வியாழன், 11 செப்டம்பர், 2014

அய்யா,

அய்யா,

சில மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் முதுகலை ஆசிரியர்கள் பலரது தேர்வுநிலை வழங்கக்கோரும் கருத்துருக்கள் கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை பெறப்படவில்லை எனும் காரணத்தால் தேர்வுநிலை வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
எனவே முதன்மைக்கல்வி அலுவலர்கள் கோரியுள்ளபடி முதுகலை ஆசிரியர் நிலையில் பத்தாண்டு பணிமுடித்த ஒருவர் தேர்வுநிலை பெறுவதற்குஉண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமா எனும் வினாவுக்கு தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி துணை இயக்குநரின் (மின் ஆளுமை) செயல்முறைகள் ந.க. எண் 37489/டபிள்யு 2/இ1/ 2014 நாள் 18.07.2014 கடிதத்தின் வாயிலாக முதுகலையாசிரியர் நிலையில் பத்தாண்டு பணிமுடித்த ஒருவர் தேர்வுநிலை பெறுவதற்கு முதன்மைக்கல்வி அலுவலர்கள் கோரியுள்ளபடி கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமில்லை. மேலும் அக்காரணத்தால் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதை தள்ளிப்போடுவது அவசியமில்லை எனவும் நடைமுறையில் அத்தகைய விதிகள் ஆணைகள் எதுவும் இல்லை எனவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது

ஆனால் தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகத்தின் பொதுத் தகவல் வழங்கும் அலுவலரால் 02.09.2012 நாளிட்ட கடிதத்தில் தருமபுரி மாவட்டத்தில் தற்போதும் முதுகலை ஆசிரியர் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை இல்லாத கருத்துருக்கள் அந்தந்த பள்ளிகளுக்கே உடன் திருப்பியனுப்பப்படுகின்றன எனத் தகவல் வழங்கியுள்ளார். இதனால் பல ஆசிரியர்கள் உரியகாலத்தில் தேர்வுநிலையும் அதற்குண்டான பணப்பலன்களையும் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது
எனவே மேற்காண் தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி துணை இயக்குநரின் (மின் ஆளுமை) செயல்முறைகள் ந.க. எண் 37489/டபிள்யு 2/இ1/ 2014 நாள் 18.07.2014 கடிதத்தில் தெரிவித்துள்ளபடி முதுகலையாசிரியர் நிலையில் பத்தாண்டு பணிமுடித்த ஒருவர் தேர்வுநிலை பெறுவதற்கு கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமில்லை. மேலும் அக்காரணத்தால் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதை தள்ளிப்போடுவது அவசியமில்லை என்பதை தர்மபுரி உள்ளிட்ட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் உரிய தெளிவுரைகள் வழங்கி பத்தாண்டு பணிமுடித்த தேர்வுநிலை ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும் அக்கடிதத்தின் நகலினை வழங்கிடவும் பணிந்து வேண்டப்படுகின்றது.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக