செவ்வாய், 4 நவம்பர், 2014

அறிவியல் :இறந்த பிறகும் உயிர் வாழ் மனிதன்

மனிதன் இறந்த பிறகும் உயிர் வாழ்வது புதியஆய்வொன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மனிதன் மரணித்த உடன் அவனது மூளையின்செயல்பாடுகள் 20 முதல் 30 வினாடிகளில்நின்று விடும் என இதுநாள் வரையிலும் கருதப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது மனிதன் இறந்த பிறகும்அவன் உயிர் வாழ்வது புதிய ஆய்வொன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது மரணத்திற்கு பிறகும் 3 நிமிடங்கள் அவனது நினைவுகள் இருக்கும் எனஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு நிபுணர் குழு கடந்த 4ஆண்டுகளாக இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி இதய துடிப்பு அடங்கி, பின்னர் அதில் இருந்து மீண்டு உயிர் பிழைத்த40 சதவீதம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, இதய துடிப்பு அடங்கிய பிறகு 3 நிமிடங்கள் தங்களது நினைவலைகள் மற்றும் எண்ண ஓட்டங்கள் இருந்ததாகவும் அதுவே நாங்கள் மீண்டும் உயிர் பிழைக்க காரணமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக