வியாழன், 19 மார்ச், 2015

பன்றிக் காய்ச்சல் நோயை தடுக்க இரு அரிய ஹோமியோபதி மருந்துகள் .

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் பன்றிக் காய்ச்சல் நோயை தடுக்க ஹோமியோபதி மருத்துவத்தில் இரு அரிய மருந்துகள் உள்ளன. இதனைமக்கள் பயன்படுத்த உடல்நலமும், நீண்ட ஆயுளையும் பெற்று வாழலாம் எனசிதம்பரத்தைச் சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவரும், முத்தையா தொழில்நுட்பக்கல்லூரி முன்னாள் முதல்வருமான வி.லட்சுமிநாராயணன்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தினமணி செய்தியாளரிடம் தெரிவித்தது:
1917- 1919ல்மனிதர்கள் சாதாரண காய்ச்சல், தலைவலி மூலம் அதிகளவில் மரணம் அடைந்தனர். இதன் காரணத்தை ஆய்வு செய்த போது ஃபுளூ (Flu) என்ற ஒரு கிருமி உடலில் பரவி மக்களை பாதிக்கிறது என்பது கண்டறியப்பட்டு, இதற்கு 1940-ல் ஒரு தடுப்பு ஊசி கண்டிபிடிக்கப்பட்டு 1950-ல் இந்த காய்ச்சலின் தாக்கம்குறைக்கப்பட்டது. 1980-ல் இந்த கிருமி மனிதர்களோடு பழக்கத்தில் உள்ள மிருகங்கள் மூலமாக மனித உடலை தாக்குகிறது என்பதை உணர்ந்து செண்டர் ஃபார்டிஸ்ஸீஸ் கன்ட்ரோல் மற்றும் பிரிவென்ஷன் (Center For Disease Controlland prevention) என்ற அமைப்பு இந்த ஃபுளு வைரஸ் (Flu Virus)-ஐ 2005 முதல்பால பல இடங்களில் மரணம் ஏற்பட்டதை ஆராய்ந்தது. 2006 முதல் 2009 வரை N1 H1 என்ற கிருமி கலந்து சாதாரண காய்ச்சலில் தொடங்கி 10 நாட்களில் கட்டுப்படுத்த முடியாமல் மரணம் ஏற்படுகிறது என கண்டறியப்பட்டது.
இதற்கு உலகின் பல நாடுகளில் உள்ள ஹோமியோபதி வல்லுநர்கள் இந்த கிருமியை எதிர்க்கும் சக்தி கொண்ட ARSENIC ALB 30, INFLUENZINUM 30 ஆகிய இரு மருந்துகளை உண்டால் சாதாரண தலைவலி, காய்ச்சல், தொண்டை வலி, இருமல்,தும்மல் ஏற்பட்டால் N1 H1 என்ற நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்கண்ட மருந்துகளை நமது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுஷ் (AYUSH) என்ற அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

மருந்துகள் உன்னும் விபரம்: ARSENIC ALB 30 என்ற மருந்தை தினம் தோறும்ஒரு வேளை தொடர்ந்து 3 நாட்கள் பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி காய்ச்சல் குணமாகும். INFLUENZINUM 30 என்ற மருந்தை தலைவலி,தும்மல், தலைபாரம், காய்ச்சல் வரும் போது உட்கொண்டால் உடலில் N1 H1 என்றநோய் கிருமி தாக்கமும் குறையும், இதனை மக்கள் பயன்படுத்தி உடல்நலமும், நீண்ட ஆயுளையும் பெறலாம் என்கிறார் மருத்துவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக