திங்கள், 3 நவம்பர், 2014

தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி: தமிழகத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்களின் அறிவியல் படைப்புகளுக்கு பரிசு

வாய்ப்புகள், ஊக்குவிப்புகள் இருந்தால் சாதிக்க தடைக்கல் ஏதுமிருக்காது என்பதை நிரூபிக்கும் வகையில் தில்லியில் அண்மையில்நடைபெற்ற தேசிய அளவிலான கண்காட்சியில் தமிழகத்தைச் சேர்ந்தமூன்று கிராமப்புற மாணவர்களின் அறிவியல் படைப்புகளுக்கு பரிசுகள்கிடைத்துள்ளன.
தில்லி பிரகதி மைதானில் நடைபெற்ற தேசிய அறிவியல் கண்காட்சியில் தமிழக மாணவ, மாணவிகளின் 41 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.முன்னதாக, தமிழகத்தில் மாவட்ட அளவிலான போட்டியில் 8,950 பேர் பங்கேற்றதில் 680 படைப்புகள் மாநில அளவிலும், அதில் 41 படைப்புகள் தேசியஅறிவியல் கண்காட்சிக்கும் தேர்வு பெற்றன. இதில் பிற மாநிலங்கள் சார்பிலும்820 படைப்புகள் இடம் பெற்றிருந்தன.
இவற்றில் நீலகிரி மாவட்டம், ஊட்டி, ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவர் எம். கோகுல் உருவாக்கிய "வாகனத்தில்விபத்துத் தடுப்புக்கான சிறப்பு அமைப்பு' மாதிரி தென் மண்டல அளவில்(தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி) இரண்டாமிடம் பெற்றது. மேலும், மாநில அளவில் திருவாரூர் மாவட்டம், இனாம்கிளியூர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 7-ஆம் வகுப்பு மாணவி கே.
இளையபாரதியின், "தையல் இயந்திரம் மூலம் நீர் இறைக்கும் மற்றும் மின்சாரம் தயாரிக்கும்' படைப்பு மாநில அளவில் முதல் பரிசுக்கும், கரூர் மாவட்டம்,வெள்ளியனை, அரசு மேல்நிலைப் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவர் எம். சதீஷ்குமாரின், "கருவேலம் மரத்தின்கூழ் மூலம் மின்சாரம் தயாரிக்கும் படைப்பு'அளவில் இரண்டாம் பரிசுக்கும் தேர்வானது. முற்றிலும் கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட இந்த மாணவர்கள்,தங்களது படைப்புக்குக் கிடைத்த பரிசு, பாராட்டால் உள்ளம் பூரித்துப் போயினர்.
அவர்களுடன் பேசியபோது:
மாணவர் எம்.கோகுல்: நான் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் முதல்
முறையாகப் பங்கேற்று தென் மண்டல அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளேன்.
வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசினால் அந்த போன் இயங்காமல்
இருப்பது; மதுபோதையில் இயக்கினால் வாகனம் செயல்படாமல் இருப்பது, வேகத் தடை இருப்பதை குறிப்பிட்ட தூரத்திற்கு முன்பே வாகனஓட்டிக்கு சிக்னல் மூலம் உணர்த்துவது, வாகனத்தை இயக்கிக்கொண்டிருக்கும் போது ஓட்டுநர் தூங்கிவிட்டால்உஷார்படுத்துவது போன்ற வசதிகள் அடங்கிய அறிவியல்படைப்பை உருவாக்கியதற்காக எனக்குப் பரிசு கிடைத்துள்ளது. இதை உருவாக்க அறிவியல் ஆசிரியர் எல். சுந்தரம், தலைமையாசிரியை டி.ஆர். பிரமிளா, தந்தை மணி ஆகியோர் மிகவும்உறுதுணையாக இருந்தனர். எனது தாத்தா என்னுடன் அனைத்துப்போட்டிகளுக்கும் உடன் வந்து ஊக்கப்படுத்தினார். எல்லோரும்ஊக்கப்படுத்துவதால் அறிவியலில் ஏதாவது சாதனை புரிந்து இந்த
நாட்டுக்குப் பெருமை தேடித் தர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக மின்னியல் பொறியியல் துறையில் விஞ்ஞானியாக வர வேண்டும் என்பதுதான் என் லட்சியம்' என்கிறார்
.
மாணவி கே. இளையபாரதி: பஞ்சாயத்து பள்ளியில் பயிலும் நான், தையல்இயந்திரம் மூலம் மின் உற்பத்தி மற்றும் நீர் இறைத்தல் மாதிரியைப்படைத்திருந்தேன். அதற்கு எனக்கு மாநில அளவில் முதலபரிசு கிடைத்துள்ளது. இதை உருவாக்க பள்ளியின் அறிவியல் ஆசிரியர் செழியன் உதவினார். நான் முதல் முறையாக இதுபோன்ற அறிவியல்
கண்காட்சியில் பங்கேற்றுள்ளேன். எனது தந்தை விவசாயக் கூலியாக உள்ளார்.
தாய் மக்கள் நலப் பணியாளர். இரு சகோதரிகள், தம்பி ஆகியோர் உள்ளனர்.இப் போட்டியில் பரிசு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.ஆனால், எப்படியும் ஜெயித்து விடுவேன் என்று மட்டும் நம்பினேன்.எனக்கு அறிவியலில் உலக அளவில் மிகப்பெரிய சாதனை நிகழ்த்த வேண்டும், ஏதாவது புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது.இக்கண்காட்சியில் பங்கேற்ற பிறகு அதற்கான நம்பிக்கையும்
அதிகரித்துள்ளது. எனது அறிவியல் ஆர்வத்திற்குப் பெற்றோரும்,ஆசிரியரும் மிகவும் ஊக்கம் அளித்து வருகின்றனர் என்கிறார் இளையபாரதி.
மாணவர் எம். சதீஷ் குமார்: அரசுப் பள்ளியில் படித்து வருகிறேன். சீமைக்
கருவேல மரம் மனித சமுதாயத்திற்கு நன்மை பயப்பது இல்லை. அதை அழித்துவிட்டு கூழாக மாற்றி மின்சாரம் தயாரிப்பதை மையமாக வைத்து அறிவியல் மாதிரியை உருவாக்கினேன். அதற்கு மாநில அளவில் 2-ம்பரிசு கிடைத்திருப்பது ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இந்த அறிவியல்மாதிரியைத் உருவாக்க எனக்கு அதிகம் உதவியவர் பள்ளியின் இயற்பியல்ஆசிரியர் தனபால். இப்போட்டியில் பங்கேற்ற பிறகு எனக்கு அறிவியல்
ஆர்வம் அதிகரித்துள்ளதை உணர்கிறேன். ஆனால், ஒருபுறம் கவலையாகவும் உள்ளது. இது போன்ற அறிவியல் போட்டிக்கு ஒரு முறை மட்டுமே வரமுடிகிறதே என்பதுதான் அதற்குக் காரணம். தொடர்ந்து இதுபோன்றஅறிவியல் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பொருளாதாரம் உதவ மறுக்கிறது. எனது தந்தை மாற்றுத்திறனாளி. தாய்கட்டடத் தொழிலாளி. மெக்கானிக்கல் பிரிவில் அறிவியல் அறிஞராக வரவேண்டும் என்பதே லட்சியம் என்கிறார் கண்களில் லட்சியக் கனவுகள் மிளிர..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக