சனி, 31 ஜனவரி, 2015

10 ஆயிரத்திற்கும் அதிகமான அரசு பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன்

''2015 - 16ல், குரூப் - 1, 2, 2 ஏ, 4 மற்றும், வி.ஏ.ஓ., என, 10 ஆயிரத்திற்கும் அதிகமான
அரசு பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என, '' தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

தமிழக அரசு துறைகளில் காலியாகும் குரூப் - 1, 2, 2 ஏ, 4, வி.ஏ.ஓ., மற்றும் இதர துறை பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. கடந்த சில
ஆண்டுகளாக, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு, அதன்படி தேர்வுகள்நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை, தேர்வாணைய தலைவர் (பொறுப்பு)பாலசுப்ரமணியன், நேற்று வெளியிட, செயலர் விஜயகுமார் மற்றும்
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தேர்வாணைய தலைவர் கூறியதாவது: கடந்த 2014 - 15ல், வி.ஏ.ஓ., குரூப் - 2 மற்றும் 2 ஏ, புள்ளியியல் ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, 14,252 பேருக்கு, பணி நியமன
ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டான, 2015 - 16ல், குரூப் - 1, 2, 2 ஏ, 4, வி.ஏ.ஓ., மாவட்ட கல்வி அதிகாரி,மோட்டார் வாகன ஆய்வாளர், அறநிலையத் துறை செயல் அதிகாரி, உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வுகள்நடத்தப்பட உள்ளன. இதில், வி.ஏ.ஓ., உட்பட, சில தேர்வுகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்கள்வரவில்லை. இருப்பினும், அனைத்து பதவிகளிலும் சேர்த்து, 10 ஆயிரத்திற்கும் குறையாமல், காலிப்பணியிடங்கள்வர வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நடந்த குரூப் - 1, முதல்நிலை, குரூப் - 2, தேர்வு முடிவுகள் குறுகிய காலத்தில் வெளியிடப்படும்.

தேர்வு முறையில் மாற்றம் ஏதும் இல்லை.
ஆன் - லைன் பதிவில் உள்ள குழப்பங்கள், அவ்வப்போது சரி செய்யப்படுகின்றன. குரூப் - 1 தேர்வு தொடர்பான,சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தல் படி, அதற்கான பணிகள் நடக்கின்றன. இவ்வாறு, அவர் தெரிவித்தார். கடந்தஆண்டு அறிவிக்கப்பட்டு, இந்தாண்டு தேர்வு மற்றும் முடிவுகள் அறிவிப்பு, 19 பணி நிலைகளுக்கு நடக்கிறது. 26 பணி நிலைகளுக்கு, இந்த ஆண்டு அறிவிப்பு வெளியாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக