சனி, 13 செப்டம்பர், 2014

போட்டித் தேர்வுகளின் தெரிவுப் பட்டியல்வெளியீடு.

போட்டித் தேர்வுகளின் தெரிவுப் பட்டியல்வெளியீடு.
டிஎன் பிஎஸ்சி நடத்திய சார்நிலைப் பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களின் தெரிவு பட்டியல் இணைய தளத்தில்வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தொகுதி 6ல் அடங்கிய 80 வனச்சர கர் காலிப் பணியிடங்களுக்கு கடந்த 2011 பிப்ரவரி மாதம் 21ம்தேதி முதல்மார்ச் 6ம் தேதி வரை நடந்த போட்டி எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2012 ஆகஸ்ட் மாதம்22ம்மற்றும் 23ம் தேதிகளில் நேர்காணல் நடந்தது. மேற்கண்ட இரண்டு தேர்வுகளிலும் பெற்றமொத்த மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி மற்றும் அந்த பதவிகளுக்கானஅறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் அந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல்
டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல, மீன்வளச் சார்நிலைப் பணியில் அடங்கிய 24 மீன் வளசார் ஆய்வாளர் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதிபோட்டி எழுத்து தேர்வு நடந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 4ம் தேதி நேர்காணல் நடந்தது. மேலும், பொது சார்நிலைப் பணியில் அடங்கிய 25 பஞ்ச் ஆபரேட்டர் காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 10ம்தேதி போட்டி எழுத்து தேர்வு நடந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நேர்காணல் நடந்தது. இந்த தேர்வுகளில்தகுதியுடையோர் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக