புதன், 18 மார்ச், 2015

கிராமப்புற கர்ப்பிணிபெண்களுக்கு தேவையான மருத்துவஆலோசனைகளை, மொபைல் போன்மூலம் அளிக்க, மத்திய அரசு முடிவு

கிராமப்புற கர்ப்பிணிபெண்களுக்கு தேவையான மருத்துவஆலோசனைகளை, மொபைல் போன்மூலம் அளிக்க, மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இந்த புதிய முறை, வரும்ஆக., 15ல், சில மாநிலங்களில் அமலாகிறது.உலகிலேயே, அதிக டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுமநாடுகளில், இந்தியாவும் ஒன்று.
இங்குள்ள கிரமாப்புற பெண்களுக்கு, போதிய மருத்துவ விழிப்புணர்வு இல்லாததால்,
பிரசவத்தின் போது ஏற்படும் மரணம் அதிகமாக உள்ளது. அது போல, பிறந்த குழந்தைகள் இறப்பு வீதமும், இந்தியாவில் அதிகம். இப்பிரச்னையை சரி செய்ய, இந்திய அரசு
கடுமையாக போராடி வருகிறது. எனினும், எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காத நிலை காணப்படுகிறது.
உலகிலேயே, அதிக எண்ணிக்கையில் மொபைல் போன்களை பயன்படுத்தும், இரண்டாவது பெரிய நாடாகஇந்தியா விளங்குகிறது. சாதாரண, மலிவு விலை போன்களையே, பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துவதால்,
அந்த போன்கள் மூலம் பெண்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த, மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. அந்த வகையில், கர்ப்பம் தரித்த காலத்திலிருந்து, பிரசவமாகும் வரை, ஒவ்வொரு மாதமும், எந்தெந்த நாட்களில் மருத்துவப் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்; அதற்கு எந்த விதத்தில் தயாராக செல்லவேண்டும்; எந்தெந்த பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்பன போன்ற, தகவல்களை இலவசமாக வழங்க,மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை அதிகாரி மனோஜ் ஜலானி என்பவர் கூறும் போது, ''முன்கூட்டியேபதிவு செய்யப்பட்ட அறிவுரை வாசகங்களை, பெண்கள் வைத்துள்ள மொபைல் போன் மூலம் வழங்க முடிவுசெய்துள்ளோம்; இதற்காக, விரிவான செயல்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன; ஆக., 15ம் தேதி முதல், இந்த புதியமுறை அமலுக்கு வருகிறது,'' என்றார்.
மத்திய தகவல் தொடர்புத் துறையுடன், மருத்துவத் துறை இணைந்து,இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 'மைக்ரோசாப்ட்' கம்ப்யூட்டர் நிறுவனத்தின் அதிபர், பில் கேட்ஸ் மற்றும் அவர் மனைவி இணைந்து நடத்தும்,மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, இந்திய சுகாதாரத் துறையுடன் இணைந்து, 'கில்காரி' என்ற இந்த திட்டத்தைசெயல்படுத்த உள்ளது. இதற்கு, பிரிட்டன் நாட்டின் செய்தி நிறுவனமான, பி.பி.சி.,யும் உதவி செய்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக