கோடை விடுமுறை குழந்தைகளுடைய சுதந்திர காலம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஏப்ரல் வரை தினமும் முழுமையான தூக்க மில்லாமல் அவசரகோலத்தில் எழுந்து பாதி வயிற்றை மட்டுமே நிரப்பிக்கொண்டு பள்ளிக்கூடங் களுக்கு சென்று பாடங்கள், தேர்வு, டியூஷன், வீட்டுப்பாடம் என வீடு முதல் பள்ளிவரை குழந்தைகள் ஓய்வின்றி உள்ளனர்.

இந்த குழந்தைகளுடைய மூளைக்கு சற்று ஓய்வு கொடுக்கக்கூடியதுதான் இந்த கோடை விடுமுறை.

ஆனால், பெரும்பாலான பெற் றோர்கள் கோடை பயிற்சி, அடுத்த கல்வியாண்டுக்கு முன் தயாரிப்பு என மீண்டும் குழந்தைகளுடைய சுதந்திரத்தை பறித்துக்கொள்கின்றனர்.

அதனால், குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகி அவர் களின் மூளை நரம்பு செல்கள் பாதிப்படையும் அபாயம் ஏற்படும். அத்துடன் நினைவாற்றல், கற்றல் திறன் குறையும் என திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக் கழக கல்வியியல் துறை பேராசிரியர் ஜாகீதா பேகம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர்  கூறியதாவது: ''மூளைக்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை தரக்கூடிய அறிவார்ந்த பாடங் களைப் படித்து குழந்தைகள் சலிப் படைந்திருப்பர். கோடை விடுமுறை குழந்தைகள் மூளையை புத்து ணர்ச்சி செய்ய உதவுகிறது. மூளையில் `நார் எபி நெப்ரின்' எனும் வேதிப்பொருளை அதிகளவு சுரக்கச் செய்து மனதையும், உடலை யும் உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

எனவே கோடை விடுமுறையில் குழந்தைகளை சுற்றுலா, சமூக நிகழ்வுகள், உறவினர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே மூளையின் அறிவுத்திறன் அதிகரிக்கும் என்பது அறிவாற்றல் அறிவியலின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளை இந்த கோடை விடுமுறையில்கூட சுறுசுறுப்பாகவும், சுதந்திரமாகவும் இருக்க விடுவதே இல்லை.

கோடை விடுமுறையில்கூட ஸ்போக்கன் இங்கிலீஸ், இந்தி, அபாகஸ், கிராமர், கம்ப்யூட்டர் கல்வி என ஏதாவது ஒரு பயிற்சி வகுப்புக்கு அனுப்பிவிடுகின்றனர். அதனால், குழந்தைகள் மன அழுத் தத்துக்கு ஆளாகி மூளையில் `கார்டிசால்' என்னும் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. கார்டிசால் அதிகமாக சுரக்கும்போது மூளையி லுள்ள `ஹிப்போ கேம்பஸ்' எனும் பகுதியில் உள்ள நரம்பு செல்கள் அழியும் ஆபத்து உள் ளது. இதனால், குழந்தைகள் நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன்கள் குறைகின்றன.

குழந்தைகளுக்கு `கரிகுலர்' (பள்ளிப்பாடங்கள்), `கோ கரிகுலர்' (வரைதல், இசை) மற்றும் `எக்ஸ்ட்ரா கரிகுலர்' ( விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு) ஆகிய 3 பயிற்சிகளை சமச்சீராக வழங்க வேண்டும். ஆனால் பள்ளிகள், பெற்றோர்கள் பெரும்பாலும் பாடங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

விளையாட்டு, பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. குழந்தைகள், அவர்களுக்கு விருப் பமான பணிகளில் ஈடுபடும்போது `என்டார்பின்' என்ற ரசாயனம் உடலில் அதிகமாக சுரக்கிறது. இதிலிலுள்ள `ஒடியேட் பெப்டைட்' வலி நிவாரணிபோல் குழந்தைகளுக்கு மூளையை சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.

கோடை விடுமுறையை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கழிக்கும் போது `என்டார்பின்' உடலில் அதிகரிக்கும். இந்த விடுமுறையிலாவது பெற்றோர் குழந்தை களுடைய இந்த விருப்பத் துக்கு (விளையாட்டு, பொழுது போக்கு) முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்'' என்றார்.

பெற்றோரே குழந்தைகளின் பெருமூளை

மூளையின் செயல்பாடுகளை 4 பகுதிகளாக பிரிக்கலாம். இவை தலையின் முன்பகுதியான `ப்ரைட்டல் லோப்', உச்சந்தலையில் காதையொட்டி உள்ள `டெம்போரல் லோப்', பின்னந்தலையில் அமைந்துள்ள `ஆசிப்பிட்டல் லோப்' மற்றும் நெற்றியில் அமைந்திருக்கும் `ப்ராண்டல் லோப்'.

ப்ரைட்டல் லோப் பகுதியானது நண்பர்களுடன் சேர்ந்து இருப்பது, உறவினர்களை சந்திப்பது, விளையாடுவது உற்சாகத்தை தரும். நல்ல ஹார்மோன்கள் சுரந்து மூளையின் பகுதிகள் சிறப்பாக இயங்க உதவும். ப்ராண்டல் லோபுக்கு பாடங்களை படிப்பது, அறிவுப்பூர்வமாக சிந்திப்பது, சிக்கலான நேரத்தில் முடிவு எடுப்பது பிடிக்கும். பார்க்கும் விஷயங்கள், கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள் புத்துணர்வு அளிக்கும் விதமாக இருந்தால் ஆக்சிபிட்டல் லோபுக்கு பிடிக்கும்.

செவி வழியாக கேட்கும் சக்தியை அதிகரிக்கச் செய்வது, கேட்ட செய்தி, தகவல்களை உடனுக்குடன் பரிசீலனை செய்வது, நினைவுபடுத்துவது டெம்போரல் லோப் பணியாகும். மூளையின் இந்த 4 பகுதிகளும் சமச்சீராக செயல்பட்டால்தான் குழந்தைகள் சுறுசுறுப்பாக செயல்படுவர்.