திங்கள், 16 ஜூன், 2014

பொறியியல் :தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 16) வெளியிடப்படுகிறது

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 73 ஆயிரத்து 687
பேரின் தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 16) வெளியிடப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும்
நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தர வரிசைப்
பட்டியலை வெளியிட உள்ளார். உடனடியாக அந்த விவரம்
www.annauniv.edutnea2014 இணைய தளத்தில் மாணவர்களின் பார்வைக்காக
பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும்.
முக்கியத் தேதிகள்:

விளையாட்டுப் பிரிவினருக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு: ஜூன் 17

விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு: ஜூன் 23, 24

மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 25

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு: ஜூன் 27 முதல் ஜூலை 28 வரை பிளஸ்-2 தொழில்

பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு: ஜூலை 9 முதல் 20 வரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக