வெள்ளி, 26 செப்டம்பர், 2014

TET ஆசிரியர் நியமனம்: 80 பணியிடங்களை காலியாக வைத்திருக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை, திருச்சி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, புதுக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பலர்ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில்,'தமிழக அரசு 30.5. 2014ல் ஓர் அரசாணை வெளியிட்டது. அதில் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பிஎட் மற்றும் டிஇடி ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்ணிற்கு கருணை (வெயிட்டேஜ்)மதிப்பெண் வழங்குவதாகவும், இந்த மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் கூறப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வி முறைக்கும், தற்போதைய கல்வி முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதேபோல்மதிப்பெண் கணக்கிடுவதிலும் வேறுபாடு உள்ளது. தற்போது சுலபமான பாடமுறை பின்பற்றப்படுவதால் அதிக மதிப்பெண் பெற முடிகிறது. ஆனால் முன்பு கடினமானபாடத்திட்டத்தால் அதிக மதிப்பெண் பெறமுடியவில்லை. அந்த உத்தரவில் பதிவுமூப்பு மற்றும் அனுபவத்திற்கு வெயிட்டேஜ்மதிப்பெண் வழங்கப்பட வில்லை. இந்த அரசாணையில் எங்களுக்குரிய வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. டிஇடி தேர்வின் அடிப்படையில் சமமான அளவீட்டு முறையை பின்பற்ற வேண்டும். எங்களை தகுதி பெற்றவர்களாக
அறிவித்து, வேலை வழங்க உத்தரவிடவேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும் எனகூறப்பட் டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, ஆசிரியர் பணி நியமனங்களுக்காக கவுன்சலிங் நடத்தினாலும், பணி நியமனங்கள்செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தார். இதை எதிர்த்து தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை செயலாளர்
சார்பில் ஐகோர்ட் மதுரை கிளை யில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள்எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான இடைக்காலதடையை நீக்கி உத்தரவிட்டனர்.

இந்நிலையில், பிரதான மனுக்கள் அனைத்தும் நீதிபதி கே.கே.சசிதரன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நியமனங்களை மேற்கொள்ள
அனுமதிக்க வேண்டும். மனுதாரர்களுக்காக 80 இடங்களை காலி வைத்திருக்கிறோம்' என்றார்.
இதையடுத்து நீதிபதி, "மனுதாரர்களின் நலன் காக்கப்பட வேண்டும். நியமனங்களுக்கு இடையூறாக நீதிமன்றம் இருப்பதை விரும்பவில்லை. எனவே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களில் 80 பணியிடங்களை டிஆர்பி காலியாக வைத்திருக்க வேண்டும்," எனக் கூறி மனு மீதான விசாரணையை அக். 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக