வெள்ளி, 31 அக்டோபர், 2014

குரூப்-4 :வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் படியுங்கள், நிச்சயமாக வெற்றிபெறுவீர்கள்!


குரூப்-4 தேர்வுக்கு தயாராவோர், பள்ளி இறுதி வகுப்பு வரையுள்ள வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம்,இந்திய அரசியல் அமைப்பு, இந்திய தேசிய இயக்கம், தமிழக வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் திறனறிவு கேள்விகள், அறிவுக்கூர்மை தொடர்பான கேள்விகள், நடப்பு நிகழ்வுகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்.

நடப்பு நிகழ்ச்சிகளுக்கு தினசரி செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி செய்திகள், தரம் வாய்ந்த மாதாந்திர, வருடாந்திர பொது அறிவு புத்தகங்களைப் படிக்க வேண்டும். பொதுத்தமிழில் 100 கேள்விகள் கேட்கப்படுவதால், 6-வது வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள தமிழ் புத்தகங்களையும், இலக்கணத்தையும் நன்கு படித்து விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். தீவிரமாக படியுங்கள், பலமுறை திரும்பத் திரும்ப படியுங்கள், வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் படியுங்கள், நிச்சயமாக வெற்றிபெறுவீர்கள்.

அலகு-1 (பொது அறிவியல்)

இயற்பியல்: பேரண்ட உலகத்தின் இயற்கை அமைப்பு, பொது அறிவியல் விதிகள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், தேசிய அளவிலான ஆய்வகங்கள், எந்திரவியல் மற்றும் இயற்பொருள்களின் தன்மைகள், பவுதிக அளவிலான நிலைகள், அலகுகள் விவரம், பவுதிக விசை, இயக்கம், ஆற்றல், காந்தம், மின்சாரம், மின்னணுவியல், வெப்பம், ஒளி, ஒலி.

வேதியியல்: தனிமங்கள், சேர்மங்கள், அமிலம், காரம், பலவகை உப்புகள், உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் பூச்சிகொல்லிகள்.

தாவரவியல்: உயிர் அறிவியலின் கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடுகள், உணவு முறைகள்.

விலங்கியல்: விலங்குகளின் ரத்தம், இனப்பெருக்கம், சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம், மனிதர்களைப் பாதிக்கும் தொற்றுநோய்கள், தொற்றா நோய்கள், தடுப்பு முறைகள் மற்றும் குணப்படுத்தும் வழிகள்.

அலகு-2 (நடப்பு நிகழ்ச்சிகள்)

வரலாறு: சமீபத்தில் நடந்த சம்பவங்கள், தேசிய அடையாளச் சின்னங்கள், அனைத்து மாநிலங்கள் பற்றிய வரலாறுகள், சமீபத்தில் செய்தித்தாள்களில் வரப்பெற்ற முக்கிய மனிதர்கள் மற்றும் இடங்கள் பற்றிய செய்திகள், விளையாட்டுச் செய்திகள், பிரபலமான புத்தகங்கள், அவற்றின் ஆசிரியர்கள், இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் வழங்கப்படும் பரிசுகள்.

அரசியல் அறிவியல்: பொதுத்தேர்தல், அரசியல் கட்சிகள், பொதுமக்களின் விழிப்புணர்வு, ஆட்சியாளர்களின் நிர்வாக முறை, அரசின் நலத்திட்டங் களும், அவற்றின் பயன்களும்.

புவியியல்: இந்திய மாநிலங்கள், தேசிய நிலக்குறியீடுகள்.

பொருளாதாரம்: தற்போதைய சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள்.

அறிவியல்: அறியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான தற்போதைய கண்டுபிடிப்புகள்.

அலகு 3 (புவியியல்)

பூமி, பேரண்டம், சூரிய மண்டல அமைப்பு, பருவமழை, பருவக்காற்று, தட்பவெப்பநிலைகள், இந்திய நீர்வளங்கள், ஆறுகள், நதிகள், இயற்கை வளங்கள், காடுகள், வனவிலங்குகள், வேளாண்மை தொழில்கள், போக்குவரத்து விவரங்கள், தகவல் தொடர்பு, மக்கள்தொகை பற்றிய முழு விவரங்கள், இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்.

அலகு 4 (இந்திய, தமிழக வரலாறு- பண்பாடு)

சிந்துச் சமவெளி நாகரீகம், குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜயநகரம், பாமினிய அரசுகள், தென்னிந்திய வரலாறு, தமிழர் களின் பாரம்பரியம், பண்பாடு, சுதந்திரத் துக்குப் பின் இந்தியாவில் நிகழ்ந்தவை, திராவிட இயக்கங்கள், பகுத்தறிவாளர் கள், தமிழக அரசியல் கட்சிகள்.

அலகு 5 (இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்)

அரசியலமைப்பின் முகவுரை, முக்கிய அம்சங்கள், மத்திய-மாநில அரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்கள், குடி யுரிமை, அடிப்படை உரிமைகள், மக்களின் கடமைகள், மனித உரிமைச் சட்டங்கள், பாராளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்துராஜ் சட்டம், தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான நீதித்துறை அமைப்புகள், அரசின் அலுவல்மொழி, பொது வாழ்வில் நிகழும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், மத்திய-மாநில ஊழல் தடுப்பு அமைப்புகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

அலகு 6 (இந்திய பொருளாதாரம்)

இந்திய பொருளாதாரத்தின் அமைப்பு, ஐந்தாண்டுத் திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, கிராமம் சார்ந்த திட்டங்கள், சமூகப் பிரச்சினைகள், கிராம மக்கள் நலன், வேலைவாய்ப்பு, வறுமை.

அலகு 7 (இந்திய தேசிய இயக்கம்)

இந்திய தேசியத் தலைவர்களான காந்திஜி, நேரு, தாகூர் வருகையால் இந்தியாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சிகள், இந்திய விடுதலைக்கு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள், தியாகங்கள், தமிழ்நாடு சுந்திரப் போராட்ட வீரர்களான ராஜாஜி, வ.உ.சி., பெரியார், பாரதியார் மற்றும் தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற விவரங்கள் தொடர்பானவை.

அலகு 8 (திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை)

கொடுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு தகவல்களைத் தொகுப்பது, மாற்றுவது, அட்டவணை, வரைபடங்கள், படங்கள் தயாரிப்பது, கணக்கியலின் அங்கங்களான சுருக்குதல், சதவீதம், தனிவட்டி, கூட்டுவட்டி, அதிகம் மற்றும் குறைந்த வகு எண் காணுதல், பரப்பளவு, கனஅளவு, காலமும் வேலையும், எண்களின் தொடக்க வரிசைகள், எண்கள் பகுத்தாய்வு.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக