வெள்ளி, 20 ஜூன், 2014

கல்வி மேம்பாட்டில். முதலிடத்தில் புதுச்சேரி

கல்வி மேம்பாடு நிலைப் பாட்டில்உள்ள முதல் 5நகரங் களில் தில்லி இடம் பெறவில் லை. இந்த பட்டியலில் புதுச் சேரி முதலிடத்தை பெற்று இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது
இடிஐ எனப்படும் ஆரம் பக் கல்வி பட்டியலில் புதுச் சேரி 0.762 புள்ளியுடன் முத லிடத்தில் இருக்கிறது. உத்த ரப்பிரதேசம் 0.462 புள்ளியு டன் கடைசி நிலையில் இருக் கிறது. பயன்பாடு, உள்கட்ட மைப்பு ஆசிரியர்கள் மற்றும் அந்த பள்ளிகளின் பயனாளி கள் ஆகிய 4 உப பிரிவுகள் அடிப்படையில் தரப்பட்டியல் நிர்ணயிக்க ப்படுகின்றன.

இந்தியாவின் ஆரம்பக் கல்வி நிலை என்பது குறித்து 2013-14ம் ஆண்டிற்கான முன் னேற்றம் குறித்த விவரத்தை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இசட் இரானி வெளியிட்ட அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டிருந்தது.லட்சத்தீவு, சிக்கிம், இமா சலப்பிரதேசம் மற்றும் கர்நா டகம் ஆகியவை ஆரம்ப கல்வி நிலையில் 2வது, 3வது, 4வது இடத்தை பெற்று இருக் கின்றன.நாட்டின் ஆரம்ப கல்வி தர பட்டியலில் தில்லி 6வது இடத்தை பெற்று இருக்கிறது. அதனையடுத்த 7வதுஇடத்தில் தமிழ்நாடும்அதனைத்தொ டர்ந்து குஜராத்தும் உள்ளன.மாணவர்கள் மற்றும் ஆசி ரியர்கள் விகிதாச்சாரத்தில் சிக்கிம் மற்றும் லட்சத்தீவு ஆகியவை முதலிடத்தில் இருக்கின்றன. அங்கு 9 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றவிகிதத்தில்இருக்கிறது.மாணவர்கள் ஆசிரியர்கள் விகிதாசாரத்தில் பீகார் மிகவும் பின் தங்கி இருக்கிறது. அங்கு 51 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரம் உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத் தில் 39மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரம் இருக்கிறது.

2012-13 மற்றும் 2011-12ம் ஆண்டுகளில் மிக வும் பின் தங்கி இருந்த பீகார் முந்தைய ஆண்டில் 59 மாண வர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற நிலையில் இருந்து 51 மாணவர்களுக்கு ஒரு ஆசி ரியர் என்ற நிலையை எட்டி யுள்ளது. புதுச்சேரி, லட்சத் தீவு, சண்டிகர், டாமன் டையூ ஆகிய இடங்களில் மாணவிக ளுக்கு கழிப்பறை 100 சதவீ தம் உள்ளது. அருணாசலப் பிரதேசத்தில் 64.75 சதவீதம் இருக்கிறது.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக