வெள்ளி, 23 மே, 2014

முன்னாள் ஆசிரியை மாநிலத்தின் முதல்வரானார்

ஆசிரியையாக பணியாற்றி அரசியலுக்கு வந்து மோடியின்நம்பிக்கையை பெற்ற ஆனந்திபென் இன்று குஜராத்முதல்வராக பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டார்.
மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்றஅந்தஸ்து உருவாக்கிட பிரதமராகப்போகும்
மோடி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளார். வரும் 26ம் தேதி மாலை 6 மணிக்கு பிரதமராக
மோடி பதவியேற்க உள்ளதை தொடர்ந்து குஜராத்முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆனந்திபென்படேல் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 13 ஆண்டுகள் மாநில முதல்வராகஇருந்து பல்வேறு வளர்ச்சி பணிக்கு குஜராத் மக்கள் அனைவரும் காரணமாக இருந்தனர் எனமோடி தனது முதல்வர் பிரிவுபசார கூட்டத்தில் பேசினார். முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஆனந்திபென்னுக்கு கவர்னர் கமலா பெனிவால் பதவிப்பிரமாணம்செய்து வைத்தார். இந்த விழாவில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, சுஷ்மா, பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் மோடி மற்றும் பா.ஜ.,முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக