சனி, 13 செப்டம்பர், 2014

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்கள் நியமனம்.

தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்கள் காலியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில்தேர்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர்சபிதா வெளி யிட்ட உத்தரவு:
தமிழகத்தில் 1197 அரசு மேல்நிலைப் பள்ளி களில் 1880 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கடந்த1999&2000மாவது ஆண்டில்தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் பலர் பி.எட்., கல்வித் தகுதி இல்லாத போ திலும் இவர்கள் பணி செய்த காலத்தைகருத்தில்கொண்டு மனிதாபி மான அடிப்படையில் சிறப்பு போட்டித் தேர்வு மூலம் பின்னர் பள்ளிகளில் பணி நியமனம்செய்யப்பட்டனர்.இந்த சிறப்பு போட்டித் தேர்விற்கு 50 சதவீதம் மதிப்பெண்கள் தேர்ச்சி சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. 50சதவீதம் மதிப்பெண்கள் பெறாத கணினி ஆசிரியர்களுக்கு 2வது முறையாக கடந்த 24.1.2010அன்று சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. இந்த சிறப்பு தேர்விலும் தேர்ச்சி பெறாத 652 கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம்செய்யப்பட்டனர்.
இந்த பணி நீக்கம் தொடர்பாக வும், பிஎட் படித்த கணினி ஆசிரியர்கள் சார்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் காலியாக உள்ள 652 கணினி ஆசிரியர்கள்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம்செய்யப்பட உள்ளது.
இந்த பணியிடங்களை பி.எட் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இந்த பணிக்கு தேவையான கல்வித்தகுதி பெற்றவர்களை கொண்டு நிரப்ப வேண்டும். அதே நேரத்தில் ஏற்கெனவே பணி நீக்கம் செய்யப்பட்டகணினி ஆசிரியர்கள் பி.எட்., கல்வித் தகுதி பெற்றிருந்தாலும் அவர்களுக்கு எந்தவித முன்னுரிமையும் கிடையாது. வருங்காலங்களில் உருவாகும் கணினிஆசிரியர் பணி காலியிடங்களை தமிழக அரசின் கொள்கை அடிப்படையில்தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வின் மூலம் பூர்த்தி செய்யப்படும்.இவ்வாறு அந்த உத்தரவில்கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக