வெள்ளி, 28 நவம்பர், 2014

TRB PG TAMIL:மோசி கீரனார்


    மோசி கீரனார்(59,  84): மோசி என்பது ஓர் ஊர். மோசி கொற்றனார் இவ்வூரினரே. படுமரத்து மோசி கீரனார் என்னும் புலவர் ஒருவர் இத்தொகை நூலில் பாடியுள்ளார். அவரும் இவரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை. ஒருகால் இவர் தெய்வத் தன்மையுள்ள முரசுக் கட்டிலில் அறியாது துயின்று சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறையாற் கவரி வீசப் பெற்ற பெருமை வாய்ந்தவர். இவர் அம்மன்னவனையும் கொண்கானங் கிழான் என்பானையும் பாடியுள்ளார். "நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே, மன்னனுயிர்த்தே மலர்தலை யுலகம்" என்று அரசனின் இன்றி அமையாமையை இவர் புலப்பட்டுத்தியுள்ளார் (புறநா. 186). "தலைவன் நின்னைப் பிரியான்; பிரியின், வேற்று வேந்தன் தானையோடு மதிற்புறத்தே வந்திருப்பப் புறத்தே வாராமல் அகமதிலிற்கிடந்த நன்னன் போல யான் ஆகுவன்" என்று தோழி தலைவிக்குக் குறை நயப்பிங்குங்கால் கூறுவது அழகாக உள்ளது (அகநா. 392). ஆய் அண்டிரனுடைய பொதியில், ஓர் உபகாரியின் அரலைக் குன்றம் இவைகளையும் இவர் பாராட்டியுள்ளார் (59, 84). குறுந்தொகையில் அன்றி இவர் இயற்றியனவாக இப்பொழுது தெரிந்துள்ள வேறு செய்யுட்கள்: 7 (நற். 1; அகநா. 1; புறநா. 4; திருவள்ளுவ மாலை. 1).
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக