ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

பிளஸ் 2 பொதுத்தேர்வு:'டாப்ஷீட்' உடன்,விடைத்தாள் தைக்கும்பணி துவங்கியது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும்மாணவர்களுக்கான, விடைத்தாள் பக்கம்
குறைக்கப்பட்டு உள்ளது. 'டாப்ஷீட்' உடன்,விடைத்தாள் தைக்கும்பணி நேற்று துவங்கியது.
மூன்று நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது.

8.82 லட்சம் பேர்:தமிழகத்தில், மார்ச் 5ம் தேதி முதல், 31ம்தேதி வரை, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.2,300 தேர்வு மையங்களில், 8.82 லட்சம் மாணவர் எழுத உள்ளனர்.குளறுபடிகள் நடைபெறாமல் இருக்க, கடந்த பொதுத்தேர்வில் பல்வேறு மாற்றங்களை,தேர்வுத்துறை கொண்டு வந்தது.விடைத்தாளில் மாணவர் புகைப்படம், பார் கோடு, சீரியல் எண், ரகசிய குறியீடு எண் போன்றவை அடங்கிய, 'டாப்ஷீட்'அறிமுகப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு மையத்தில் இருந்து, தேர்வு மையங்களுக்கு கார் மூலம் போலீசார்பாதுகாப்புடன், கேள்வித் தாள் கொண்டு செல்லப்பட்டது. தொழில்நுட்பத்துடன் கூடிய, 'டாப்ஷீட்' தயாரிக்கப்பட்டதால், அவற்றை விடைத்தாளுடன் இணைக்க, தையல்இயந்திரம் மூலம் தைக்கப்பட்டு, கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்த நடைமுறையை நடப்பு ஆண்டிலும்
செயல்படுத்த, தேர்வு துறை தீவிரமாக உள்ளது. நடப்பு ஆண்டில், விடைத்தாளின் பக்கங்கள்
குறைக்கப்பட்டு உள்ளது. கல்வி மாவட்டங்களுக்கு, 10 நாட்களுக்கு முன், பிளஸ் 2 மற்றும் 10ம்
வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து கடந்த வாரம்,
தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன.
தேர்வு மையங்கள்:தேர்வுத் துறை இயக்குனரகத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, கல்வி மாவட்டங்களுக்கு'டாப்ஷீட்' அனுப்பி வைக்கப்பட்டது. பின், தேர்வு மையங்களுக்கு,' டாப்ஷீட்' கொடுக்கப்பட்டு, விடைத்தாளுடன்இணைத்து தைக்கும் பணி, நேற்று துவங்கியது. மூன்று நாட்களுக்குள் இப்பணியை முடித்து,விடைத்தாள்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என, தேர்வுத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக