வியாழன், 19 பிப்ரவரி, 2015

NEWS UPDATE PG TRB :இறுதி விடைக்குறிப்பில் தவறான விடை- உயர்நீதி மன்றத்தில் வழக்கு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பிப்.16, 17 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.தமிழகம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு ஜன.10
ஆம்தேதி நடைபெற்றது. இத் தேர்வை 1.90 பேர் எழுதினர். இத் தேர்வின் முடிவுகள் பிப்.6 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தேர்ச்சி அடைந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி மண்டலம் வாரியாக பிப்.16, 17 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அவர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு இறுதி மதிப்பெண்பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்றுவருகின்றது.

இதற்கிடையில் ,சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதியியல் மற்றும் தமிழ் பாடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்.6 ஆம்தேதி வெளியிட்ட இறுதி விடைக்குறிப்பில் சில தவறான விடைக்குறிப்பு உள்ளதாகவும்,அதனை பரிசீலித்து சரியான
விடைகளுக்கு மதிப்பெண் வழங்கக்கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.வழக்கினை விசாரித்த நீதியரசர்துரைசாமி பதில்மனு தாக்கல் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தார்.
அவ்வழக்குகள் நீதியரசர் கே.கே.சசிதரன் முன்னர் கடந்த திங்கட்கிழமையன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது. அவ்வழக்குகளை தாம் விசாரிக்க விரும்பவில்லை எனக்கூறி வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரைத்து ஒத்திவைத்தார் என தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் திங்கட்கிழமைக்குள் வேறு நீதிபதியின் முன் அவ்வழக்குகள் பட்டியலிடப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக