புகழ், பெருமை முதலியவற்றை நன்றியோடு பாராட்டியுள்ளார். இராமாயணத்தில் இராமன் முடிசூடும் சடங்கு நிகழ்கிறது. முடியினை வசிட்டன் புனைந்தான் என்று கூறாமல், வெண்ணெய் நல்லூர்ச் சடையன் வழி முன்னோன் எடுத்துக் கொடுக்க வசிட்டன் முடி சூட்டினான் என்று கம்பர் பாடியுள்ளார். கம்பரும் சோழ மன்னனும் சோழ மன்னனுக்கும் கம்பருக்கும் மனவேறுபாடு இருந்தது என்பதைப் பல்வேறு கதைகள் சுட்டுகின்றன. எடுத்துக்காட்டாக,
மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னையறிந் தோதமிழை ஓதினேன் - என்னை
விரைந்துஏற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
குரங்குஏற்றுக் கொள்ளாத கொம்பு (தனிப்பாடல் திரட்டு)
(ஓதினேன் = படித்தேன்; வேந்து = மன்னன்; கொம்பு = கிளை) என்னும் பாடல் இதை வெளிப்படுத்துகிறது.
மேலே சுட்டி உள்ள பாடல் சோழ மன்னனை வெறுத்துக் கம்பர் அந்த நாட்டை விட்டு நீங்கும்போது பாடியதாகத் தெரிகிறது. சோழ மன்னனுக்கும் கம்பருக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது. உடனே கம்பர், "மன்னவன் நீ ஒருவன் தானா? நீ ஆதரிப்பாய் என்று எண்ணியா நான் தமிழைக் கற்றேன்? என்னை ஆதரிக்காத மன்னர் உலகில் உண்டோ? குரங்கை ஏற்றுக்கொள்ளாத கிளையைப் பார்த்தது உண்டா? அதுபோல என்னை ஆதரிக்காதவர்களைப் பார்த்தது உண்டா?" என்று கூறி நீங்கினார்.

இதேபோல் சோழ அரசவைப் புலவர் ஒட்டக் கூத்தருக்கும் கம்பருக்கும் போட்டியும் பூசலும் இருந்தமை பற்றிய செய்தியும் உண்டு. கம்பரும் இராமாயண அரங்கேற்றமும் கம்பர் இராமகாதையை எழுதி முடித்த பிறகு அதனை அரங்கேற்றம் செய்ய விரும்பினார். திருவரங்கம் சென்று அங்குள்ளோரை வேண்டினார். திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்யக் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் தில்லைத் தீட்சிதர்கள் இதற்கு ஒப்புக் கொண்டால் அரங்கேற்றம் செய்யலாம் என்று கூறிவிட்டனர். உடனே கம்பர் தில்லை க்குச் சென்றார். தில்லைத் தீட்சிதர்கள் மூவாயிரம் பேர். இவர்களை ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் கூட்டி ஒப்புதல் வாங்குவது இயலாமல் இருந்தது. ஒரு சமயம் குழந்தை ஒன்று பாம்பு தீண்டி இறந்து போனது. இதற்காகத் தீட்சிதர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி இருந்தனர். அங்குச் சென்ற கம்பர், தமது இராமாயணத்தில் நாகபாசப் படலம் என்ற பகுதியில் எழுதிய பாடல்கள் சிலவற்றைப் பாடினார். உடனே குழந்தை பிழைத்து எழுந்தது. இதனைக் கண்ட தீட்சிதர்கள் மகிழ்ந்து கம்பரைப் போற்றினர். பின்னர்க் கம்பர் இராமாயணத்தை அரங்கேற்ற ஒப்புதலையும் தந்தனர். கம்பர் மீண்டும் திருவரங்கம் சென்று அரங்கேற்றம் செய்ய முனைந்தார். திருவரங்கத்தார் வேண்டுகோளுக்கு இணங்கச் சடகோபர் அந்தாதி பாடி, இரணிய வதைப் படலத்தை விரிவாக விளக்கிக் கூறினார். இதன் பின்னர் இராமாயண அரங்கேற்றம் நிகழ்ந்தது. இவ்வாறாகக் கம்பர் பற்றிய பல்வேறு கதைகளை அபிதான சிந்தாமணி என்னும் நூல் விரிவாகக்

தறிப்பட்டறை குழந்தைத் தொழிலாளி: பத்தாம்வகுப்பு தேர்வில் 4-ஆம் இடம்

தறிப்பட்டறை குழந்தைத் தொழிலாளி: பத்தாம்வகுப்பு தேர்வில் 4-ஆம் இடம்

தறிப்பட்டறை தொழிலாளியாக இருந்து 8 ஆண்டுகளுக்கு முன் மீட்கப்பட்ட
அகிலா இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 496 மதிப்பெண்கள்
பெற்று மாநிலத்திலேயே 4-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இவரைப் போல் தமிழகம் முழுவதும் மீட்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட குழந்தைத்
தொழிலாளர்கள் 500-க்கு 470 மதிப்பெண்ணுக்கு மேலும், 50-க்கும்
மேற்பட்டோர் 400 மதிப்பெண்ணுக்கு மேலும் எடுத்து சாதித்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் இருந்து மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள்11,000 பேர் 330 பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்களில் 390 பேர்அண்மையில் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதி, அதில் 370பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களில் 27 பேர் 1,200-க்கு 1,000-க்கு மேலும், 66 பேர் 900-க்கு மேலும் மதிப்பெண் பெற்றும்தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதுபோல் பத்தாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதும் 800-க்கும்அதிகமான குழந்தைத் தொழிலாளிகள் எழுதி, அவர்களில் 720 பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் பலர் அதிக மதிப்பெண்பெற்று சாதனை படைத்துள்ளனர். சேலத்தைச் சேர்ந்த அகிலா 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில்4-ஆம் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். இவர் சேலம் குமராபாளையத்தில் தறிப் பட்டறையிலிருந்து 8 ஆண்டுகளுக்கு முன் மீட்க்கப்பட்டவர்.
இதுகுறித்து அகிலாவின் ஆசிரியை ஏ.ஆர். சுமதி கூறியது: சேலம் குமாரபாளையத்தில் பெற்றோருடன் தறிப்பட்டறையில் பணியில்ஈடுபட்டிருந்த அகிலாவை 8 ஆண்டுகளுக்கு முன் மீட்டோம். 5-ஆம்வகுப்பு வரை குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் படிக்க
வைத்தோம். அரசு உயர் நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு சேர்த்தோம். அப்போது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவருடைய பெற்றோர்அகிலாவை ஆங்கில வழிப் பள்ளியில் சேர்க்கக் கோரினர். அதன்படி,குமாரபாளையத்திலுள்ள ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்
சேர்த்தோம். இப்போது அவர் 496 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.
இது எங்களுக்கும் பெருமையாக உள்ளது என்றார். இதுபோல் எடப்பாடியைச் சேர்ந்த தேன்மொழி 483 மதிப்பெண்ணும்,சேலத்தைச் சேர்ந்த பத்மப்பிரியா 482 மதிப்பெண்களும்
பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களும் விசைத் தறி தொழிலில்
இருந்து மீட்கப்பட்டவர்கள். சேலத்தில் மட்டும் மொத்தம் 221 மீட்கப்பட்ட குழைந்தத் தொழிலாளர்கள்பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில் 185 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 40 பேர் 400-க்கு மேல் மதிப்பெண்
பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தருமபுரியில் ஜருகு பகுதியில் கல்குவாரியிலிருந்து மீட்கப்பட்ட டி.சிவா 473, நாமக்கலில் விசைத்தறி பட்டறையிலிருந்து மீட்கப்பட்ட மாணவி விணு 465, காஞ்சனா 463, சுவர்ணசுதா 452 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். வேலூரில் பேரணாம்பட்டைச் சேர்ந்த மாணவி ஈமா 422, கிருஷ்ணகிரியில் செங்கல் சூளையிலிருந்து மீட்கப்பட்ட போச்சம்பள்ளியைச் சேர்ந்த எஸ்தர் 454 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் மீட்கப்பட்டகுழந்தைத் தொழிலாளிகள் 40 பேர் தேர்வு எழுதினர். இதில் 38 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

887 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நேற்று காலை வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 887 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 482 அரசு பள்ளிகள் தான் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. இது கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் இரு மடங்கு அதிகரித்துள்ளது. அதே போல் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 470 மதிப்பெண்களுக்கு மேல் 7,121 மாணவ–மாணவிகள் அரசு பள்ளிகளில் எடுத்துள்ளனர். மேலும் 400 மதிப்பெண்களுக்கு மேல் 88,840 மாணவ–மாணவிகள் பெற்றுள்ளனர். இந்த தகவலை அரசு பள்ளி கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்மாவட்டத்தில், அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி,மாநகராட்சி பள்ளிகள் அடிப்படையில், 12 மாணவ, மாணவியர்,முதல் மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

திருப்பூர்மாவட்டத்தில், அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி,மாநகராட்சி பள்ளிகள் அடிப்படையில், 12 மாணவ, மாணவியர்,முதல் மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

திருப்பூர்மாவட்டத்தில் 2013-14ம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, அரசு,அரசு உதவி பெறும், மெட்ரிக், தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் 27,396 பேர்எதிர்கொண்டனர். நேற்று வெளியான தேர்வு முடிவில், 25,855 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில், அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி பள்ளி அடிப்படையில், சிறந்த மதிப்பெண் பெற்று, 12மாணவர்கள், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளனர்.
அரசுப்பள்ளி அளவில், 495 மதிப்பெண்களுடன் அய்யங்காளிபாளையம் அரசுப்பள்ளி மாணவன் தீனதயாளன் முதலிடம்; 494 மதிப்பெண்களுடன்மொரட்டுப்பாளையம் அரசுப்பள்ளி மாணவன் பாலாஜி இரண்டாமிடம்; 493 மதிப்பெண்களுடன் திருப்பூர்கே.எஸ்.சி., பள்ளி மாணவன் விஜய ஆனந்த், கணக்கம் பாளையம் பள்ளி கோமதி, பிச்சம்பாளையம் பள்ளி பாலசுப்பு லட்சுமி ஆகியோர், அரசு பள்ளி அளவில் மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.

மாநகராட்சி அளவில், 496 மதிப்பெண்களுடன் பழனியம்மாள் பெண்கள் மேல்
நிலைப்பள்ளி மாணவி ஆர்த்தி முதலிடம்; 493 மதிப்பெண்களுடன் அதே பள்ளி மாணவி ஆயிஷா நிகார்இரண்டாமிடம்; 491 மதிப்பெண்களுடன் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி மாணவி ஐஸ்வர்யா மூன்றாமிடம்.

அரசு உதவி பெறும் பள்ளி அளவில், 495 மதிப்பெண்களுடன், தாராபுரம் செயின்ட் அலோசியஸ் பெண்கள்மேல்நிலைப்பள்ளி மாணவி கவித்ரா முதலிடம்; 494 மதிப்பெண்களுடன் புங்கமுத்தூர் காந்தி கே.என்.,மேல்நிலைப்பள்ளி மாணவி நித்யா இரண்டா மிடம்; 493 மதிப்பெண்களுடன், அவிநாசி செயின்ட் தாமஸ் பெண்கள் பள்ளி திவ்யா, தாராபுரம் அலோசியஸ் பெண்கள் பள்ளி யாழினி ஆகியோர் மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.

கல்வியில் சாதித்து வரும் தர்மபுரி மாவட்டம் : மாவட்ட மக்கள் பெருமிதம்

தமிழக அளவில், தர்மபுரி மாவட்டம், கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலை இருந்தது. அது, தற்போது மாறிவிட்டது.தர்மபுரி மாவட்ட மாணவ, மாணவியர் தொடர்ந்து கல்வியில் சாதனை படைத்துள்ளனர்.

தொடர்ந்து, ஆறாவது முறையாக, மாநில அளவில் மாணவ, மாணவியர்
சாதித்து வருவது, தர்மபுரி மாவட்டத்துக்கும், எங்கள் பள்ளிக்கும், பெருமையாக உள்ளது,'' என,ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி கல்வி நிறுவனத்தின் தாளாளர் மணிவண்ணன்கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
தமிழக அளவில், தர்மபுரி மாவட்டம், கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலை இருந்தது. அது, தற்போது மாறிவிட்டது. எங்களது, ஸ்ரீவிஜய்வித்யாலயா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர்,எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில், ஆறு ஆண்டுகளாக, மாநில அளவில், தொடர்ந்து அதிக மதிப்பெண்பெற்று, சாதனை படைத்து வருகின்றனர்.
இந்தாண்டு, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில், எங்கள் மாணவியர் அக்ஷயா, மைவிழி, ஸ்ரீவந்தனா,சந்தியா ஆகியோர், 499 மதிப்பெண் பெற்று, மாநில அளவில், முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.மேலும், கவுசல்யாஸ்ரீ, நித்யஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராகவி ஆகிய நான்கு மாணவியர், 498 மதிப்பெண் பெற்று, இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். கவுசிக், ஸ்ரீவினிதா ஆகியோர், 497 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடம்
பிடித்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.தமிழக அளவில், முதல், மூன்று இடங்களை பெற்று, தர்மபுரி மாவட்டத்துக்கும், எங்கள் பள்ளிக்கும்பெருமை சேர்த்த மாணவர்களுக்கு, எங்கள் கல்வி நிறுவனம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
இவ்வாறு கூறினார்.

ஸ்ரீ விஜய்வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் இளங்கோ கூறியதாவது: எங்கள் பள்ளியில், இந்தாண்டு, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு எழுதிய, 464 மாணவர்களும், தேர்ச்சி பெற்றனர். எங்கள்மாணவர்கள், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், நான்கு ஆண்டுகளாக, மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று,சாதனை படைத்து வருவது, மகிழ்ச்சியாக உள்ளது.இந்தாண்டு, தீப்தி, கிருத்திகா, ரேவதி அபர்ணா ஆகியோர், 499 மதிப்பெண் பெற்று, மாநில முதலிடம பிடித்து சாதனை படைத்துள்ளனர். அபிஷ்ரேல் நவின்குமாரி ஆகியோர், 498 மதிப்பெண்கள் பெற்று, இரண்டாம்இடம் பிடித்துள்ளனர். இவ்வாறு கூறினார்.
தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளி தலைவர் செந்தில்கந்தசாமி கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத் தேர்வில், மாநில அளவில்,எங்கள் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். இந்தாண்டு, தீப்தி, கயல்விழி ஆகிய,இருவரும், 499 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்து, சாதனை படைத்துள்ளனர்.மேலும், பிரித்தி ஸ்ரீமதி, பிரதீபா, ஜெயஸ்ரீ, ராசிகா, வருண்யா ஆகியோர், 498 மதிப்பெண் பெற்று, இரண்டாம் இடமும், ஆர்.லோகேஷ், கே.லோகேஷ், கிருத்திகா, சந்தோஷ், ஸ்ரீநிதி, சுரேந்திரன் ஆகியோர், 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்று, தர்மபுரி மாவட்டத்துக்கும், எங்கள் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவ்வாறு கூறினார்.

நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி மாநில அளவில் இரண்டாம்இடத்தை பிடித்து சாதனை !

நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி மாநில அளவில் இரண்டாம்இடத்தை பிடித்து சாதனை !
நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி மாநில அளவில் இரண்டாம்இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.திருநெல்வேலி டவுன் கல்லணை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி சுப்புலட்சுமி 498 மதிப்பெண்கள்பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றார். தமிழில் 98 மதிப்பெண்ணும் மற்ற பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணும் பெற்றார். இவரது தந்தை ஆட்டோ ஓட்டும் தொழில்செய்துவருகிறார். தாயார் சரஸ்வதி.ஆட்டோ தொழிலாளியின் மகள், மாநகராட்சி பள்ளியில் பயின்று மாநில அளவில் ரேங்க் பெற்றுள்ளார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி பாராட்டி,பரிசளித்தார்.

கல்வித்தர மேம்பாட்டுக்கு, தேர்வு முறையை மாற்ற வேண்டும்!

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்தஆண்டு, பிளஸ் 2 தேர்ச்சி சதவீத
புள்ளியும், 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதபுள்ளியும், 90ஐ தாண்டி,சாதனை படைத்துள்ளது. மாணவர்கள்,மதிப்பெண்களை வாரி குவித்துள்ளனர். நேற்று வெளியான பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவில், 465 பேர்,மாநில அளவில், முதல்மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
அறிவியலில், 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சமூக அறிவியல், 'சென்டமும்' 26 ஆயிரத்திற்கும்அதிகமாக வந்துள்ளது.தேர்ச்சி சதவீத புள்ளி அதிகரிப்பும், மாணவர்கள்,அதிகளவில், மதிப்பெண் குவித்திருப்பதும், பலரின் புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது. இந்த மதிப்பெண்குவிப்பால், தமிழகத்தின் கல்வித்தரம் மேம்பட்டுள்ளதாக, கல்வித்துறை வட்டாரம் கருதுகிறது.

இது குறித்து, கல்வியாளர், எஸ்.எஸ்.ராஜகோபாலன் கூறியதாவது: ஆசிரியரும், மாணவர்களும் கடினமாகஉழைத்துள்ளனர். இதனால், தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பெண்ணும், அதிகமாக வாங்கி உள்ளனர்.ஆனாலும், கல்வித்தரம் மேம்பாடு அடைந்துள்ளது என்பதற்கு, இதை ஒரு காரணமாக கருத முடியாது. பாட
புத்தகத்தில் உள்ள பகுதியில் இருந்து தான், கேள்வி கேட்கின்றனர். அதனால், பாட புத்தகத்தை, அப்படியே,மாணவர்கள், மனப்பாடம் செய்து, தேர்வை எழுதுகின்றனர். இதனால், மதிப்பெண் அதிகரிக்கும்; தேர்ச்சி சதவீதம்அதிகரிக்கத்தான் செய்யும். உண்மையான கல்வித்தர மேம்பாட்டுக்கு, தேர்வு முறையை மாற்ற வேண்டும். 20 சதவீத கேள்விகளை, பாட புத்தகத்திற்கு வெளியே இருந்து கேட்க வேண்டும். இந்த கேள்விகள், மாணவர்களின்சிந்தனையை தூண்டுவதாக இருக்க வேண்டும். இந்த கேள்விகள், பாட பொருள் சார்ந்ததாக இருக்கலாம்.ஆனால், கேள்வி மட்டும், அதை சார்ந்து, மாணவர்கள் சிந்தித்து எழுதும் வகையில் இருக்க வேண்டும். இதுபோன்ற ஒரு முறை வந்தால், ஆசிரியர்கள், விரிவாக, பல கோணங்களில், பல விஷயங்களை,மாணவர்களுக்கு கற்றுத் தருவர். மாணவர்களும், புதிய முறையில் சிந்தித்து, தேர்வெழுதும் திறனை பெறுவர்.
இவ்வாறு, ராஜகோபாலன் கூறினார்.



Sent from my iPad

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழ் வினாக்களில் பிழைகள் !

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில், கேட்கப்பட்ட தமிழ்
வினாக்களில், ஏராளமான பிழைகள் இருந்தன. இதனால், தேர்வர்கள் சிரமப்பட்டனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு, மே 21 ல் ஆசிரியர்
தகுதித்தேர்வு நடந்தது. 4,476 பேர் பங்கேற்றனர். தமிழ் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட
வினாக்களில், ஏராளமான பிழைகள் இருந்தன. 'டி சீரியல்' வினாத்தாளில்,

கேள்வி எண் 43 ல், 'பொய் என்பதன் அளபெடை' என, கேட்கப்பட்டிருந்தது. 'பொய்'என்பது அளபெடை சொல்லே இல்லை.
கேள்வி எண் 47 ல், 'முக்தி அடைந்த மாவட்டம் 12 தட்சின சித்திரம் என்பது'என, கேட்கப்பட்டிருந்தது. 'தட்சிண சித்திரம் என்பது' என்று இருக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்ட'முக்தி அடைந்த மாவட்டம் 12' என்ற தொடர் சம்பந்தமே இல்லாமல் இடம்பெற்றிருந்தது.கேள்வி எண்
48 ல், 'இலக்கத்தை குலைத்து விடும்' என, கேட்கப்பட்டு இருந்தது. அதில், 'இணக்கத்தை குலைத்து விடும்'என்று இருக்க வேண்டும்.
கேள்வி எண் 56 ல், தமிழ் எண்கள் தவறுதலாக இருந்தன. கேள்வி எண் 59 ல், இரட்டை கிளவி சொல் 'சலசல' என்பதற்கு பதிலாக,'சளசள' என, தவறுதலாக கேட்கப்பட்டிருந்தது.

இதனால் மாற்றுத் திறனாளிகள் சிரமம்அடைந்தனர்.திண்டுக்கல்லை சேர்ந்த தமிழாசிரியர் தியாகராஜன் கூறுகையில், "ஆசிரியர் தகுதித்தேர்விலேயே ஏராளமான பிழைகளுடன் கேள்விகள் கேட்டிருப்பது வேதனையாக உள்ளது," என்றார்.

2014 -மார்ச் -10 ம்வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் மாவட்ட வாரியான ஒப்பீடு










பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு
வ.எண்
மாவட்டம்
தேர்ச்சி சதவீதம்
வ.எண் மாவட்டம் தேர்ச்சி சதவீதம்
1
ஈரோடு
97.88
1 ஈரோடு 97.05
2
கன்னியாகுமரி
97.78
2 நாமக்கல் 96.59
3
நாமக்கல்
96.58
3 விருதுநகர் 96.12
4
விருதுநகர்
96.55
4 பெரம்பலூர் 96.03
5
கோயம்பத்தூர்
95.6
5 தூத்துக்குடி 95.72
6
கிருஷ்ணகிரி
94.58
6 கன்னியாகுமரி 95.14
7
திருப்பூர்
94.38
7 கோவை 94.89
8
தூத்துக்குடி
94.22
8 திருநெல்வேலி 94.37
9
சிவகங்கை
93.44
9 திருச்சி 94.36
10
சென்னை
93.42
10 திருப்புர் 94.12
11
மதுரை
93.13
11 சிவகங்கை 94.06
12
ராமநாதபுரம்
93.11
12 தர்மபுரி 93.24
13
கரூர்
92.71
13 ராமநாதபுரம் 93.06
14
ஊட்டி
92.69
14 கரூர் 92.97
15
தஞ்சாவூர்
92.59
15 தேனி 92.74
16
திருச்சி
92.45
16 மதுரை 92.34
17
பெரம்பலூர்
92.33
17 சென்னை 91.9
18
திருநெல்வேலி
91.98
18 சேலம் 91.53
19
சேலம்
91.89
19 திண்டுக்கல் 90.91
20
தர்மபுரி
91.66
20 தஞ்சாவுர் 89.78
21
புதுக்கோட்டை
90.48
21 புதுக்கோட்டை 89.77
22
திண்டுக்கல்
89.84
22 கிருஷ்ணகிரி 89.37
23
திருவள்ளூர்
89.19
23 திருவள்ளுர் 88.23
24
காஞ்சிபுரம்
89.17
24 காஞ்சிபுரம் 87.96
25
தேனி
87.66
25 நாகப்பட்டினம் 87.95
26
வேலூர்
87.35
26 நீலகிரி 86.15
27
அரியலூர்
84.18
27 விழுப்புரம் 85.18
28
திருவாரூர்
84.13
28 வேலூர் 85.17
29
கடலூர்
83.71
29 கடலூர் 84.18
30
விழுப்புரம்
82.66
30 திருவாரூர் 83.7
31
நாகப்பட்டினம்
82.28
31 அரியலூர் 79.55
32
திருவண்ணாமலை
77.84
32 திருவண்ணாமலை 74.4