வியாழன், 26 மார்ச், 2015

மாற்றுத் திறனாளிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

அமைச்சர் நடத்திய பேச்சில் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், மாற்றுத் திறனாளிகள்,
இரண்டு நாட்களாக நடத்தி வந்த காத்திருப்பு போராட்டம், நேற்று முடிவுக்கு வந்தது.
கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர், சென்னை,
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, 'கோரிக்கைகளை ஏற்கும் வரை காத்திருப்பு' என்ற
போராட்டத்தை, நேற்று முன்தினம் துவக்கினர். இரவிலும், அங்கேயே படுத்து தூங்கினர்;
இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது. சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி, சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினார். இதில், உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் முடிவுக்கு வந்தது. அமைப்பின் மாநிலச்செயலர் நம்பு ராஜன் கூறியதாவது:
உதவித்தொகை பெறுவதற்கு உள்ள, விதிமுறைகள் தளர்த்தப்படும்; மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், கடும் ஊனமுற்றோருக்கு, 1,500 ரூபாயாக உயர்த்திய உதவித் தொகை,ஏப்ரலுக்கு முன், நிலுவையுடன் வழங்கப்படும் என, அமைச்சர் உறுதி அளித்தார். மேலும், பல கோரிக்கைகள்ஏற்கப்பட்டன. இதையேற்று, போராட்டத்தை முடித்துக் கொள்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக