சனி, 28 மார்ச், 2015

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பணி நியமனக் கலந்தாய்வு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுநிலைப் பட்டதாரிஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இணையதளம் மூலம் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 முதல் 50 பேர் வரை மட்டுமே இந்தக் கலந்தாய்வில்பங்கேற்கின்றனர். எனவே, முழு அடைப்பு நாளிலும் கலந்தாய்வை நடத்துவதில் பிரச்னை இருக்காது என அதிகாரிகள்தெரிவித்தனர்.

வரிசை எண் அடிப்படையில்....
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு ஆண்டு வாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள வரிசை எண் அடிப்படையில் நடத்தப்படும்.முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும், பின்னர், வேறு
மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும்.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட பணி நாடுநர்கள் அனைவரும் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக