வெள்ளி, 17 அக்டோபர், 2014

வெற்றிகளை பெற மாணவர்கள் தொடர்ந்து முயற்சிக்கவேண்டும் - கல்வித்துறை இணை இயக்குனர்

வெற்றிகளை பெற மாணவர்கள்தொடர்ந்து முயற்சிக்கவேண்டும்என்று கல்வித்துறை இணை இயக்குனர்
ஆர்.பார்த்தசாரதி பேசினார். பார்த்தசாரதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில்தமிழை ஒரு பாடமாக
எடுத்து புதுச்சேரி மாவட்ட அளவில்முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா வாணரப்பேட்டை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
விழாவில் கலெக்டர் எஸ்.சுந்தரவடிவேலு கலந்துகொண்டு ரொக்கப்பரிசுகளை மாணவ,
மாணவிகளுக்கு வழங்கி பாராட்டினார். விழாவில் கல்வித்துறை துணை இயக்குனர் ஆர்.பார்த்தசாரதி கலந்துகொண்டு சாதனைபடைத்தமாணவர்கள் படித்த பள்ளி நிர்வாகிகளை பொன்னாடை போர்த்தி கவுரவித்து பேசியதாவது:–
.. தினத்தந்தி என்றாலே அனைவருக்கும் சிந்துபாத் கதைதான் ஞாபகத்துக்கு வரும். பாமர மக்களை படிக்கவைத்த பத்திரிகை தினத்தந்திதான். தினத்தந்தி பத்திரிகை இல்லாத டீக்கடைகளே கிடையாது.எல்லா இடங்களிலும் தினத்தந்தி இருக்கும். தினத்தந்தி மாணவர்களுக்காகவும், அவர்களது படிப்புக்காகவும் இலவச இணைப்புகளை தருகிறது.
தேர்வுக்கு முன்பு தினத்தந்தி வழங்கும் வினா–விடை புத்தகத்துக்கு பெரிய அளவில் தேவை இருக்கும்.
எங்கிருந்தாலும் அந்த வினா –விடை புத்தகத்தை கேட்டு வாங்கி செல்வார்கள். அந்த
அளவுக்கு பாராட்டும் அளவுக்கு அது இருக்கும். முயற்சிக்கவேண்டும் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை பாராட்டி கல்வியில்தங்களது நிலையான பங்கினை தினத்தந்தி ஏற்படுத்தியுள்ளது. முதல் 3பரிசு பெறுவது என்பது சாதாரணம் கிடையாது. அது ஆசிரியர்களுக்கு நன்கு தெரியும்.
முதல் இடம் என்பது பள்ளி நிர்வாகிகளின் கனவு. அதனை பாராட்டும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி. இது வாழ்க்கையின் ஆரம்பம். வெற்றி தோல்வி என்பது சகஜம். இதுவே முடிவாகிவிடாது. சமீபத்தில்ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதாவது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வானவர்களில் பெரும்பாலானவர்கள்பல்கலைக்கழக தேர்வுகளில் கூட முதலிடத்தில் வரவில்லை. எனவே மாணவர்கள் வெற்றிபெற தொடர்ந்து முயற்சிக்கவேண்டும்.
இப்போது எனது அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் பலரும்அரசுப்பள்ளியில் படித்தவர்கள்தான். வாய்ப்புகளை பயன்படுத்துங்கள் நான் படிக்கும் காலத்தில் இப்போதுள்ளது போன்ற வசதிகள் கிடையாது. பள்ளி படிப்பினையே 3 கி.மீ.தூரம் நடந்து சென்றுதான் படித்ததேன். பல்கலைக்கழக படிப்பினை 75 கி.மீ. தூரம் சென்று படித்தேன்.
அப்போது மேல்படிப்புக்கான வாய்ப்புகளும் குறைவு. எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட தொழில்நுட்ப
படிப்புகளை படிக்க போட்டிகள் இருக்கும். நிறைய போட்டிக்கு இடையேதான் வாய்ப்பும்
கிடைக்கும். புதுவையில் 10 பேர் பிளஸ்–2 முடித்தால் அதில் 5 பேருக்கு சென்டாக் மூலம்
அரசு கல்வி உதவித்தொகையோடு தொழில்நுட்ப படிப்புகளில் இடம் கிடைக்கிறது. எந்த
மாநிலத்திலும் இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது. ஒவ்வொரு ஆண்டும் 12 ஆயிரம் பேர் பிளஸ்–2
படிப்பினை முடித்தால் 6 ஆயிரம் பேர் சென்டாக் மூலம் தொழில்நுட்ப கல்லூரிகளில் இடம்
பெறுகின்றனர். 2 ஆயிரம் பேர் நிர்வாக ஒதுக்கீட்டில் சேருகின்றனர். மற்றவர்கள் கலை அறிவியல் உள்ளிட்டமற்ற படிப்புகளில் சேருகின்றனர். ஒட்டுமொத்தமாக 12 ஆயிரம் பேருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்புகள் நமக்கு கிடைப்பதற்கு நாம் சந்தோஷப்பட வேண்டும். அதேபோல் பள்ளிக்கூடங்களும்மிக அருகிலேயே உள்ளன. இந்த வாய்ப்புகளை நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இவ்வாறு இணை இயக்குனர் ஆர்.பார்த்தசாரதி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக