புதன், 4 பிப்ரவரி, 2015

அனைத்து கலெக்டர் அலுவலகங்களில் ஆதார் பதிவுக்கு நிரந்தர மையம்

அனைத்து கலெக்டர் அலுவலகங்களில் ஆதார் பதிவுக்கு நிரந்தர மையம் அமைக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 244 தாலுகாக்களில் 470 நிரந்தர மையங்களிலும், 148நகராட்சிகளிலும், மாநகராட்சிகளில் மண்டலம் வாரியாக மையங்களிலும் ஆதார் அடையாளஅட்டைக்கான பதிவு நடந்து வருகிறது. இதே போல் அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும்ஆதார் பதிவுக்கு நிரந்தர மையம் அமைக்கவேண்டும். அதற்கு என்று ஒரு அதிகாரியையும்நியமிக்கவேண்டும் என மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் குடியுரிமை பணிகள் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டை போட்டோ எடுப்பதற்கு அவர்களின் பெயர் விபரம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். இதனால் விடுபட்டவர்கள் எடுக்காமல் உள்ளனர். தற்போது ஆதார் மையங்களில் இதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.அதை பூர்த்தி செய்து கொடுத்தால் மார்ச் முதல் விடுபட்டவர்களுக்கும் ஆதார் பதிவு நடைபெறும்.
இந்நிலையில் ஆதார் பதிவு செய்து அடையாள அட்டை கிடைக்காதவர்கள் https://eaadhaar.uidai.gov.in/ என்றஇணையதள முகவரியில் ஆன் லைனில் சென்று பதிவு எண், மொபைல் எண் பதிவு செய்து அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆதார் அடையாள அட்டையில் பெயர், முகவரி திருத்தம் செய்வதற்கு https://ssup.uidai.gov.in/web/guest/ssuphome என்ற இணையதள முகவரியில் சென்று கேட்கும்
விபரங்களை பூர்த்தி செய்து பிழைகளை திருத்தம் செய்யலாம். ஆன்லைனில் ஆதார் அடையாள அட்டை பதிவிறக்கம் உள்ளிட்ட விபரங்களை பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக