சனி, 18 அக்டோபர், 2014

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வழி நெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்


 3.45 PM: முன்னதாக பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் இருந்து வெளியேவரும் ஜெயலலிதாவை வரவேற்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.கள், மேயர்கள் உள்பட 500-க்கு மேற்பட்டோர் சுமார் 4 மணி நேரம் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர்.

3.25 PM: ஜேமர் கருவிகள் பொருத்தப்பட்ட காரில் ஜெயலலிதா விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

3.24 PM: ஜெயலலிதா, பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் இருந்து இந்துஸ்தான் ஏரோனாடிகல்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்) விமான நிலையத்துக்குச் செல்கிறார். வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

3.16 PM: ஜெயலலிதா 11 பாதுகாப்பு வாகனங்கள் பின் தொடர சிறையில் இருந்து வெளியேறினார். வழி நெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

3.15 PM: சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

3.15 PM: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியேறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக