வியாழன், 19 மார்ச், 2015

மாற்றுத்திறனாளிகளுடன் அமைச்சர் பேச்சு: ஒரு பிரிவினர் வாபஸ்; ஒரு பிரிவினர் போராட்டம்!

மூன்றாவது கட்டமாக, அமைச்சருடன் நடந்த பேச்சில், அவர் அளித்த உறுதிமொழியை
ஏற்று, போராட்டத்தை கைவிடுவதாக, பார்வையற்ற கல்லூரி மாணவர் மற்றும் பட்டதாரிகள்
சங்கத்தினர் அறிவித்தனர். ஆனால், அனைத்து மாற்றுத்திறனாளிகளின் ஆசிரியர் கூட்டமைப்பு,
'கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டம் தொடரும்' என, அறிவித்துள்ளது. ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற கல்லூரி மாணவர் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர், நேற்று, 10வது நாளாக, போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாற்றுத் திறனாளிகளின் ஆசிரியர்
கூட்டமைப்பு சார்பில், இரண்டாவது நாளாக, நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சமூக நலத்துறைஅமைச்சர் வளர்மதியை, பார்வையற்ற கல்லூரி மாணவர் மற்றும் பட்டதாரிகள் சங்க நிர்வாகிகள், இம்மாதம், 11 மற்றும்16ம் தேதி சந்தித்து, பேச்சு நடத்தினர். ஆனால், தீர்வு எட்டப்படவில்லை. நேற்று, மூன்றாவது முறையாக,அமைச்சரை சந்தித்து பேசினர். அதேபோல், மாற்றுத் திறனாளிகளின் ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகளும்,அமைச்சரை சந்தித்து பேசினர். அப்போது, அவர்களின் கோரிக்கையை, அரசு பரிசீலித்து வருவதாகவும், போராட்டத்தை கைவிடும்படியும், அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று, கல்லூரி மாணவர் மற்றும்பட்டதாரிகள் சங்கத்தினர், போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால், அனைத்து மாற்றுத்திறனாளிகளின் ஆசிரியர்
கூட்டமைப்பு நிர்வாகிகள், கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக